ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 11–9–17

10 அக்டோபர் 2017, 11:53 PM

என் வாக்கு பலித்தது!

(சென்ற வார தொடர்ச்சி...)

கவி­ஞர்­க­ளின் வாக்கு பலிக்­கும் என்­பார்­கள். கவி­ஞன் சொல் வெல்­லும், கொல்­லும் என்று சொல்­வ­துண்டு. கவி­ஞர் கண்­ண­தா­சன், கவி­ஞர் வாலி­யு­ட­னான அந்த வாக்கு பலி­தம் சம்­ப­வங்­களை நினை­வு­கூர்­கி­றார் இளை­ய­ராஜா.

கவி­ஞர் கண்­ண­தா­ச­னின் வாக்கு பலி­தம் என்­பது சினிமா வட்­டா­ரத்­தில் பிர­சித்­தம். ஒரு தடவை கவி­ஞ­ருக்­கும் நரசு ஸ்டூடி­யோ­விற்­கும் ஒரு சின்ன பிரச்னை. அந்த பிரச்னை வாய் தக­ரா­றா­கி­யது. அது கவி­ஞ­ருக்கு பெரிய வருத்­தத்தை உண்­டாக்­கி­யது. அவர் மனம் நொந்து ''என் வயிறு எரி­வது போல உன் ஸ்டூடி­யோ­வும் எரி­யட்­டும்'' என்று சொல்­லி­விட்டு கிளம்­பி­விட்­டார்.

கவி­ஞர் வீட்­டிற்­குள் நுழைந்­த­துமே அந்த செய்தி வந்­தது. நரசு ஸ்டூடி­யோ­வின் ஒரு புளோர் தீப்­பற்றி எரி­கி­றது என்று. பிறகு, நான் அப்­படி சாபம் கொடுத்­தி­ருக்­கக்­கூ­டாது என்று கவி­ஞர் வருத்­தப்­பட்­டார். என் வாக்­கும் சில நேரங்­க­ளில் பலித்­து­வி­டும். அத­னால்­தான் கூடு­மா­ன­வரை நான் கோபத்தை கட்­டுப்­ப­டுத்­திக் கொள்­வேன்.

என் வாக்கு பலி­தத்­திற்கு ஒரு சின்ன சம்­ப­வம் சொல்­கி­றேன். அப்­போது வாலி அண்­ணன் எழு­திய பாடல் ரிக்­கார்­டிங் ஆனது. அண்­ணன் என்­னி­டம், ''ராஜா, நான் சினி­மா­வுக்கு பாட்­டெ­ழுத வந்து ௩௦ வரு­ட­மாகி விட்­டது. என் முதல் பாடலை பி. சுசீலா பாடி­னார். இந்த பாட­லை­யும் அவ­ரையே வைத்து பாட வையேன்'' என்று சொன்­னார். நானும் சரி என்று பி. சுசீ­லாவை பாட வைத்து ரிக்­கார்­டிங் சீக்­கி­ர­மா­கவே முடிந்து விட்­டது.

எனக்கு கார் வர லேட்­டா­கி­ய­தால், நான் வாலியை பார்த்து ''அண்ணா! நீங்க கிளம்­புங்க, கார் வந்­த­தும் நான் கிளம்­பு­றேன்.'' என்­றேன். ''ஏன் ராஜா என் வண்­டி­யி­லேயே வா, உன்னை வீட்ல டிராப் பண்­ணிட்டு போறேன்'' என்­றார்.

''அண்ணா, வேண்­டாம்ண்ணா வழி­யில ஏதா­வது ஒண்ணு ஆயிட்டா அப்­பு­றம் தர்ம சங்­க­ட­மா­கி­வி­டும்'' என்­றேன். அதற்கு அவர், ''அட போய்யா, உன்னை மாதிரி ஆளை நான் ஏத்­திக்­கிட்டு கன்னா பின்­னான்னு வண்டி ஓட்­டு­வேன். ஏறி உட்­காரு'' என்று சொன்­னார். கார் புறப்­பட்டு போய் கொண்­டி­ருந்­தது. வாலி, சில கோயில்­க­ளக்கு போய் வந்த சம்­ப­வங்­களை சொல்­லிக் கொண்டே வண்டி ஓட்­டிக் கொண்­டி­ருந்­த­வர், திடீ­ரென்று கத்த ஆரம்­பித்து விட்­டார். நான் என்ன, ஏது என்று கேட்­ட­போ­து­தான் கார் பிரேக் பிடிக்­க­வில்லை என்­பதை சொன்­னார். கோடம்­பாக்­கம் மேம்­பா­லத்­திற்கு முன்­னாடி ஒரு சினிமா அவுட்­டோர் வண்டி மீது டமார் என்று கார் மோதி­யது. அந்த வண்­டி­யி­லி­ருந்­த­வர்­கள் கோபத்­து­டன் எங்­கள் காரை நோக்கி வந்­தார்­கள். வந்­த­வர் என்னை பார்த்­து­விட்டு, ஏய் ராஜா சாரு என்­ற­வாறு எது­வும் சொல்­லா­மல் கிளம்பி விட்­டார்­கள்.

வாலி சார் காரை ஓர­மாக தள்­ளி­விட்டு நின்ற போது என்னை பார்த்து அவர் ''யோவ் ராஜா, என்­னய்யா உம் வாக்கு? கார்ல ஏற­துக்கு முன்­னா­டியே ஏதா­வது ஆயிட்­டான்னு சொன்னே, அப்­ப­டியே நடந்­தி­டுச்சு'' என்­றார்.

-– தொடரும்