தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள் !

பதிவு செய்த நாள் : 07 அக்டோபர் 2017
ஒடிசா மாநில சட்­ட­சபை தேர்­தல், லோக்­சபா தேர்­த­லு­டன் நடை­பெற உள்­ளது. 2019ல் பொதுத் தேர்­த­லு­டன் சட்­ட­சபை தேர்­தல் நடை­பெற கால அவ­கா­சம் இருப்­பி­னும், ஒவ்­வொரு கட்­சி­யும் இப்­போதே தேர்­த­லுக்­கான தயா­ரிப்பு பணி­களை செய்­கின்­றன. ஒடிசா சட்­ட­ச­பை­யில் மொத்­தம் 147 இடங்­கள் உள்­ளன. இதில் 120 இடங்­க­ளுக்கு மேல் கைப்­பற்ற பா.ஜ., திட்­ட­மிட்­டுள்­ளது. ஆளும் கட்­சி­யான நவீன் பட்­நா­யக் தலை­மை­யி­லான பிஜூ ஜனதா தளம் 123 இடங்­களை குறி­வைத்து காய்­களை நகர்த்தி வரு­கி­றது. 1990ல் தற்­போ­தைய முதல்­வர் நவீன் பட்­நா­யக்­கின் தந்தை பிஜூ பட்­நா­யக் 123 இடங்­க­ளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்­தார். முக்­கிய எதிர்­கட்­சி­யான காங்­கி­ரஸ் 85 இடங்­களை திட்­ட­மிட்­டுள்­ளது. மற்ற கட்­சி­களை விட குறைவு என்­றா­லும், மொத்த இடங்­க­ளில் பாதிக்­கும் அதி­கம்.

ஒடி­சா­வின் அண்டை மாநி­ல­மான பீகா­ரில், ஐக்­கிய ஜனதா தளத்­து­டன் கூட்டு சேர்ந்து ஆட்­சி­யில் பா.ஜ., பங்­கேற்­றுள்­ளது. ஒடிசா மாநி­லத்­தை­யும் குறி வைத்து பணி­யில் இறங்­கி­யுள்­ளது. ஜில்லா பரி­ஷத் தேர்­த­லில் முக்­கிய எதிர்­கட்­சி­யான காங்­கி­ரசை மூன்­றா­வது இடத்­திற்கு தள்ளி விட்டு, பா.ஜ., இரண்­டா­வது இடத்­திற்கு வந்­தது. இதன் பின் கட்சி அமைப்­பு­கள் இல்­லாத பகு­தி­க­ளில் கட்­சியை அமைக்­கும் பணி­யில் தீவி­ர­மாக பா.ஜ., ஈடு­பட்­டுள்­ளது. இதற்கு ஈடு கொடுக்­கும் வித­மாக ஆளும் பிஜூ ஜனதா தள­மும் தீவி­ர­மாக களத்­தில் இறங்கி வேலை செய்­கி­றது. இரண்டு கட்­சி­க­ளும் 2000 ஆம் ஆண்டு முதல் 2009 வரை கூட்­டணி அர­சில் பங்­கேற்று இருந்­தன.

பா.ஜ. தேசிய தலை­வர் அமித் ஷா, செப்­டம்­பர் 6ம் தேதி முதல் மூன்று நாட்­கள் ஒடிசா மாநி­லத்­திற்கு பய­ணம் மேற்­கொண்­டார். அப்­போது எனது வாக்­கு­சா­வடி பல­மாக உள்­ளது என்ற பிர­சா­ரத்தை தொடங்கி வைத்­தார். இதன்­படி மாநி­லத்­தில் உள்ள 36 ஆயி­ரம் வாக்­கு­சா­வ­டி­க­ளி­லும் கட்­சியை பலப்­ப­டுத்­தும் திட்­டம் தொடங்கி வைக்­கப்­பட்­டது. இந்த திட்­டம் பற்றி பா.ஜ., செய்தி தொடர்­பா­ளர் சாஜன் சர்மா, “ ஒவ்­வொரு வாக்கு சாவ­டி­யி­லும் குறைந்­தது நான்கு கட்சி தொண்­டர்­கள் கட்சி வேலை­களை செய்­கின்­ற­னர். வாக்கு சாவடி மட்­டத்­தில் வேலை செய்­வது வெற்றி பெற உத­வும்” என்று அவர் தெரி­வித்­தார். அமித் ஷா ஒடிசா மாநி­லத்­தில் பய­ணம் மேற்­கொண்ட செப்­டம்­பர் 6ம் தேதி முதல்­வர் நவீன் பட்­நா­யக் ஆதி­வா­சி­கள் பெரும்­பான்­மை­யாக வாழும் கோரா­பட், மயூர்­பஞ்ச் ஆகிய மாவட்­டங்­க­ளில் மருத்­துவ கல்­லூ­ரி­களை திறந்து வைத்­தார்.

2012ல் 36 ஜில்லா பரி­ஷத்­தில் வெற்றி பெற்று இருந்த பா.ஜ., சமீ­பத்­தில் நடை­பெற்ற தேர்­த­லில் 297 ஜில்லா பரி­ஷத்­தில் வெற்றி பெற்­றுள்­ளது. இது ஆளும் பிஜூ ஜனதா தள கட்­சிக்கு சவா­லாக உள்­ளது. தற்­போது ஆளும் பிஜூ ஜனதா தளம் மொத்த முள்ள 307 பிளாக் சேர்­மன் தேர்­த­லில் 220 இடங்­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது. காங்­கி­ரஸ் 45, பா.ஜ.,28 பிளாக் சேர்­மன் தேர்­த­லில் வெற்றி பெற்­றுள்­ளன உள்­ளாட்சி தேர்­தல் முடிந்த உட­னேயே பிஜூ ஜனதா தள தலை­வர்­க­ளும் முக்­கிய நிர்­வா­கி­க­ளும் மேற்கு, வடக்கு பிர­தே­சங்­க­ளில் தோல்­விக்கு கார­ணம் என்ன என்­பது பற்றி பரி­சீ­லனை செய்­த­னர். நவீன் பட்­நா­யக் கீழ் மட்ட தொண்­டர்­களை சந்­தித்து தோல்­விக்­கான கார­ணம் பற்றி ஆலோ­சனை நடத்­தி­னார். எப்­போ­தும் நவீன் பட்­நா­யக் அதி­கா­ரி­கள் கூறு­வ­தையே கேட்­பார். கட்­சி­யின் அடி­மட்ட தொண்­டர்­களை அணு­கி­ய­தில்லை. தற்­போது இந்த அணு­கு­மு­றை­யில் மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளது. கீழ் மட்ட தொண்­டர்­க­ளி­டம் ஆலோ­சனை நடத்­தி­னார். இந்த கட்சி ஆலோ­ச­னைக்கு பிறகு, முதல்­வர் நவீன் பட்­நா­யக் அமைச்­ச­ர­வை­யில் பெரிய அளவு மாற்­றங்­களை செய்­தார். 10 அமைச்­சர்­களை நீக்­கி­னார். புதி­தாக 12 புதிய அமைச்­சர்­களை நிய­மித்­தார். அதே நேரத்­தில் ஆளும் பிஜூ ஜனதா தளம், “நமது கிரா­மம்–­­ந­மது வளர்ச்சி” என்ற திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. இதன்­படி வரும் தேர்­தலை எதிர் கொள்­ளும் விதத்­தில் பிளாக் மட்­டத்­தில் கட்சி தொண்­டர்­க­ளுக்கு பயிற்சி அளிக்­கப்­ப­டு­கி­றது. பா.ஜ.. வாக்கு சாவ­டி­யில் கவ­னம் செலுத்­தி­னால், பிஜூ ஜனதா தளம் வார்­டு­க­ளில் கவ­னம் செலுத்­து­கி­றது. பொது­வாக நான்கு வார்­டு­கள் ஒரு வாக்­கு­சா­வ­ச­டி­யில் அடங்­கும். இந்த பிர­சார திட்­டம் பற்றி ராஜ்­ய­சபா எம்.பி பிர­சாத் கேசரி தேப் கூறு­கை­யில், “ மக்­களை சந்­திக்­கும் பெரிய அள­வில் திட்­டம் நடை­முறை படுத்­தப்­பட்­டுள்­ளது. இதன்­படி கட்சி தொண்­டர்­கள் ஒவ்­வொரு வீட்­டி­லும் தொடர்பு கொண்டு ஆத­ரவு திரட்­டி­யுள்­ள­னர்” என்று தெரி­வித்­தார்.

இந்த திட்­டம் பிஜூ ஜனதா தள தொண்­டர்­கள் மத்­தி­யில் புத்­தெ­ழுச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. சமீ­பத்­தில் நூபடா மாவட்­டத்­தில் ஜில்லா பரி­ஷத் உறுப்­பி­னர் இடைத் தேர்­தல் நடை­பெற்­றது. இதே போல் தியோ­கர்க் மாவட்­டத்­தில் இரண்டு நக­ராட்சி உறுப்­பி­னர்­க­ளுக்­கும் இடைத் தேர்­தல் நடை­பெற்­றது. இவற்­றில் ஆளும் பிஜூ ஜனதா தளத்­தைச் சேர்ந்­த­வர்­கள் வெற்றி பெற்­றுள்­ள­னர். நூபடா தொகு­தி­யின் எம்.எல்.ஏ., வாக மாநில பா.ஜ., தலை­வர் பசந்தா பாண்டா உள்­ளார். இதோ போல் தியோ­கர்க் தொகுதி எம்.எல்.ஏ., வாக பா.ஜ.,வைச் சேர்ந்த நிதிஷ் கங்­கா­தீப் உள்­ளார். நூபடா ஜில்லா பரி­ஷத் இடைத் தேர்­த­லில் காங்­கி­ரஸ் இரண்­டாம் இடத்­தி­லும், பா.ஜ., முன்­றா­வது இடத்­தி­லும் வந்­துள்­ளன.

2000ம் ஆண்டு நடை­பெற்ற சட்­ட­சபை தேர்­த­லில் பிஜூ ஜனதா தள­மும், பா.ஜ.,வும் கூட்­டணி அமைத்து போட்­டி­யிட்­டன. ஆட்­சி­யில் இருந்த காங்­கி­ரஸ் தோல்வி அடைந்­தது. காங்­கி­ரஸ் பலம் 80 இடங்­க­ளில் இருந்து 26 ஆக சரிந்­தது. பிஜூ ஜனதா தளம் 68 தொகு­தி­க­ளி­லும், பா.ஜ.,38 தொகு­தி­க­ளி­லும் வெற்றி பெற்­றன. நான்கு வரு­டங்­கள் கழித்து லோக்­சபா தேர்­த­லு­டன், சட்­ட­சபை தேர்­த­லை­யும் நடத்த நவீன் பட்­நா­யக் முடிவு செய்­தார். அப்­போது மத்­தி­யில் ஆட்­சி­யில் இருந்த பா.ஜ., தோல்வி அடைந்­தது. ஆனால் ஒடி­சா­வில் பிஜூ ஜனதா தளம், பா.ஜ.,கூட்­டணி வெற்றி பெற்­றன. பிஜூ ஜனதா தளம்61 தொகு­தி­கள், பா.ஜ.,32 தொகு­தி­க­ளி­லும் மொத்­தம் 93 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்­தன. காங்­கி­ரஸ் 38 தொகு­தி­ க­ளில் வெற்றி பெற்­றது.  பா.ஜ.,.வுட­னான கூட்­ட­ணியை நவீன் பட்­நா­யக்­கின் தலை­மை­யி­லான பிஜூ ஜனதா தளம் முறித்­துக் கொண்­டது. 2009ல் நடை­பெற்ற தேர்­த­லில் பிஜூ ஜனதா தளம் 103 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றது. காங்­கி­ரஸ் 27 தொகு­தி­க­ளி­லும், பா.ஜ., 6 தொகு­தி­க­ளி­லும் வெற்றி பெற்­றன. 2014ல் நடை­பெற்ற தேர்­த­லில் ஆளும் பிஜூ ஜனதா தளம் 117 தொகு­தி­க­ளி­லும், காங்­கி­ரஸ் 16, பா.ஜ., 10 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றன. சட்­ட­சபை தேர்­த­லில் மட்­டு­மல்­லாது லோக்­சபா தேர்­த­லி­லும் பிஜூ ஜனதா தளம் அதிக அளவு வெற்றி பெற்று வந்­துள்­ளது. 2004ல் 11 லோக்­சபா தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றது. இது 2009ல் 14 ஆக­வும், 2014ல் 20 தொகு­தி­யா­க­வும் அதி­க­ரித்­தது. ஒடி­சா­வில் மொத்­தம் 21 லோக்­சபா இடங்­கள் உள்­ளன. அதே நேரத்­தில் காங்­கி­ரஸ், பா.ஜ., ஆகிய இரண்டு தேசிய கட்­சி­க­ளும் தோல்­வியை தழு­வின. 2004ல் இரண்டு லோக்­சபா தொகு­தி­க­ளில் காங்­கி­ரஸ் வெற்றி பெற்று இருந்­தது. இது 2009ல் 6 ஆக அதி­க­ரித்­தது. ஆனால் அதற்கு அடுத்து 2014 தேர்­த­லில் ஒரு தொகு­தி­யி­லும் வெற்றி பெற­வில்லை. இதே போல் பார­திய ஜனதா 2004ல் 6 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்று இருந்­தது. 2009ல் ஒரு தொகு­தி­யி­லும் வெற்றி பெற­வில்லை. 2014ல் ஒரு தொகு­தி­யில் மட்­டும் வெற்றி பெற்­றது.

ஒடிசா மக்­கள் மத்­தி­யில் செல்­வாக்கு இருப்­ப­தால், பா.ஜ., இது வரை நவீன் பட்­நா­யக் மீது பெரிய அளவு தாக்­கு­தல் நடத்­த­வில்லை. அவர் பார்­லி­மென்­டி­லும், வெளி­யி­லும் காங்­கி­ரஸ், பா.ஜ., ஆகிய இரண்டு கட்­சி­க­ளை­யும் சம தூரத்­தில் வைத்­துள்­ளார். உள்­ளூர் தலை­வர்­கள் நவீன் பட்­நா­யக்­கின் ஊழல் மிகுந்த ஆட்சி, நிர்­வாக திறமை இல்­லா­வர் என்று தாக்­கு­தல் தொடுத்­தா­லும், மத்­திய தலைமை அவரை சீண்டி பார்க்­க­வில்லை. பா.ஜ.,வின்  வளர்ச்சி காங்­கி­ரஸ் கட்­சியை மட்­டுமே பாதிக்­கும் என்று பிஜூ ஜனதா தளம் கரு­தி­யது. ஜில்லா பரி­ஷத் தேர்­த­லின் முடி­வு­க­ளுக்கு பிறகு தான், பா.ஜ.,வின் வளர்ச்சி, தங்­கள் கட்­சியை கடு­மை­யாக பாதிக்­கும் என்று பிஜூ ஜனதா தளம் உணர்ந்­தது.

நவீன் பட்­நா­யக்­கி­டம் 17 வரு­டங்­களுக்கு முன் ஆட்­சியை இழந்த காங்­கி­ரஸ், இது வரை மீண்டு வர­வில்லை. பிர­தான எதிர்­கட்­சி­யாக இருந்­தா­லும் கூட, அர­சுக்கு எதி­ராக தீவி­ர­மாக செயல்­ப­ட­வில்லை. 2011ல் மாநில முன்­னாள் அமைச்­ச­ரான நிரஞ்­சன் பட்­நா­யக் என்­ப­வரை மாநில தலை­வ­ராக காங்­கி­ரஸ் நிய­மித்­தது. இவ­ரது சகோ­த­ரர் செள­மியா ரஞ்­சன் பட்­நா­யக்­கின் தின­சரி பத்­தி­ரிக்­கை­யான சம்­பக், டி.வி சான­லான கனாக் டிவி., ஆகி­ய­வற்­றால் காங்­கி­ரஸ் தலை­வர் நிரஞ்­சன் பட்­நா­யக்­கிற்­கும், கட்­சிக்­கும் விளம்­ப­ரம் கிடைத்­தது. இவ­ரது செல்­வாக்­கும் அதி­க­ரித்­தது. மூன்று வரு­டங்­கள் கழித்து காங்­கி­ரஸ் கலாச்­சா­ரப்­படி நிரஞ்­சன் பட்­நா­யக் தலை­வர் பத­வி­யில் இருந்து நீக்­கப்­பட்டு, அவ­ருக்கு கட்­சி­யின் எதி­ரி­யாக இருந்த பிர­சாத் ஹரி­சந்­தன் என்­ப­வர் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டார்.

காங்­கி­ரஸ் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்ட ஹரி­சந்­தன், நான் தனி ஆள் ஆல்ல நாங்­கள் அனை­வ­ரும் என்ற கோஷத்தை முன்­வைத்து எல்­லோ­ரை­யும் அனைத்து செல்­வ­தற்கு முயற்சி செய்­தார். ஆனால் அவ­ரால் எதிர் கோஷ்­டி­க­ளை­யும், மூத்த தலை­வர்­க­ளை­யும் ஒருங்­கி­ணைக்க முடி­ய­வில்லை. கட்­சி­யில் கோஷ்டி சண்டை தொடர்ந்­தது. இத­னால் 2014ல் நடை­பெற்ற லோக்­சபா, சட்­ட­சபை தேர்­த­லில் காங்­கி­ரஸ் வெற்றி பெற­வில்லை. மாநில தலை­வ­ராக இருக்­கும் பிர­சாத் ஹரி­சந்­தனை நீக்க வேண்­டும் என்று மூத்த தலை­வர்­கள் டில்­லிக்கு படை எடுத்­த­னர். குறிப்­பாக சட்­ட­சபை எதிர்­கட்சி தலை­வர் நர­சிங்க மிஸ்ரா உட்­பட கட்சி எம்.எல்.ஏ.,க்கள் டில்­லிக்கு படை எடுத்து மாநில தலை­வரை நீக்க வேண்­டும் என்று மத்­திய தலை­மையை வற்­பு­றுத்­தி­னார்­கள். குறிப்­பாக ராகுல் காந்­தி­யி­டம் முறை­யிட்­ட­னர். முத­லில் இந்த தலைமை மாற்ற கோரிக்­கைக்கு காங்­கி­ரஸ் தலைமை செவி­சாய்க்­க­வில்லை. ஜில்லா பரி­ஷத் தேர்­த­லில் தோல்­வியை தழு­விய பிறகு, மாநில தலைமை மாற்­றம் பற்றி சிந்­திக்க தொடங்­கி­யது. மீண்­டும் நிரஞ்­சன் பட்­நா­யக்கை தலை­வ­ராக நிய­மிக்க வாய்ப்­பு­கள் அதி­க­ரித்­தன. இவ­ருக்கு கட்சி எம்.எல்.ஏ.,க்கள், தொண்­டர்­கள் மத்­தி­யில் ஆத­ரவு அதி­க­ரித்­தது. தலை­மையை மாற்­று­வ­தால் மட்­டும் நிலைமை மாறி­வி­டுமா என்ற கேள்­வி­யும் எழு­கி­றது. பா.ஜ.,வுடன் ஒப்­பி­டு­கை­யில் காங்­கி­ரஸ் கட்­சிக்கு மாநி­லம் முழு­வ­தும் செல்­வாக்கு உள்­ளது. பா.ஜ.,வுக்கு சில பகு­தி­க­ளில் மட்­டும் செல்­வாக்கு உள்­ளது. மற்ற பகு­தி­க­ளில் கட்­சியை வளர்க்க தொடங்­கி­யுள்­ளது.

காங்­கி­ரஸ் செல்­வாக்கு குறைந்து வரும் பகு­தி­யில் கவ­னம் செலுத்­தி­னால், அடுத்த தேர்­த­லில் காங்­கி­ரஸ் அதிக இடங்­க­ளில் வெற்றி பெறு­வ­தற்கு வாய்ப்பு உள்­ளது. நிரஞ்­சன் பட்­நா­யக்­கின் சகோ­த­ர­ரின் தினசி, டி.வி சேனல் உத­வி­யு­டன் கட்­சி­யின் செல்­வாக்கை அதி­க­ரிக்க முடி­யும். ஒடி­சா­வைப் பொருத்த மட்­டில் காங்­கி­ரஸ் கட்­சியே பிர­தான எதிர்­கட்­சி­யாக இருக்க முடி­யும். பார­திய ஜனதா அல்ல என்று மாநில மூத்த காங்­கி­ரஸ் தலை­வர் கூறு­கின்­றார். ஒடிசா மாநி­லத்­தில் லோக்­சபா தேர்­த­லு­டன், சட்­ட­சபை தேர்­த­லும் நடை­பெற உள்­ளது. ஆளும் பிஜூ ஜனதா தளத்­தி­டம் இருந்து ஆட்­சியை யார் கைப்­பற்­று­வார்­கள். காங்­கி­ரஸ் கட்­சியா அல்­லது பார­திய ஜன­தாவா என்ற கேள்வி எழுந்­துள்­ளது. மூன்று கட்­சி­க­ளுமே, இப்­போ­தி­ருந்தே தேர்­தலை மன­தில் வைத்து வேலை செய்து வரு­கின்­றன. யார் ஆட்­சியை பிடிப்­பார்­கள்?

நன்றி: ஸ்கோரல் டாட் இன் இணைய­ தளத்­தில்  பிரியா ரஞ்­சன் சாகு.