ஜி.எஸ்.டி: சூரத் ஜவுளி தொழிலுக்கு நெருக்கடி

பதிவு செய்த நாள் : 07 அக்டோபர் 2017மத்­திய அரசு சரக்கு மற்­றும் சேவை வரியை அறி­மு­கப்­ப­டுத்த தயா­ரா­கிக் கொண்­டி­ருந்த போது, குஜ­ராத் மாநி­லம் சூரத் நக­ரைச் சேர்ந்த ஜவுளி உற்­பத்­தி­யா­ளர்­கள், வியா­பா­ரி­கள் பதற்­ற­ம­டைந்­த­னர். இந்­தி­யா­வின் செயற்கை இழை துணி­க­ளின் உற்­பத்தி கேந்­தி­ர­மாக கரு­தப்­ப­டு­வது சூரத் நக­ரம்.

புதிய சரக்கு மற்­றும் சேவை வரி, இந்­திய வர்த்­த­கம்,தொழிலை பாதிக்­குமா? இத­னால் பலன் உண்டா என்­ப­தில் இரு கருத்­துக்­கள் உள்­ளன. மத்­திய அரசு, இந்த வரியை யாரா­லும் ஏமாற்ற முடி­யாது என்று கூறு­கின்­றது. சிறு வியா­பா­ரி­க­ளும் கூட, இந்த வரியை செலுத்­தியே ஆக வேண்­டும், இத­னால் வரி வரு­வாய் அதி­க­ரிப்­ப­து­டன், பொரு­ளா­தார வளர்ச்சி ஏற்­ப­டும் என்று அரசு சார்­பில் கூறப்­ப­டு­கி­றது. ஆனால் சூரத் நக­ரில் உள்ள ஜவுளி உற்­பத்­தி­யா­ளர்­கள், வியா­பா­ரி­கள் இந்த வரியை கட்டி விட்டு, வியா­பா­ரத்­தில் போட்­டியை எதிர் கொண்டு தாக்கு பிடிக்க முடி­யுமா என்று கரு­து­கின்­ற­னர்.

இது போன்ற அச்­சம் தேவை­யில்லை என்று ஜி.எஸ்.டி  வரி ஆத­ர­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர். இருப்­பி­னும் ஜவுளி தொழி­லைச் சார்ந்­த­வர்­கள் பல முறை மத்­திய, மாநில அர­சு­க­ளி­டம் வரி விலக்கு அளிக்க கோரிக்கை மனு அளித்­த­னர். சூரத் நக­ரைச் சேர்ந்­த­வர்­கள் ஜூன் மாதம் மூன்­றா­வது வாரத்­தில் வேலை நிறுத்­தத்­தி­லும் ஈடு­பட்­ட­னர். ஆனால் அரசு செவி சாய்க்­க­வில்லை. போலீ­சாரை கொண்டு போராட்­டத்தை ஒடுக்­கி­யது. திட்­ட­மிட்­ட­படி ஜூலை முதல் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி அமல் படுத்­தப்­பட்­டது. புதிய வரியை அறி­மு­கப்­ப­டுத்தி இரண்டு மாதங்­கள் கடந்து விட்­டன. நிலைமை எவ்­வாறு உள்­ளது? புதிய ஜி.எஸ்.டி வரி அறி­மு­கத்­தால் பாதிப்பு உள்­ளதா? இல்­லை­யெ­னில் நிலை­மையை சமா­ளித்து விட்­ட­னரா? என்ற கேள்­வி­கள் எழு­கின்­றன.

சூரத் நக­ரைப் பொருத்த மட்­டில், இங்­குள்ள சிறு தொழிற்­சா­லை­கள் ஜவுளி உற்­பத்­தி­யில் குறிப்­பிட்ட பங்கு மட்­டுமே வகிக்­கின்­றன. சிலர் துணியை நெசவு செய்­கின்­ற­னர். சில பிரிண்ட் செய்­கின்­ற­னர். சிலர் எம்ப்­ராய்­டரி செய்­வது, தைப்­பது, சாயம் போடு­வது என ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒரு தொழி­லில் ஈடு­பட்­டுள்­ள­னர். யாருமே நூல் நூற்­ப­தில் இருந்து இறு­தி­யாக விற்­ப­னைக்கு அனுப்­பும் வரை எதை­யும் தயா­ரிப்­ப­தில்லை. ஒவ்­வொரு வருமே சிறு பங்கு வகிக்­கின்­ற­னர். வியா­பா­ரி­க­ளி­டம் இருந்து உற்­பத்­தி­யா­ளர்­கள் ஆர்­டர் பெற்று, ஜவுளி உற்­பத்­தி­யில் அவர்­கள் பங்கை செலுத்­து­கின்­ற­னர். இதில் நக­ரில் உள்ள 65 ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட வியா­பா­ரி­கள் முக்­கிய பங்கு வகிக்­கின்­ற­னர். சிறிய அள­வில் தொழில் செய்­ப­வர்­கள், வெளி­யூர்­க­ளில் இருந்து இடம் பெய­ரும் தொழி­லா­ளர்­களை வைத்­துக் கொண்டு கூலி­யில், போட்­டியை சமா­ளித்து குறைந்த கூலி­யில் செய்து கொடுக்­கின்­ற­னர்.

சூரத் நக­ரில் 10 பெரிய ஜவுளி தொழிற்­சா­லை­கள் மட்­டுமே உள்­ளன. இவை வடி­வ­மைப்­பில் இருந்து நெசவு, பிரிண்­டிங் என விற்­ப­னைக்கு அனுப்­பும் வரை தயா­ரிக்­கின்­றன. மற்­றவை எல்­லாம் சிறு தொழி­ல­கங்­களே. ஜி.எஸ்.டி வரி அறி­மு­கப்­ப­டுத்தி இரண்டு மாதங்­கள் கடந்த விட்­டன. இது சிறிய தொழி­ல­கங்­க­ளை­யும் சரி, பெரிய தொழிற்­சா­லை­க­ளை­யும் பாதித்­துள்­ளது.

ஜி.எஸ்.டி., வரி அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு முன் இங்­குள்ள ஷாப்­பிங் மால்­க­ளில் வியா­பா­ரி­கள் ஆர்­டர் பெறு­வார்­கள். ஜார்­கண்ட், உ.பி., போன்ற மாநி­லங்­க­ளில் இருந்து இடம் பெயர்ந்­துள்ள தொழி­லா­ளர்­கள் சிப்­பங்­களை கட்டி லாரி செட்­டு­க­ளில் போடு­வ­தில் மும்­மு­ர­மாக இருப்­பார்­கள். எப்­போ­தும் சூரத் நக­ரமே சுறு சுறுப்­பாக இயங்­கிக் கொண்டு இருக்­கும். ஆனால் ஜி.எஸ்.டி வரி அறி­மு­கப்­ப­டுத்­திய பின் நிலைமை தலை­கீ­ழாக மாறி விட்­டது. ஷாப்­பிங் மால்­க­ளில் கூட்­டம் இல்லை. வெளி­யூர் வியா­பா­ரி­கள் வரு­வ­தில்லை. வியா­பா­ரி­கள், சிறு தொழி­ல­கங்­கள் ஜவுளி வாங்­கு­வ­தற்கு யாரா­வது வரு­வார்­களா என்று காத்­துக் கிடக்­கின்­ற­னர். தெரு­வி­லும் வேன்­கள் நிற்­ப­தற்கு இடம் இல்­லா­மல் இருக்­கும். ஆனால் தற்­போது ஐந்து அல்­லது ஆறு வேன்­கள் மட்­டுமே நிற்­கின்­றன. சுறு சுறுப்­பாக இயங்­கிய சூரத் நகர் ஜவுளி சந்தை, வெறிச்­சோடி கிடக்­கி­றது. இந்த நிலை பற்றி ஜவுளி இளம் வியா­பாரி நிராஜ் மிட்­டல்(30) கூறு­கை­யில், “ வியா­பா­ரமே இல்லை” என்­கின்­றார். இவர் சூரத்­தி­ராக சாரீஸ் என்ற பெய­ரில் கடை வைத்­துள்­ளார். மகா­ராஷ்­டி­ரா­வைச் சேர்ந்த வியா­பா­ரி­கள், இவ­ரி­டம் சேலை வாங்­கிக் கொண்டு போய் விற்­பனை செய்து கொண்­டி­ருந்­த­னர். இப்­போது எந்த வியா­பா­ரி­யும் வரு­வ­தில்லை. முன்பு இந்த சிறு வியா­பா­ரி­கள் ரொக்­கத்­திற்கு வியா­பா­ரம் செய்து கொண்­டி­ருந்­த­னர். இப்­போது ஜி.எஸ்.டி எண் இல்லை என்­ப­தால் போலீ­சார் கொடு­மைப் படுத்­து­கின்­ற­னர். போலீ­சா­ருக்கு பயந்து கொண்டு, உள்­ளூ­ரி­லேயே வாங்கி வியா­பா­ரம் செய்ய ஆரம்­பித்­துள்­ள­னர். சூரத் நக­ரைச் சேர்ந்த பெரிய ஜவுளி மில்­கள் வேறு நக­ரங்­க­ளில் கிளை­களை வைத்­துள்­ளன. அங்கு வாங்­கிக் கொள்­கின்­ற­னர் ” என்று நிராஜ் மிட்­டல் கூறு­கின்­றார்.

ஆனால் தனது பெயரை குறிப்­பிட விரும்­பாத சேலை உற்­பத்­தி­யில் ஈடு­பட்­டுள்ள ஜவுளி ஆலை அதி­பர், “சிலர் இங்கு மொத்­த­மாக குறைந்த விலைக்கு பில் இல்­லா­மல் வாங்கி, அண்டை மாநி­லங்­க­ளில் விற்­பனை செய்­கின்­ற­னர். இங்கு போலீ­சா­ரு­டன் கூட்டு சேர்ந்து கொண்டு ரூ.150 க்கு வாங்­கும் சேலையை வேறு மாநி­லங்­க­ளில் ரூ.450 முதல் ரூ.750 வரை விற்­பனை செய்­கின்­ற­னர் என்று கூறு­கின்­றார். எப்­ப­டி­யி­ருப்­பி­னும் வியா­பா­ரம் முன்பு போல் இல்லை. கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது. சூரத் நக­ரில் தெற்கு பகு­தி­யில் பன்­டி­சாரா என்ற இடத்­தில் பழைய ஜவுளி தொழிற்­பேட்டை உள்­ளது. இங்கு உள்ள ஜவுளி நெசவு ஆலை­க­ளில் எந்த நேர­மும் தறி ஓடும் சத்­தம் கேட்­டுக் கொண்டே இருக்­கும். இங்கு தான் பாவன் தாகா (50) என்­ப­வர் எம்­பி­ராய்­டரி வேலை செய்­கின்­றார். இவர் ஆடிஐ பேஷன் என்ற பெய­ரில் சேலை­க­ளில் எம்ப்­ராய்­டரி செய்­வ­தற்கு ஆர்­டர் வாங்கி வேலை செய்து கொடுப்­பது. இவ­ருக்கு மாதத்­திற்கு ரூ.50 ஆயி­ரம் வரை வரு­மா­னம் கிடைத்­துக் கொண்டு இருந்­தது. இதில் தொழி­லா­ளர்­க­ளுக்கு கூலி போக மாதம் சரா­ச­ரி­யாக ரூ.25 ஆயி­ரம் வரை பாவன் தாகா­வுக்கு சம்­ப­ள­மாக கிடைத்­துக் கொண்டு இருந்­தது. கடந்த இரண்டு மாதங்­க­ளாக பாவன் தாகா சிக்­க­லில் மாட்­டிக் கொண்­டுள்­ளார். கம்­பெ­னி­கள் மாதா மாதம் மூன்று ஜி.எஸ்.டி படி­வங்­களை தாக்­கல் செய்ய வேண்­டி­ய­துள்­ளது.

இது என்­னைப் போன்­ற­வர்­க­ளால் சாத்­தி­ய­மில்லை. அதற்கு என மாதத்­திற்கு ரூ.5 ஆயி­ரம் முதல் ரூ.6 ஆயி­ரம் வரை செல­வ­ழிக்க முடி­யாது. பெரிய நிறு­வ­னங்­கள் ஆர்­டி­எஸ் பேஷன் தயா­ரிப்­பு­களை வாங்­கிக் கொள்­கின்­றன. அவர்­கள் 5 சத­வி­கி­தம் வரி பிடித்து கட்ட வேண்­டும். இத­னால் அவர்­கள் வரி கட்­டு­வது குறை­கின்­றது. ஆனால் அவர்­கள் 7 சத­வி­கி­தம் வரை வரிக்­காக பிடித்­தம் செய்­கின்­ற­னர். அத்­து­டன் ஆர்­டர்­க­ளும் குறைந்து விட்­டன. லாப­மும் 10 சத­வி­தத்­திற்கு மேல் கிடைப்­ப­தில்லை. முன்பு 30 முதல் 40 சத­வி­கி­தம் வரை மிச்­ச­மாகி சம்­ப­ள­மாக கிடைத்­தது. இப்­போது 10 சத­வி­கித்­திற்­கும் மேல் கிடைப்­ப­தில்லை. ரூ.ஆயி­ரம், ரூ. 500 செல்­லாது என்ற சிக்­க­லில் இருந்து மீள்­வ­தற்­குள், ஜி.எஸ்.டி வரி­யி­னால் அவ­திப்­ப­டு­கின்­றோம்” என்று பாவன் தாகா கூறி­னார். ஜி.எஸ்.டி வரி­யால் பெரிய கம்­பெ­னி­க­ளில் புதிய வாடிக்­கை­யா­ளர்­கள் சேரு­கின்­ற­னர். அதே நேரத்­தில் சிறிய கம்­பெ­னி­கள் நலி­வு­றும் நிலைக்கு தள்­ளப்­ப­டு­கின்­றன. ஜி.எஸ்.டி வரி­யால் எப்­படி போட்­டியை சந்­திக்க முடி­யா­மல் போகின்­றது என்­பதை விளக்­கு­கின்­ற­னர். உதா­ர­ண­மாக ஒரு சேலைக்கு ஜி.எஸ்.டி வரி சேலை நெய்து எல்லா வேலை­க­ளும் முடிந்த பின் போடப்­ப­டு­வ­தில்லை. ஒவ்­வொரு நிலை­யி­லும் போடப்­ப­டு­கி­றது. உதா­ர­ண­மாக பாலி­யெஸ்­டர் நூல் ரூ.ஆயி­ரத்­திற்கு வாங்கி, அதை சேலை­யாக நெய்து ரூ.1,800 க்கு விற்­பனை செய்­யும் போது, மதிப்பு கூட்­டான ரூ.800 க்கு ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்­டும். ஒரு கம்­பெனி அது கட்ட வேண்­டிய வரிக்­கும் அதி­க­மாக கட்டி இருந்­தால், அந்த பொருளை வாங்­கு­வ­ப­வர்­கள் கட்­டும் வரி­யில் அர­சி­டம் இருந்து திரும்பி வாங்­கிக் கொள்­ள­லாம்.

சூரத் நக­ரைச் சேர்ந்த ஜவுளி தொழில், வியா­பா­ரத்­தில் ஈடு­பட்­டுள்­ள­வர்­கள் தீபா­வளி முடி­யட்­டும் என்று காத்­தி­ருக்­கின்­ற­னர். வாடகை கட்­டி­டங்­க­ளில் வியா­பா­ரம் செய்து வரு­ப­வர்­கள், நீடித்து நிலைக்க முடி­யாது என்று கரு­து­கின்­ற­னர். சொந்­த­மாக கடை வைத்­தி­ருப்­ப­வர்­கள் மட்­டுமே தொடந்து தொழி­லில் ஈடு­பட முடி­யும் என்ற நிலை ஏற்­பட்­பட்­டுள்­ளது. வாடிக்­கை­யாக வருடா வரு­டம் வாடகை பத்து சத­வி­தி­கம் அதி­க­ரிக்­கும். இந்த வரு­டம் வாடகை அதி­க­ரிக்க முடி­ய­வில்லை. லீஸ் எடுத்த கடை­கள் கூட லீஸ் காலம் முடிந்த பிறகு, புதுப்­பிக்­கா­மல் உள்­ள­னர். வாட­கை­யும் சரிந்து வரு­கி­றது என்று சூரத் வியா­பா­ரி­கள் கூறு­கின்­ற­னர்.

சமீ­பத்­தில் மத்­திய நிதி அமைச்­சர் அருண் ஜெட்லி, “கம்­பெ­னி­க­ளும், மாநி­லங்­க­ளும் ஜி.எஸ்.டி.,யால் பாதிக்­கப்­ப­டு­கின்­றன என்று கூறு­வது, ஆரம்ப காலத்­தில் புதிய வரி விதிப்­புக்கு மாறு­வ­தால் ஏற்­ப­டும் பாதிப்பு, தொழில் நுட்ப கோளா­றால் ஏற்­பட்­டுள்ள பாதிப்பே என்று கூறி­யி­ருந்­தார். ஆனால் சூரத்தை பொருத்த மட்­டில் தொழில் நுட்ப கோளா­றால் பாதிப்பு ஏற்­ப­ட­வில்லை. பெரிய நிறு­வ­னங்­க­ளால் வியா­பா­ரம் செய்ய முடி­கின்­றது. சிறிய வியா­பா­ரி­க­ளால் வியா­பா­ரம் செய்ய முடி­வ­தில்லை. நாங்­கள் வால்­மார்ட் அல்­லது ராம்­தேவ் என யாரி­ட­மா­வது விற்­பனை செய்ய வேண்­டி­ய­து­தான். சூரத் நக­ரில் ஜவுளி வியா­பா­ரம் என்­பது படிப்­ப­டி­யாக அழிந்து விடும். பெரிய கம்­பெ­னி­கள் மட்­டுமே அதிக அளவு வியா­பா­ரம் செய்ய முடி­யும் என்று கூறு­கின்­றார் நிராஜ் மிட்­டல்.

இந்­தி­யா­வில் விவ­சா­யத்­திற்கு அடுத்த படி.யாக அதிக அளவு வேலை வாய்ப்பு ஜவுளி துறை­யில் கிடைக்­கின்­றது. ஆயத்த ஆடை, பின்­ன­லாடை, நெசவு என ஜவுளி துறை­யில் வேலை வாய்ப்பு வழங்­கும் நக­ரங்­க­ளில் சூரத் முக்­கிய இடம் வகிக்­கின்­றது. இங்கு உள்ள சிறு தொழிற்­சா­லை­க­ளில் வேலை செய்­யும் தொழி­லா­ளர்­க­ளில் பெரும்­பா­லோர் பின் தங்­கிய மாநி­லங்­க­ளில் இருந்து இடம் பெயர்ந்­த­வர்­கள். இப்­போது பல சிறு தொழி­ல­கங்­க­ளின் உரி­மை­யா­ளர்­கள், தங்­க­ளி­டம் வேலை பார்த்­த­வர்­களை மீண்­டும் வர வேண்­டாம் என்று கூற தொடங்­கி­யுள்­ள­னர். “என்­னி­டம் இரண்டு பேர் வேலை பார்த்­த­னர். அதில் ஒரு­வர் சொந்த ஊருக்கு போய் இருக்­கின்­றார். அவ­ரி­டம் தீபா­வளி முடி­யும் வரை திரும்ப வர வேண்­டாம் என்று கூறி­யுள்­ளேன். தற்­போது சூரத்­தில் இருந்து வேலை செய்­ப­வர்­கள் வெளி­யே­றும் அவல நிலை ஏற்­பட்­டுள்­ளது என்று கூறு­கின்­றார் சிங்­கால் என்­ப­வர்.

உத்­த­ர­பி­ர­தே­சம், ஜார்­கண்ட், பீகார், மேற்கு வங்­கம் ஆகிய மாநி­லங்­க­ளைச் சேர்ந்த தொழி­லா­ளர்­கள், சூரத் நக­ரில் தையல் வேலை போன்ற வேலை செய்து கொண்டு இருந்­த­னர். மாதத்­திற்கு ரூ.10 ஆயி­ரம் வரை சம்­ப­ளம் வாங்­கிக் கொண்டு இருந்­த­னர். தற்­போது வேலை இல்­லா­மல் போன­தால், வரு­மா­னம் இல்­லா­மல் எப்­படி இவர்­கள் குடும்­பத்தை காப்­பாற்­றப் போகின்­றார்­கள் என்று தெரி­ய­வில்லை என தொழில் அதி­பர்­கள் கவ­லைப்­ப­டு­கின்­ற­னர்.

ஜவுளி துறை­யும், விவ­சா­யம் போல் முறை­சா­ரா­தது. ஒழுங்­க­மைக்­கப்­ப­டா­தது. பலர் வங்­கி­க­ளில் கடன் வாங்க முடி­வ­தில்லை. ரொக்­கத்­திற்கு வியா­பா­ரம் செய்­கின்­ற­னர். வங்கி மூலம் பில் அனுப்­பு­வ­தில்லை. ஜி.எஸ்.டி வரி­யால் வியா­பா­ரத்தை குறிப்­பிட்ட அளவு மட்­டுமே செய்ய முடி­கி­றது. வியா­பா­ரத்­தை­யும் அபி­வி­ருத்தி செய்ய முடி­வ­தில்லை. இத­னால் தொழி­லா­ளர்­க­ளுக்கு வேலை வழங்­கு­வ­தும் குறைந்து போய் விடு­கின்­றது என்று கூறு­கின்­றார் தகால் என்­ப­வர்.

எப்­ப­டியோ புதிய ஜி.எஸ்.டி வரி­யால் குஜ­ராத் மாநி­லத்­தில் ஜவுளி கேந்­தி­ரம் என்று அழைக்­கப்­ப­டும் சூரத் நக­ரி­லேயே நெருக்­கடி, தொழி­லா­ளர்­க­ளுக்கு வேலை இழப்பு, சிறிய தொழி­ல­கங்­கள் மூடும் நிலை என பல்­வேறு பிரச்­னை­கள் தொடர்­கி­றது. இதே போல் ஜவுளி, ஆயத்த ஆடை, பின்­ன­லாடை போன்ற துறை­க­ளி­லும் நெருக்­கடி நீடிக்­கி­றது. மத்­திய, மாநில அர­சு­கள் தலை­யிட்டு, இதற்கு தீர்வு கண்டு, தொழி­லா­ளர்­களை வறு­மை­யில் தள்­ளு­வ­தற்கு முற்­றுப் புள்ளி வைக்க வேண்­டும்.

***