பசு பாதுகாப்பு: விவசாயிகள் அவதி

பதிவு செய்த நாள் : 07 அக்டோபர் 2017


ராஜஸ்­தான் மாநி­லம் சிகார் மாவட்­டத்­தைச் சேர்ந்த விவ­சாயி பிர­க­லாத் சிங். இவர்  கம்பு பயிர் செய்­துள்­ளார். இது வரை இல்­லா­மல், புதி­தாக வய­லைச் சுற்றி முள்­கம்பி வேலி போட்­டுள்­ளார். நான் முள் வேலி போடா­விட்­டால் எனது பயிரை மாடு­கள் சாப்­பிட்­டு­வி­டும். இந்த வேலிக்­கா­கவே ஆயி­ரக்­க­ணக்­கான ரூபாய் செல­வ­ழித்­துள்­ளேன். வேறு என்ன செய்ய என்று கேட்­கின்­றார்.

பசுவை மைய­மாக வைத்து அர­சி­யல் நடப்­பது சமீப காலங்­க­ளில் அதி­க­ரித்­துள்­ளது. இந்த பசு அர­சி­ய­லில் பலன் அடைந்­துள்ள கட்­சி­க­ளில் முக்­கி­ய­மா­னது பார­திய ஜனதா. தற்­போது பா.ஜ., 16 மாநி­லங்­க­ளில் ஆட்­சி­யில் உள்­ளது. பசு மத­ரீ­தி­யாக புனி­த­மா­னது மட்­டு­மல்ல. இது பொரு­ளா­தா­ரத்­தை­யும் சார்ந்­தது. பா.ஜ.,வின் பசு பாது­காப்பு இயக்­கம், கால்­நடை சந்தை பொரு­ளா­தா­ரத்தை கடு­மை­யாக பாதித்­துள்­ளது. விவ­சா­யி­கள் கால்­ந­டை­களை விற்­பனை செய்ய முடி­யா­மல் அவ­திப்­ப­டு­கின்­ற­னர். விவ­சா­யி­கள் வரு­வாய் சரிந்­துள்­ள­தால் கால்­ந­டை­க­ளுக்கு தீவ­னம் கொடுக்க முடி­யா­ம­லும், விற்­பனை செய்­ய­வும் முடி­யா­ம­லும் அநா­தை­க­ளாக விட்டு விடு­கின்­ற­னர். இந்த கால்­ந­டை­கள் தீவ­னம் கிடைக்­கா­ம­லும், யாரும் பரா­ம­ரிக்க இல்­லாத கார­ணத்­தால், வயல்­க­ளில் மேய ஆரம்­பித்து விடு­கின்­றன. இவற்­றி­டம் இருந்து பயிர்­களை பாது­காக்க விவ­சா­யி­கள் தேவை­யில்­லா­மல் செலவு செய்து முள்­வேலி போடு­கின்­ற­னர்.

பசு பாது­காப்பு என்ற பெய­ரில், தங்­களை தாங்­களே பசு காவ­லர்­க­ளாக நிய­மித்­துக் கொண்­ட­வர்­க­ளால் கால்­நடை பொரு­ளா­தா­ரமே கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. விவ­சா­யி­க­ளின் வரு­வாய் கடு­மை­யாக சரிந்­துள்­ளது. பல நாட்­கள் பொருத்து இருந்த விவ­சா­யி­கள் சிகார் மாவட்­டத்­தில் சமீ­பத்­தில் வீறு கொண்டு எழுந்­துள்­ள­னர். அகில இந்­திய விவ­சா­யி­கள் சங்­கம் போராட்ட அழைப்பு விடுத்­துள்­ளது. செப்­டம்­பர் முதல் தேதி முதல்சிகார் நக­ரில் உள்ள விவ­சாய விளை­பொ­ரு­ட­கள் விற்­பனை கமிட்டி அலு­வ­ல­கத்­தின் முன் பெருந்­தி­ர­ளான விவ­சா­யி­கள் திரண்­ட­னர். இந்த மாவட்­டத்­தில் முக்­கி­ய­மான சாலை­க­ளில் ரோட்­டின் குறுக்கே தடுப்பு ஏற்­ப­டுத்தி போரா­டி­னார்­கள். இத­னால் மாவட்­டத்­த­தில் இயல்­பு­நிலை பாதிக்­கப்­பட்­டது. வரு­வாய் சரிவை தடுத்து நிறுத்து, கடன் தள்­ளு­படி, விளை­பொ­ரு­ளுக்கு கட்­டுப்­ப­டி­யான விலை, ராஜஸ்­தான் மாநி­லத்­தில் கால்­நடை இறைச்­சிக்­காக விற்­பனை செய்­வ­தற்கு உள்ள தடையை நீக்கு என வலி­யு­றுத்தி விவ­சா­யி­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். விவ­சா­யி­கள் தொடர்ந்து 13 நாட்­கள் போரா­டிய பிறகு, வசுந்­தரா ராஜே தலை­மை­யி­லான ராஜஸ்­தான் மாநில அரசு விவ­சா­யி­க­ளு­டன் பேச்சு வார்த்தை நடத்த முன்­வந்­தது.  

கால்­ந­டை­கள் என்­பது விவ­சா­யி­க­ளின் ஏ.எடி.எம் போல். விவ­சா­யிக்கு எந்த நிமி­டம் பணம் தேவைப்­ப­டு­கின்­றதோ, அப்­போது பசு, எருது, ஆடு போன்­ற­வை­களை விற்­பனை செய்து பணம் பெற­லாம் என்று கூறு­கின்­றார் ஆம்ரா ராம். மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி சார்­பில் மூன்று முறை எம்.எல்.ஏ., ஆக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர் ஆம்ரா ராம். இவர் தற்­போது அகில இந்­திய விவ­சா­யி­கள் சங்க தலை­வ­வ­ராக உள்­ளார். விவ­சா­யி­க­ளின் வாழ்க்­கை­யில் கால்­ந­டை­கள் எவ்­வ­ளவு முக்­கி­ய­மா­னது என்­பதை ஆம்ரா ராம் விளக்­கு­கை­யில், “விவ­சா­யி­க­ளின் வரு­வா­யில் 30 சத­வி­கி­தம் பால், கால்­ந­டை­களை விற்­பனை செய்­வ­தன் மூலம் கிடைக்­கின்­றது. முத­லில் பண மதிப்பு இழப்பு விவ­சா­யி­களை கடு­மை­யாக பாதித்­தது. இதில் இருந்தே விவ­சா­யி­கள் மீண்­டு­வ­ர­வில்லை. நீங்­கள் கால்­நடை விற்­பனை சந்­தையை சீர்­கு­லைத்­தீர்­க­ளா­னால், விவ­சா­யி­கள் ஒரு நாளும் மீண்­டு­வ­ரவே முடி­யாது” என்று அவர் தெரி­வித்­தார்.

வறட்சி மிகுந்த ஜன நெருக்­கம் குறை­வாக உள்ள ராஜஸ்­தான் மாநி­லத்­தில் கால்­நடை வளர்ப்பு தொழில் மிக முக்­கி­ய­மா­னது. 2012ல் அகில இந்­திய அள­வில் எடுக்­கப்­பட்ட 19வது கால்­நடை கணக்­கெ­டுப்­பில் இந்­தி­யா­வி­லேயே அதிக எண்­ணிக்­கை­யில் கால்­ந­டை­கள் உள்ள மாநி­லங்­க­ளில் ராஜஸ்­தான் இரண்­டாம் இடத்­தில் இருந்­தது. 2003–2007 இடைப்­பட்ட காலத்­தில் இந்த மாநி­லத்­தில் கால்­நடை வளர்ச்சி விகி­தம்15.3 சத­வி­கி­த­மாக இருந்­தது. இது 2007–12ம் ஆண்­டில் 1.9 சத­வி­கி­த­மாக சரிந்­து­விட்­டது.

பசு பாது­காப்பு என்­பது எப்­போது தொடங்­கி­யது? 1995ல் ராஜஸ்­தா­னில் ஆட்­சி­யில் இருந்த பா.ஜ., அரசு பசு வதை சட்­டத்தை இயற்­றி­யது. இந்த சட்­டப்­படி குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர், அவரே குற்­றம் செய்­ய­வில்லை என்று நிரூ­பிக்க வேண்­டும். அரசு அல்­லது போலீஸ் தரப்­பில் குற்­றம் நிரூ­பிக்­கப்­ப­டாது. இந்த சட்­டத்தை இயற்­றி­யது மட்­டு­மல்­லா­மல், பா.ஜ..அரசு பசு நலத்­திற்­காக என தனி அமைச்­ச­க­ரத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­யது என்று விளக்­கு­கின்­றார் பாடர் கிரா­மத்­தைச் சேர்ந்த விவ­சாய சங்க முக்­கிய நிர்­வா­கி­யான பக­வான் பகா­ரியா. இவர் மேலும் கூறு­கை­யில், “முன்பு விவ­சா­யி­கள் காளை கன்று பிறந்­தால் மகிழ்ச்­சி­யில் துள்ளி குதிப்­பார்­கள். அவர்­க­ளது குடும்­பத்­தா­ரும் மகிழ்­வார்­கள். ஏனெ­னில் இதை ரூ.20 ஆயி­ரம் முதல் ரூ.30 ஆயி­ரம் வரை விற்­பனை செய்­ய­லாம். இப்­போது யாரும் காளை கன்று வாங்­கு­வ­தில்லை.

முன்பு நாகு­கூர் என்ற இடத்­தில் ஆசி­யா­வி­லேய மிகப்­பெ­ரும் கால்­நடை சந்தை நடை­பெ­றும். இப்­போது எது­வும் இல்லை என்று விளக்­கு­கின்­றார் பக­வான் பகா­ரியா.

அர­சின் சட்­டத்­தால் மட்­டும் கால்­நடை சந்தை பாதிக்­க­வில்லை. பசு பாது­கா­வ­லர்­கள் முக்­கிய பங்கு வகிக்­கின்­ற­னர். இந்த பசு பாது­கா­வ­லர்­கள் பசு, எருமை, ஏன் ஆட்டை கொண்டு போக கூட தடை விதிக்­கின்­ற­னர். விவ­சா­யி­கள் அவர்­க­ளது சொந்த கால்­ந­டை­களை கொண்டு போக கூட பசு பாது­கா­வ­லர்­கள் தடை விதிக்­கின்­ற­னர். இத­னால் கால்­நடை விற்­பனை என்­பதே இல்­லா­மல் போய்­விட்­டது. கால்­நடை வியா­பா­ரி­க­ளும் கிரா­மங்­க­ளுக்கு வரு­வதை நிறுத்­தி­விட்­ட­னர்” என்று ராசி­துப்ரா என்ற கிரா­மத்­தைச் சேர்ந்த விவ­சாயி குர்­தீப் சிங் கூறு­கின்­றார்.

பெக்ளூ கான் கதி என்ன என்று பாருங்­கள் என்று சுட்­டிக்­காட்­டும் பதா­ரர் கிரா­மத்­தைச் சேர்ந்த விவ­சாயி சுபாஷ் பகா­ரியா. சென்ற ஏப்­ரல் முதல் தேதி கால்­க­டை­கள் வளர்க்­கும் பெக்ளூ கான், பசு பாது­கா­வ­லர்­க­ளால் அடித்து கொல்­லப்­பட்­டார். பெக்ளூ கான் இறக்­கும் தரு­வா­யில் தன்னை அடித்து கொன்­ற­வர்­கள் என்று ஆறு பேரது பெயரை குறிப்­பிட்­டார். ஆனால் ராஜஸ்­தான் போலீஸ் இவர்­கள் அல்ல என்று கூறி, அனை­வ­ரை­யும் விடு­வித்­து­விட்­டது. பசு பாது­கா­வ­லர்­களை போலீ­சா­ரால் பிடிக்க முடி­ய­வில்லை என்­றால்? எப்­படி வியா­பா­ரி­கள் தங்­கள் உயிரை பண­யம் வைத்து வியா­பா­ரம் செய்­வார்­கள்? என்று கேட்­கின்­றார் சுபாஷ் பகா­ரியா.

ராஜஸ்­தான் மாநி­லத்தை ஆளும் பா.ஜ., அரசு 2015ல் கால்­ந­டை­களை ஒரு இடத்­தில் இருந்து வேறு இடத்­திற்கு கொண்டு செல்­லும் விதி­களை கடு­மை­யாக்­கி­யது. இந்த மே மாதம் மத்­திய அரசு பசு, எருது, எருமை ஆகி­ய­வற்றை இறைச்­சிக்­காக கொல்­வ­தற்கு தடை செய்­தது. இந்த மத்­திய அர­சின் தடைக்கு, இரண்டு மாதத்­திற்கு பின் சுப்­ரீம் கோர்ட் இடைக்­கால தடை விதித்­தது.

2015ல் ராஜஸ்­தான் மாநில அரசு ஒட்­ட­கம் விற்­ப­னைக்­கும் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை விதித்­தது. இந்த கட்­டுப்­பாடு ஒட்­ட­கம் வளர்ப்பு தொழிலை அடி­யோடு அழிக்­கும் வகை­யில் உள்­ளது. ராஜஸ்­தான் மாநி­லத்­தில் உள்ள புஷ்­கர் என்ற இடத்­தில் நடை­பெ­றும் புகழ்­பெற்ற ஒட்­டக சந்­தை­யில் கடந்த பத்து வரு­டங்­க­ளுக்கு முன் 40 ஆயி­ரம் ஒட்­ட­கம் வரை விற்­ப­னைக்கு கொண்டு வரப்­பட்­டன. சென்ற வரு­டம் நடை­பெற்ற ஒட்­டக சந்­தை­யில் 2.500 ஒட்­ட­கம் மட்­டுமே வந்­துள்­ளன. இந்த அளவு அர­சின் கட்­டுப்­பாட்­டால் ஒட்­டக வளர்ப்பு தொழில் சீர்­கு­லைந்­துள்­ளது.

“சில வரு­டங்­க­ளுக்கு முன் வீட்டு பின்­பு­றம் ஒட்­ட­கங்­கள் மேய்ந்து கொண்டு இருக்­கும். இவை இப்­போது எங்கே போன­தென்றே தெரி­ய­வில்லை” என்று கூறு­கின்­றார் சுபாஷ் பகா­ரியா.


ராணு­வத்­தில் இருந்து ஓய்வு பெற்­ற­வர் கிசான் சிங். இவ­ருக்கு 20 பிகா நிலம் சொந்­த­மாக உள்­ளது. பசு பாது­காப்பு சட்­டத்தை கடு­மை­யாக விமர்­சிக்­கும் கிசான் சிங், “ இந்த அர­சி­யல் வாதி­களோ அல்­லது பசு பாது­கா­வ­லர்­களோ என்­றும் கால்­ந­டை­களை கையாண்­ட­தில்லை. இந்த புதிய சட்­டத்­தால் கால்­ந­டை­களை விற்­பனை செய்ய முடி­ய­வில்லை. ஒரு பசுவை பரா­ம­ரிக்க வேண்­டும் எனில் வரு­டத்­திற்கு ரூ.50 ஆயி­ரம் தேவைப்­ப­டு­கி­றது. எப்­படி ஒரு விவ­சா­யி­யால் பசுவை பரா­ம­ரிக்க முடி­யும்? என்று கேட்­கின்­றார் கிசான் சிங்.

விவ­சா­யி­க­ளால் பசுவை விற்­பனை செய்­ய­வும் முடி­ய­வில்லை. அதை வைத்து பரா­ம­ரிக்­க­வும் இய­ல­வில்லை. அவ­னுக்கு உள்ள ஒரே வழி அநா­தை­யாக விடு­வதே. இவ்­வாறு விவ­சா­யி­கள் பரா­ம­ரிக்க முடி­யா­மல் கால்­ந­டை­கள அநா­தை­யாக விடு­கின்­ற­னர். கடு­மை­யான பசு பாது­காப்பு சட்­டத்­தால் வட இந்­தியா, மேற்கு இந்­தி­யா­வில் அநா­தை­யா­கும் கால்­ந­டை­க­ளின் எண்­ணிக்கை பல்­கிப் பெரு­கு­கி­றது. இந்த அநாதை கால்­ந­டை­க­ளின் பிரச்னை பல மாநி­லங்­க­ளில் விவா­திக்­கப்­பட்டு வரு­கி­றது. இது பற்றி மத்­திய பிரே­தச சட்­ட­ச­பை­யில் விவா­திக்­கப்­பட்­டுள்­ளது.உத்­த­ர­பி­ர­தேச அரசு செம்­டம்­பர் 15ம் தேதிக்­குள் அநா­தை­யாக திரி­யும் கால்­ந­டை­களை பிடித்து கொட்­ட­கை­யில் அடைக்க முடிவு செய்­தி­ருந்­தது. ராஜஸ்­தான், ஹரி­யானா மாநில அர­சு­கள் அநாதை கால்­களை பாது­காக்க குறிப்­பிட்ட இடத்­தில்  அடைத்து வைப்­ப­தற்கு ஆலோ­சனை நடத்தி வரு­கின்­றன. ராஜஸ்­தான் மாநி­லத்­தில் உள்ள கோட்டா நக­ரைச் சேர்ந்­த­வர்­கள், கால்­ந­டை­க­ளின் இனப்­பெ­ருக்­கத்தை கட்­டுப்­ப­டுத்த கருத்­தடை அறுவை சிகிச்சை செய்ய திட்­ட­மிட்­டுள்­ள­னர்.  

அநா­தை­யாக விடப்­ப­டும் பசு, எருது போன்­ற­வை­க­ளின் பிரச்னை தீர்க்க முடி­யாத அளவு போய் கொண்­டுள்­ளது. இவற்­றால் விபத்து, உயிர்­ப­லி­யும் தொடங்­கி­யுள்­ளது. குஜ­ராத் மாநி­லத்­தில் சுரத் நக­ரில் அநாதை பசு, எருது போன்­ற­வை­க­ளால் தின­சரி 25 விபத்­துக்­கள் நடை­பெ­று­கின்­றன. டில்­லி­யில் பா.ஜ., தொண்­டர் ஒரு­வர் மாடு முட்டி பலி­யா­கி­யுள்­ளார். இந்த விபத்­துக்­களை கட்­டுப்­ப­டுத்த அக­ம­தா­பாத் போலீ­சார், தெரு­வில் அநா­தை­யாக விடும் கால்­ந­டை­க­ளின் சொந்­தக்­கா­ரர்­கள் மீது, மர­ணத்தை ஏற்­ப­டுத்­து­தல் பிரி­வின் கீழ் வழக்கு தொடர போவ­தாக எச்­ச­ரித்­துள்­ள­னர்.

ராஜஸ்­தா­னில் சிகா­ரில் விவ­சா­யி­க­ளின் போராட்­டம், பசு, எருது போன்­ற­வை­களை கட்­டுப்­ப­டுத்த முடி­யா­மல் போய் இருப்­ப­தையே காட்­டு­கி­றது. அநா­தை­யாக திரி­யும் மாடு­கள் பயிரை அழிப்­ப­தால், விவ­சா­யி­கள் கடும் கோபத்­தில் உள்­ள­னர். இத­னால் வெகுண்­டெ­ழுந்த விவ­சா­யி­கள் ஒரு வாரத்­திற்­கும் அதி­க­மாக நடத்­திய போராட்­டம், வசுந்­தரா ராஜே அரசு, இதில் கவ­னம் செலுத்­தும் நிர்ப்­பந்­தத்தை ஏற்­ப­டுத்­தி­யது. அகில இந்­திய கிசான் சங்­கத்­திற்­கும், வசுந்­தரா ராஜே அர­சுக்­கும் இடையே நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­யில், மாநி­லத்­தில் அநா­தை­யாக திரி­யும் மாடு­களை பிடித்து அடைக்க மாட்டு தொழு­வம் கட்­டு­வது, வயல்­க­ளில் முள்­வேலி போடு­தல், வன சட்­டத்தை அமல்­ப­டுத்­து­வது என்ற உடன்­பாடு ஏற்­பட்­டது. மிக முக்­கி­ய­மாக பசு, எருது போன்ற கால்­ந­டை­க­ளின் வியா­பா­ரம் நடப்­ப­தற்கு தேவை­யான ஏற்­பாடு செய்­வ­தாக வசுந்­தரா ராஜே அரசு சம்­ம­தித்­தது. விவ­சா­யி­கள் முன்பு கிடா கன்று விற்­பனை செய்ய வேண்­டும் எனில், அதற்கு மூன்று வயது ஆகி இருக்க வேண்­டும். இந்த வயது வரம்பு தற்­போது இரண்டு வரு­ட­மாக குறைக்­கப்­பட்­டுள்­ளது. கால்­ந­டை­க­ளின் வர்த்­த­கத்­திற்கு தேவை­யான பாது­காப்பு அளிக்க வசுந்­தரா ராஜே அரசு சம்­ம­தித்­தது.

கால்­நடை வர்த்­த­கத்தை தடை செய்­வ­தும், இறைச்­சிக்­காக கொல்­வதை தடை செய்­வ­தும் கடும் எதிர் விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும் என்று நிபு­ணர்­கள் தொடர்ந்து எச்­ச­ரித்து வரு­கின்­ற­னர். கால்­நடை வளர்ப்­பில் பிரா­ணி­கள் கொல்­வது தவிர்க்க முடி­யா­தது. சிகார் மாவட்­டத்­தில் பசு, எருது போன்­ற­வை­க­ளின் வியா­பா­ரம், கொல்­வ­தற்கு உள்ள தடையை நீக்க வேண்­டும் என்று சிகார் மாவட்ட விவ­சா­யி­கள் போராடி வெற்றி பெற்­றுள்­ள­னர். மத்­தி­யில் பா.ஜ., அரசு அமைந்த பிறகு, பசு பாது­காப்பு விஷ­யத்­தில் பார­திய ஜனதா, அதன் கொள்­கையை மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டிய நிர்ப்­பந்­தம் ஏற்­பட்­டுள்­ளது.

விவ­சா­யி­க­ளும், கால்­நடை வியா­பா­ரி­க­ளும் இணை பிரிக்க முடி­யா­த­வர்­கள். இவர்­களை பிரிக்க வேண்­டும் என்று நினைத்­தால், விவ­சா­யி­கள் வெகுண்டு எழு­வார்­கள்  என்று எச்­ச­ரிக்­கின்­றார் முன்­னாள் எம்.எல்.ஏ., ஆம்ரா ராம். பா.ஜ., அர­சு­க­ளின் கொள்­கை­யால் கிரா­மப்­புற பொரு­ளா­தா­ரம், குறிப்­பாக கால்­நடை வளர்ப்பு தொழில் அழி­யும் நிலை ஏற்­பட்­டுள்­ள­து­டன், விவ­சா­யி­க­ளால் பரா­ம­ரிக்க முடி­யா­மல் கைவி­டப்­ப­டும் கால்­ந­டை­க­ளால் பல்­வேறு பிரச்­னை­கள் ஏற்­ப­டு­கின்­றன. இவை எல்­லா­வற்­றை­யும் கணக்­கில் எடுத்­துக் கொண்டு மத்­தி­யில் ஆளும் நரேந்­திர மோடி அர­சும், ராஜஸ்­தா­னில் ஆளும் வசுந்­த­ரரா ராஜே அர­சும் விவ­சா­யி­க­ளின் நெருக்­க­டிக்கு தீர்வு காண­வும், பசு பாது­காப்பு என்ற பெய­ரில் சமூக விரோத சக்­தி­கள் சட்­டத்தை கையில் எடுத்­துக் கொண்டு கொலை செய்­வதை தடுத்து நிறுத்த உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்­பதே விவ­சா­யி­கள், கால்­நடை வளர்ப்பு, வியா­பா­ரத்­தில் ஈடு­ பட்­டுள்­ள­வர்­க­ளின் எதிர்­பார்ப்பு.

நன்றி: ஸ்கோரல் டாட் இன் இணைய தளத்­தில் சோயாப் டேனி­யல்.