மீண்டும் ரொக்கத்திற்கு மாற்றம்!

பதிவு செய்த நாள் : 07 அக்டோபர் 2017

ரொக்­க­மில்­லா­மல் கிரெ­டிட் கார்டு, டெபிட் கார்டு, செல்­போன் ஆப் மூலம் பணம் செலுத்­து­வதை மத்­திய அரசு ஊக்­கு­வித்து வரு­கி­றது. ஆயி­ரம், 500 ரூபாய் நோட்­டுக்­கள் செல்­லாது என்று அறி­வித்த போது, ரொக்­க­மில்­லா­மல் பணம் செலுத்­தும் முறை பர­வ­லாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இதற்கு மத்­திய அரசு உறு­து­ணை­யாக இருந்­தது. மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தில் டாசி என்ற ஊரில் ரொக்­க­மில்லா பணப்­பட்­டு­வாடா அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்­கள். இதுவே மாநி­லத்­தில் ரொக்­மில்லா பண பரி­வர்த்­தனை நக­ர­மா­க­வும் அறி­வித்­த­னர்.

தற்­போ­தைய நிலை என்ன? இந்த நக­ரத்­தில் மீண்­டும் பழை­ய­படி ரொக்க பண பரி­வர்த்­த­னை­கள் நடக்க ஆரம்­பித்­துள்­ளன. இப்­போது யாரும் கிரெ­டிட் கார்டு, டெபிட் கார்டு பயன்­ப­டுத்­து­வ­தில்லை. வங்கி கொடுத்த ஸ்வீப்­பிங் கரு­வி­க­ளும் தூசி அடைந்து கிடக்­கின்­றன. இதற்கு என்ன கார­ணம்? இந்த நக­ரத்தை ரொக்­க­மில்லா நக­ர­மாக மாற்­று­வ­தற்கு முயற்சி செய்­த­வர் சுவப்­னில் பட்­நா­கர். இவர் டாசி வியா­பா­ரி­கள் சங்க தலை­வர்.

மீண்­டும் ரொக்க பண பரி­வர்த்­த­னைக்கு மாறி­ய­தற்­கான கார­ணத்தை பற்றி சுவப்­னில் பட்­நா­கர் கூறு­கை­யில், “ அரசு ரொக்­க­மில்லா பண பரி­வர்த்­த­னைக்கு ஊக்­க­ம­ளிக்­கின்­றது. ஆனால் இதற்கு தேவை­யான அடிப்­படை உட்­கட்­ட­மைப்பு வச­தி­கள் வேண்­டும் என்­பதை பற்றி கவ­லைப்­ப­ட­வில்லை. கார்ட் ஸ்வீப் மிஷின் வேலை செய்ய வேண்­டும் எனில் மின்­சா­ர­மும், டெலி­போன் இணைப்­பும் வேண்­டும். செல் போன் இணைப்­பும், சாதா­ரண போன் இணைப்­பும் கிடைப்­பது அரி­தா­க­வும், பிரச்­னை­யா­க­வும் உள்­ளது. பல நேரங்­க­ளில் டெலி­போன் இணைப்பு ஒரு வாரம் கூட இருப்­ப­தில்லை. அதே போல் மின்­சா­ர­மும் பிரச்­னை­யாக உள்­ளது என்று கூறு­கின்­றார். இந்த நிலை­யில் கடைக்­கா­ரர்­கள் டெபிட் கார்டு, கிரெ­டிட் கார்­டு­களை பயன்­ப­டுத்­து­வார்­கள்  என எதிர்­பார்க்க இய­லாது.

இந்த நக­ரில் பாங்க் ஆப் பரோடா ஸ்வீப் கரு­வி­களை டிபா­சிட் இல்­லா­மல் கொடுத்­துள்­ளது. (ஒரு ஸ்வீப் கரு­விக்கு ரூ.10 ஆயி­ரம் டிபா­சிட் கட்ட வேண்­டும்.) அத்­து­டன் வருட வாட­கை­யான ரூ.600 ஐயும் தள்­ளு­படி செய்­துள்­ளது. இருப்­பி­னும் சில கடைக்­கா­ரர்­கள் மட்­டும் அது­வும் ரூ.1,500 முதல் ரூ.2 ஆயி­ரத்­திற்கு மேல் வியா­பா­ரம் செய்­தால் மட்­டும் டெபிட், கிரெ­டிட் கார்­டு­க­ளில் பணம் செலுத்த அனு­ம­திக்­கின்­ற­னர். அவர்­க­ளின் மொத்த வியா­பா­ரத்­தில் 5 முதல் 10 சத­வி­கி­தம் வரை மட்­டுமே ரொக்­க­மில்லா, கார்­டு­கள் மூலம் பண பரி­வர்த்­தனை நடக்­கின்­றது. இந்த ஸ்வீப் கரு­வி­களை வாங்­கிக் கொடுப்­ப­தற்கு கார­ண­மாக இருந்த சுவந்­த­ரா­வீர் சவார்­கர் ராஷ்­டி­ரிய சமா­ரக் என்ற அமைப்­பின் தலை­வர் ரஞ்­சித் சவார்க்­கர் கூறு­கை­யில், தனிப்­பட்­ட­வர்­கள் ரொக்­கத்­திற்கு மாறி­விட்­ட­னர். இருப்­பி­னும் மொத்த வியா­பா­ரி­க­ளில் 90 சத­வி­கி­தம் பேர் கார்டு அல்­லது செக் மூலம் பணம் செலுத்­து­கின்­ற­னர் என்று தெரி­வித்­தார்.

இந்த ஊரில் விஜயா வங்கி, தானே மாவட்ட மத்­திய கூட்­டு­றவு வங்கி ஆகிய இரண்டு வங்­கி­கள் உள்­ளன. இந்த வங்­கி­கள் அவர்­க­ளின் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு டெபிட் கார்டு கொடுக்க தயங்­கு­கின்­றன. தானே மாவட்ட மத்­திய கூட்­டு­றவு வங்­கி­யில் 27 ஆயி­ரம் பேர் கணக்கு வைத்­துள்­ள­னர். இவர்­க­ளில் 2,200 பேருக்கு மட்­டுமே கார்டு கொடுத்­துள்­ளது. விஜயா வங்­கி­யில் 17 ஆயி­ரம் பேர் கணக்கு வைத்­துள்­ள­னர். இவர்­க­ளில் 4 ஆயி­ரம் பேருக்கு மட்­டுமே கார்டு வழங்­கி­யுள்­ளது என்று ரஞ்­சித் சவார்க்­கர் தெரி­வித்­தார்.

வங்­கி­கள் டெபிட் கார்டு வழங்க தயங்­கு­வ­தற்கு கார­ணம், வங்­கி­யில் கணக்கு வைத்­துள்­ள­வர்­க­ளில் பெரும்­பா­லோர் எழுத படிக்க தெரி­யா­த­வர்­கள். இவர்­க­ளால் கார்­டு­களை பயன்­ப­டுத்த முடி­யாது. இவர்­கள் கார்டு கேட்டு விண்­ணப்­பிக்­க­வில்லை என்று வங்கி தரப்­பில் கூறு­கின்­ற­னர்.