அதிகரிக்கும் கங்காரு: அரசு திணறல்

பதிவு செய்த நாள் : 07 அக்டோபர் 2017

ஆஸ்­தி­ரே­லியா என்ற உட­னேயே நினை­வுக்கு வரு­வது கங்­காரு. அந்த நாட்­டின் தேசிய விலங்­கா­க­வும் கங்­காரு உள்­ளது.

கங்­கா­ரு­க­ளின் எண்­ணிக்கை கட்­டுக்­க­டங்­காமல் அதி­க­ரித்து வரு­கி­றது. அந்த நாட்டு மக்­கள் தொகையை விட இரண்டு மடங்­காக கங்­கா­ரு­க­ளின் எண்­ணிக்கை உயர்ந்­துள்­ளது. இதன் பெருக்­கத்தை கட்­டுப்­ப­டுத்­து­வது பெரும் சவா­லாக உள்­ளது.

2016ம் ஆண்டு எடுத்த கணக்­கெ­டுக்­கின்­படி 50 மில்­லி­யன் கங்­கா­ருக்­கள் உள்­ள­தாக கணக்­கெ­டுக்­கப் பட்­டுள்­ளது. கடந்த 2010ம் ஆண்டு வெறும் 10 மில்­லி­யன் கங்­கா­ரு­கள் மட்­டுமே இருந்­தன. கங்­கா­ருக்­க­ளின் எண்­ணிக்­கையை கட்­டுப்­ப­டுத்த ஆஸ்­தி­ரே­லிய அரசு முடிவு செய்­துள்­ளது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் மிரு­க­வதை சட்­டம் கடு­மை­யாக கடை­பி­டிக்­கப்­ப­டு­கி­றது. இப்­போது வேறு வழி­யின்றி கங்­காரு இறைச்­சி­களை அதிக அளவு விற்­பனை செய்ய ஆஸ்­ரே­லியா அரசு முடிவு செய்­துள்­ளது.

அத்­து­டன் பொது­மக்­கள் கங்­காரு இறைச்­சி­களை அதிக அளவு சாப்­பிட வேண்­டும் என்­றும் கேட்­டுக் கொண்­டுள்­ளது. அரசு இணை­ய­த­ளத்­தில் கங்­காரு இறைச்சி உட­லுக்கு நல்­லது என்­றும் பிர­சா­ரம் செய்­யப்­ப­டு­கி­றது.

***