காரை கடித்த கழுதை: நீதிமன்றம் நஷ்டஈடு

பதிவு செய்த நாள் : 07 அக்டோபர் 2017

ஜெர்­ம­னி­யில் ஹெஸ்சி மாநி­லத்­தில் (Hesse) 3 லட்­சத்து 10 ஆயி­ரம் மதிப்­புள்ள மெக்­லா­ரன் ஸ்பைடர் ரக காரை ஒரு­வர், கழுதை கொட்­ட­கைக்கு அருகே நிறுத்­தி­யுள்­ளார். அந்த கார் கேரட் நிறத்­தில் இருந்­துள்­ளது. கடும் பசி­யில் இருந்த கழு­தை­கள், கேரட் என நினைத்து காரை கடித்து குத­றி­யுள்­ளன. இதை­ய­டுத்து காரின் உரி­மை­யா­ளர், கழு­தை­க­ளின் உரி­மை­யா­ளர் மீது நஷ்­ட­ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்­தார்.

இந்த வழக்கை விசா­ரித்த நீதி­மன்­றம், காரின் உரி­மை­யா­ள­ருக்கு கழு­தை­யின் உரி­மை­யா­ளர் 5,800 யூரோ நஷ்­ட­ஈடு வழங்க உத்­த­ர­விட்­டது. இந்த உத்­த­ரவை எதிர்த்து கழு­தை­யின் உரி­மை­யா­ளர் மேல் முறை­யீடு செய்ய உள்­ள­தாக தெரி­கி­றது.                    ***