பிரான்சில் குளுகோபோஸ்ட் களைக் கொல்லிக்கு தடை!

பதிவு செய்த நாள் : 07 அக்டோபர் 2017

விவ­சாய நிலங்­க­ளில் பயன்­ப­டுத்­தப்­ப­டும் குளு­கோ­போஸ்ட் என்ற களைக் கொல்­லியை வரும் 2022ம் ஆண்­டில் தடை செய்ய பிரான்ஸ் அரசு முடிவு செய்­துள்­ளது.

இதை அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த பிர­பல நிறு­வ­ன­மான மொன்­சன்ரோ தயா­ரிக்­கின்­றது. இந்த களைக் கொல்­லியை நிலத்­தில் தெளித்­தால், மனி­தர்­க­ளுக்கு புற்று நோய் உரு­வா­க­லாம் என்று பிரான்ஸ் அரசு கரு­து­கி­றது. எனவே வரும் 2022ம் ஆண்­டில் குளோ­கோ­போஸ்ட் களைக்­கொல்­லிக்கு தடை விதிக்­க­லாம் என்று தெரி­கி­றது. ஐரோப்­பிய ஒன்­றி­யம் 10 ஆண்­டு­க­ளுக்கு இரா­ச­யண பயன்­பாட்­டிற்கு உரி­மத்தை நீட்­டிக்க முடிவு செய்­துள்ள நிலை­யில், பிரான்ஸ் அரசு தடை செய்ய முடிவு செய்­துள்­ளது.

பிரான்ஸ் அர­சின் செய்தி தொடர்­பா­ளர் கிறிஸ்­டோபி காஸ்­டி­னர் கூறு­கை­யில், “பொது சுகா­தா­ரத்­திற்கு அச்­சு­றுத்­தல் ஏற்­ப­டுத்­தும் இர­சா­ய­ணத்தை தடை செய்ய அரசு முடிவு செய்­துள்­ளது. அடுத்த  ஐந்து வரு­டத்­திற்­குள் குளு­கோ­போஸ்ட்­டிற்கு பதி­லாக வேறு களைக்­கொல்­லியை உற்­பத்தி செய்ய ஜனா­தி­பதி மேக்­ரான் அரசு 50 பில்­லி­யன் யூரோ ஒதுக்க உள்­ள­தா­க­வும்” அவர் கூறி­யுள்­ளார்.  ***