ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 20–9–17

19 செப்டம்பர் 2017, 10:52 PM

இளையராஜா கேட்ட கேள்வி!

(சென்ற வார தொடர்ச்சி...)

பாலு­ம­கேந்­திரா கூறு­கி­றார்…

(இளை­ய­ராஜா என்ற மகா­வித்­வா­னும் நானும்...)

எனது 'மூடு­பனி' படத்­தி­லி­ருந்­து­தான் நான் இளை­ய­ரா­ஜா­வு­டன் பணி­யாற்­றத் தொடங்­கி­னேன் என்று சொல்­லி­யி­ருந்­தேன். 'மூடு­பனி' எனக்கு மூன்­றா­வது படம். ஆனால் இசை­ஞா­னிக்கோ அது நுாறா­வது படம் என்­றும் சொல்­லி­யி­ருந்­தேன். 'மூடு­பனி' ஒரு சஸ்­பென்ஸ் த்ரில்­லர்.

எனது மான­சீக ஆசான்­க­ளில் ஒரு­வ­ரான ஆல்­பி­ரட் ஹிச்­காக் என்ற மாமே­தைக்கு மரி­யாதை செலுத்­தும் முக­மா­கத் தமி­ழில் நான் எடுத்த சஸ்­பென்ஸ் த்ரில்­லர். எனது ஷோபா­வும் 'அழி­யாத கோலங்க'ளில் நான் அறி­மு­கப்­ப­டுத்­திய பிர­தாப் போத்­த­னும் சேர்ந்து அற்­பு­த­மாக நடித்­தி­ருந்த படம். எனது இயக்­கத்­தில் வந்த முதல் பட­மான 'கோகிலா'வில் மோகன் என்ற வங்கி ஊழி­யரை நான் நடி­க­ராக அறி­மு­கப்­ப­டுத்­தி­யி­ருந்­தேன். கன்­னட நடி­க­ரான அவரை எனது 'மூடு­பனி' படத்­தின் மூலம் தமிழ் சினி­மா­வுக்கு அறி­மு­கம் செய்­து­வைத்­தேன். பிற்­கா­லத்­தில் தமிழ் திரை வானில் அவர் ஜொலிக்­கும் நட்­சத்­தி­ர­மா­கத் திகழ்ந்­தது சந்­தோ­ஷம்.

'மூடு­பனி' படத்­திற்கு முன்­பும் அதன் பின்­பு­மாக ஜேசு­தாஸ் பல நுாறு பாடல்­க­ளைப் பாடி­யி­ருக்­கி­றார். இருப்­பி­னும், தனக்கு மிக­வும் பிடித்த சினிமா பாடல் என்று இன்­று­வரை அவர் சொல்­லிக்­கொண்­டி­ருப்­பது 'மூடு­பனி' படத்­தில் வந்த ' என் இனிய பொன் நிலாவே ' பாடல்­தான்.  

71 முதல் 76 வரை ஐந்து வரு­டங்­கள் ஒளிப்­ப­தி­வா­ள­னாக மட்­டும் பணி­யாற்­றி­விட்டு 76-ல் நான் திரைப்­பட இயக்­கத்­தில் ஈடு­ப­டு­கி­றேன். நான் இயக்­கிய முதல் படம் 'கோகிலா' கன்­ன­டப்­ப­டம். நான் இயக்­கும் படங்­க­ளின் திரைக்­கதை, ஒளிப்­ப­திவு, மற்­றும் படத்­தொ­குப்பு ஆகி­ய­வற்­றை­யும் நானே செய்­வது வழக்­கம். எனது முதல் பட­மான 'கோகிலா'விலி­ருந்து கடை­சி­யாக வெளி­வந்த 'அது ஒரு கனாக்­கா­லம்' வரை அப்­ப­டித்­தான். நான் இயக்­கும் படங்­க­ளுக்­கான இசை, குறிப்­பாக பின்­னணி இசை எங்கு தொடங்கி எங்கு முடிய வேண்­டும், அது எப்­ப­டிப்­பட்ட இசை­யாக இருக்க வேண்­டும் என்­ப­வற்­றில் நான் வெகு உன்­னிப்­பாக இருப்­பேன். இவற்­றை­யெல்­லாம் அந்­தந்த படங்­க­ளுக்­கான திரைக்­க­தை­களை எழு­தும்­போதே நான் தீர்­மா­னித்­துக் கொள்­வேன்.

 படத்­தொ­குப்பு முற்­றி­லு­மாக முடிந்து, அடுத்த கட்­ட­மான இசை சேர்க்­கைக்­குத் தயா­ரா­ன­தும், அந்த படத்­திற்­கான இசை பற்­றிய எனது எண்­ணங்­களை எனது இசை­ய­மைப்­பா­ள­ருக்­குத் தெளி­வா­கத் தெரி­யப்­ப­டுத்­து­வேன். எனது படங்­க­ளில் பிரக்­ஞைப்­பூர்­வ­மாக நான் வைக்­கும் மவு­னங்­களை, உணர்வு பொதிந்த, அர்த்­த­முள்ள அந்த மவு­னங்­களை இசை­கொண்டு கலைக்க வேண்­டாம் என்­றும் என் இசை­ய­மைப்­பா­ள­ரி­டம் நான் கேட்­டுக் கொள்­வேன்.

நான் இயக்­கிய முதல் இரண்டு படங்­க­ளுக்­கும் இசை­ய­மைத்த இந்­திய திரை­யி­சை­யின் மாமே­தை­க­ளில் ஒரு­வ­ரான சலீல் சவுத்­ரி­யி­ட­மும் அந்­தப் படங்­க­ளுக்­கான இசை பற்­றிய எனது எண்­ணங்­க­ளைத் தெரி­யப்­ப­டுத்­தியே அவற்­றிற்­கான இசை­யைப் பெற்­றுக் கொண்­டேன்.

'மூடு­பனி' படத்­தின் இசைச் சேர்க்­கைக்கு முன், அதற்­கான இசை எப்­படி இருக்க வேண்­டும் என்ற எனது எண்­ணங்­களை இளை­ய­ரா­ஜா­வுக்கு மிக நுணுக்­க­மா­கத் தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருந்­தேன்.

எனது மூன்­றா­வது பட­மான 'மூடு­பனி' இளை­ய­ரா­ஜா­வுக்கு நுாறா­வது படம். 'மூடு­பனி'க்கு முன் 99 படங்­க­ளுக்கு இசை­ய­மைத்து வெற்­றி­யின் உச்­சத்­தில் அவர் இருந்த காலம் அது. இசை­ஞா­னி­யு­டன் பணி­யாற்­றத் தொடங்­கிய அந்த ஆரம்ப நாட்­க­ளில் ஒரு நாள் ராஜா என்­னி­டம் கேட்­டார்.

  ஒரு படத்­திற்­கான இசையை யார் தீர்­மா­னிப்­பது?

என்ன மன­நி­லை­யில் அந்­தக் கேள்வி கேட்­கப்­பட்­டி­ருக்­கி­றது என்­பதை உட­ன­டி­யாக நான் புரிந்து கொண்­டேன். இசை­ய­மைப்­ப­தில் அது­வரை அவர் அனு­ப­வித்து வந்த படைப்­புச் சுதந்­தி­ரத்­திற்­குள் நான் மூக்கை நுழைக்­கி­றேனோ என்ற சந்­தே­கம் எனக்கே தோன்ற ஆரம்­பித்­தி­ருந்­தது. கொஞ்­சம் யோசித்­து­விட்டு நான் சொன்­னேன். "Raja. let me answer your question this way " என்ற முன்­னு­ரை­யு­டன் பேச ஆரம்­பித்­தேன்.  ஒரு நதி­யா­னது அது ஆரம்­பிக்­கும் இடத்­தி­லி­ருந்து அதா­வது 'நதி­மூ­லம்' என்று சொல்­லப்­ப­டும் அதன் தொடக்­கத்­தி­லி­ருந்து கட­லில் சென்று கலக்­கும் வரை மாறிக் கொண்டே இருக்­கும். அதன் தோற்­றத்­தை­யும், வேகத்­தை­யும், ஆழத்­தை­யும் கொஞ்­சம் யோசித்­துப் பாருங்­கள்...

– தொடரும்