விழுப்புரத்தில் 17-ம் தேதி சமூக நீதி மாநாடு: பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 20:09

சென்னை,

விழுப்புரத்தில் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெறும் சமூக நீதி மாநாட்டில் பாட்டாளி சொந்தங்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இட ஒதுக்கீட்டு தியாகிகளுக்கு 30வது ஆண்டு நினைவு நாள் என்பதால் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வரும் 17ம் தேதி மாலை 4 மணிக்கு விழுப்புரம் புறவழிச் சாலை ஜானகிபுரத்தில் சமூக நீதி மாநாட்டை பாமக மிகப்பெரிய அளவில் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறது.
இந்த மாநாட்டில் பாமகவினர் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு, பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.