நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 07:31

நாகர்கோவில்: நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து கட்சிகள் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்ததை தொடர்ந்து தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த தி.மு.க. தலைமையில் அனைத்து கட்சிகள் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  எம்.எல்.ஏ., க்கள் பிரின்ஸ், ஆஸ்டின், காங்., கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன்  முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி.க்கள் அப்பாத்துரை, பெல்லார்மின், உள்பட பலர் பேசினர். தி.மு.க. சார்பில் மகேஷ்,  சிவராஜ், காப்க்., சார்பில் மாவட்ட துணைத்தலைவர் சிவகுமார், பொருளாளர் யூசுப்கான், செயலாளர் மகேஷ்லாசர், தங்கம் நடேசன், அந்தோணிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர். சுரேஷ்ராஜன் பேசுகையில், தமிழக ஆஸ்பத்திரிகளில்தான் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் அதிகமாக சென்னையில்தான் வெளிநாட்டு நோயாளிகள் வருகிறார்கள். தமிழகத்துக்கு நீட் தேவையில்லை. இதற்காக எதிர்கட்சிகள் முழு ஒத்துழைப்புடன் சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்தும் எடப்பாடி அரசு வலியுறுத்தாததால் நீட் திணிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு இயந்திரம் ஸ்தம்பித்து கிடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.