ரூ.200க்கு செல்­போன் கடை முன்பு தள்­ளு­முள்ளு

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 07:22

ராம­நா­த­பு­ரம்: ராம­நா­த­பு­ரத்­தில் செல்­போன் கடை திறப்பு விழா சலு­கை­யாக 200 ரூபாய்க்கு செல்­போன் தரு­வ­தாக அறி­வித்­த­தை­ய­டுத்து அந்த கடை முன் மக்­கள் கூட்­டம் அலை­மோ­தி­யது.

ராம­நா­த­பு­ரம் தெற்­கு­த­ர­வை­யைச் சேர்ந்­த­வர் அமீன். இவர், ராம­நா­த­பு­ரம் சாலைத்­தெ­ரு­வில் செல்­போன் கடை ஒன்றை நேற்று திறந்­தார். திறப்பு விழா அறி­முக சலு­கை­யாக 200 ரூபாய்க்கு பட்­டன் டைப் செல்­போன் தரு­வ­தாக கூறி 250 பேருக்கு டோக்­கன் கொடுத்­தார். நேற்று காலை கடை திறந்­த­வு­டன் முதல் 50 பேருக்கு செல்­போன் கொடுத்­தார். ஆனால், கடை முன் கூட்­டம் அதி­க­ரிக்க தொடங்­கி­யது. கூட்­டத்தை கட்­டுப்­ப­டுத்த கடைக்­கா­ரர்­க­ளால் முடி­ய­வில்லை.

இத­னால், சாலைத்­தெ­ரு­வில் போக்­கு­வ­ரத்து கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டது. செல்­போன் வாங்க ஒரு­வரை ஒரு­வர் முண்­டி­யத்து சென்­றால், தள்­ளு­முள்ளு ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து ராம­நா­த­பு­ரம் பஜார் போலீஸ் ஸ்டேஷ­னில் இருந்து போலீ­சார் வந்து கூட்­டத்தை கட்­டுப்­ப­டுத்த முயன்­ற­னர். அது­வும் முடி­யா­த­தால், உரி­மை­யா­ள­ரி­டம் போலீ­சார் கடையை அடைக்­கும்­படி கூறி­னர். கடையை அடைத்த பின்­ன­ரும் மக்­கள் அங்கு கூடி நின்­ற­னர். பின்­னர் போலீ­சார் வலுக்­கட்­டா­ய­மாக அவர்­களை அப்­பு­றப்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து அந்த பகு­தி­யில் போக்­கு­வ­ரத்து சீரா­னது.