பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 01:00

புதுடில்லி,

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி  எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயங்கள் வெளியிடுவதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா  இந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில்  இந்த விழாவை சிறப்பிக்கும் வகையில் மற்றும்  எம்.ஜி.ஆரைக் கவுரவிக்கும் வகையிலும் அவருடைய உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த கோரிக்கையை ஏற்று எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த ரூ.100  மற்றும்  ரூ.5  நாணயம்  வெளியிடுவதற்கான அரசாணையை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ளது.
இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார்.