திம்மக்காவும் ஆலமரமும்...! – சுமதி

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017

தான் வாழும் பகு­தி­யான குமர ஹள்­ளி­யில்,  சுமார் 4 கிலோ­மீட்­டர் தூரத்­திற்கு சாலை­யின் இரு புறங்­க­ளி­லும் 384 ஆலங்­கன்­று­களை நட்டு, அதை இன்று மரங்­க­ளாக்கி ஒரு பூங்­கா­வ­ன­மாக அந்த இடத்தை மாற்­றிய சாதனை பெண்­மணி.103 வய­தா­கும் திம்­மக்கா.

தன் வாழ்­நாள் முழுக்க பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மரக்­கன்­று­களை ஒரே ஆளாக நட்­டி­ருக்­கும் இந்த சாதனை பெண்­மணி,  இன்று தன்­னு­டைய 103 வய­தி­லும் உற்­சா­கம் குறை­யா­மல், மரங்­களை நேசிப்­பது, புதிய மரங்­களை நடு­வது என தொய்­வின்றி இயங்­கி­வ­ரு­கி­றார். தான் நட்ட மரங்­களை தன் சொந்த குழந்­தை­களை போலவே எண்ணி பார்த்­துக்­கொள்­வ­தோடு,  பல இயற்கை ஆர்­வ­லர்­க­ளுக்கு வழி­காட்­டி­யா­க­வும் இருக்­கி­றார்.

புத்­த­கங்­க­ளால் சுற்­றுச்­சூ­ழல் ஆர்­வ­லர் ஆகி­ய­வ­ரல்ல இவர். முறை­யாக பள்­ளிக்கு சென்று படிக்­க­வில்லை. தொழி­லா­ளி­யாக பணி­பு­ரிந்து இந்­தி­யா­வில் வாழும் பல லட்ச பெண்­க­ளைப் போல வாழ்க்­கை­யோடு போரா­டி­ய­வர் இவர்.

103 வய­தா­கும் திம்­மக்கா; பெங்­க­ளுரு ஊரக வட்­டம், மகடி தாலுக்­கில் உள்ள ஹுலி­கல் கிரா­மத்­தில் பிறந்­தார். சிறு­வ­யது முதல் முது­கெ­லும்பு தேயும் அளவு, நாள் முழு­தும் கடு­மை­யாக உழைத்து, பேகல் சிக்­கைய்யா என்­ப­வரை மணந்­தார் திம்­மக்கா. மாடு மேய்க்­கும் கண­வ­ரு­டன் சேர்ந்து 25 ஆண்டு காலம் கழிந்த நிலை­யில் குழந்­தை­கள் இல்­லாத திம்­மக்கா, மரக்­கன்­று­களை நட முடி­வெ­டுத்­தார். அவற்றை தன் குழந்­தை­யாக வளர்க்­க­வும் முடிவு செய்­தார்..

ஆல­ம­ரங்­கள் நிறைந்­தவை திம்­மக்­கா­வில் கிரா­மம். அவர் தன் கண­வ­ரு­டன் மரக்­கன்­று­களை நடத்­தொ­டங்­கி­னார். முதல் ஆண்­டில், இரு­வ­ரும் சுமார் 4 கிமி தூரத்­திற்கு 10 கன்­று­களை நட்­ட­னர். இரண்­டாம் ஆண்­டில் 15, மூன்­றாம் வரு­டம் 20 ஆக மரக்­கன்­று­கள் எண்­ணிக்கை உயர்ந்­தது. தன்­னி­டம் இருக்­கும் சொற்ப வரு­மா­னத்தை கொண்டு மரங்­களை வளர்த்­தார். நான்கு கிலோ மீட்­டர் தூரம் தண்­ணீர் வாளி­களை எடுத்­துச்­சென்று மரக்­கன்­று­க­ளுக்கு நீர் பாய்ச்­சி­னர். ஆடு, மாடு மேயா­மல் இருக்க வேலி­யும் அமைத்­த­னர்.  

1991-ல் திம்­மக்­கா­வின் கண­வர் உயி­ரி­ழந்­தார். இருப்­பி­னும் அவர் நட்­டுச்­சென்ற மரக்­கன்­று­கள் இன்று வளர்ந்து அவ­ரின் நினை­வு­களை தாங்கி நிற்­கி­றது. கடந்த 50 ஆண்­டு­க­ளாக இரு­வ­ரும் சேர்ந்து ஹுலிக்­கல் பகு­தி­யில் சுமார் 5 கிமி தூரத்­துக்கு சுமார் 384 ஆல­ம­ரங்­கள் வளர்ந்து கம்­பீ­ர­மாக நிற்­கின்­றன.

1996-ல் தேசிய குடி­ம­கள் விருதை பெற்­ற­போதே திம்­மக்­கா­வின் பணி­கள் பற்றி வெளியே தெரிய ஆரம்­பித்­தது. அவ­ரின் வாழ்க்கை திரைப்­ப­ட­மாக்­கப்­பட்­டது. பல விரு­து­களை அவர் பெற்­றி­ருந்­தா­லும், யாரும் தனக்கு பண உத­வி­கள் செய்­ய­வில்லை என்று ஆதங்­கப்­பட்­டுள்­ளார் திம்­மக்கா. அவர் பெயரை பயன்­ப­டுத்தி, அவ­ருக்கு வரும் நிதியை சிலர் எடுத்­துக்­கொள்­வ­தாக சந்­தே­கிக்­கி­றார்.

ஒரு மருத்­து­வ­மனை தொடங்க நீண்ட நாளாக முயற்சி எடுத்­து­வ­ரு­கி­றேன், ஆனால் அதற்கு யாரும் உத­விட முன்­வ­ர­வில்லை. இருந்­தா­லும் என் முயற்­சியை நான் தொட­ரு­வேன் என்று உறு­தி­யு­டன் கூறு­கி­றார் இந்த மூப்­பி­லும் தனித்த அழகு பளிச்­சிட, பல­ருக்­கும் எடுத்­துக்­காட்­டா­கத் திக­ழும் இந்த பெண்­மணி.