கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி – 17’ 14-–9–17

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017

உள்ளதைச் சொல்ல இந்த எளிய ஆங்கில முறையை பயன்படுத்துங்கள்!

'தேர்' (there) அமைப்பு வாக்­கி­யங்­க­ளைக் கொண்டு, இட விவ­ரங்­க­ளைத் வெகு எளி­தான முறை­யில் தெரி­விக்­க­லாம்.

உங்­கள் வீடு வெங்கு தெரு­வில் இருக்­கி­றது என்று வைத்­து­கொள்­வோம்.

என் வீடு வெங்கு தெரு­வில் உள்­ளது என்று கூறு­வீர்­கள்.

My house is on Vengu Street.

என் வீட்­டுக்கு அருகே ஒரு காய்­கறி கடை 'இருக்­கி­றது' (there is).

ஒரு காய்­கறி கடை (a vegetable shop).

என் வீட்­டுக்கு அருகே (near my house)

என் வீட்­டுக்கு அருகே ஒரு காய்­கறி கடை இருக்­கி­றது.

There is a vegetable shop near my house. (தேர் இஸ் அ வெஜி­ட­பில் ஷாப் நியர் மை ஹவுஸ்).

இந்த வகை­யில் வீட்­டின் அருகே ஒரு ஆஸ்­பத்­தி­ரியோ, பள்­ளியோ, கல்­லூ­ரியோ, ஓட்­டலோ இருந்­தால்…

தேர் இஸ் அ ஹாஸ்­பி­டல் நியர் மை ஹவுஸ். There is a hospital near my house. (என் வீட்­டின் அருகே ஒரு ஆஸ்­பத்­திரி இருக்­கி­றது).

தேர் இஸ் அ ஸ்கூல் நியர் மை ஹவுஸ். There is a school near my house. (என் வீட்­டிற்கு அருகே ஒரு பள்ளி இருக்­கி­றது)

தேர் இஸ் அகாலேஜ் நியர் மை ஹவுஸ்). There is a college near my house.  (என் வீட்­டிற்கு அருகே ஒரு கல்­லூரி உள்­ளது)

தேர் இஸ் அ ஹோடல் நியர் மை ஹவுஸ். There is a hotel near my house. (என் வீட்­டிற்கு அருகே ஒரு ஓட்­டல் உள்­ளது).

'நியர் மை ஹவுஸ்' என்­றால் 'என் வீட்­டுக்கு அரு­கில்' என்று பொருள். வீட்­டுக்கு அடுத்த இடத்­தில் என்­றில்லை. 'வீட்­டிக்கு அடுத்த இடத்­தில்' என்­றால், 'நெக்ஸ்ட் டு மை ஹவுஸ்' (next to my house). மேற்­படி எடுத்­துக்­கா­ட­டு­க­ளில் 'near my house' என்­ப­தற்­குப் பதில் 'next to my house' என்­ப­தைப் போட்டு வாக்­கி­யங்­களை உச்­ச­ரி­யுங்­கள். வீட்­டுக்­குப் சமீ­பத்­தில் என்­ப­தற்­கும் வீட்­டுக்கு அடுத்த இடத்­தில் என்­ப­தற்­கும் உள்ள வேறு­பாட்டை நினைத்­துப்­பா­ருங்­கள்.

தேர் இஸ் அ ஸ்கூல் நெக்ஸ்ட் டு மை ஹவுஸ். There is a school next to my house. (என் வீட்­டிற்கு அடுத்த இடத்­தில் ஒரு பள்ளி இருக்­கி­றது)

Next to என்­பதை 'பிஸைட்' என்­றும் கூற­லாம். 'தேர் இஸ் அ ஸ்கூல் பிஸைட் மை ஹவுஸ்'. There is a school beside my house. (ஸிட் பிஸைட் மீ -- என் அரு­கில், எனக்­குப்­பக்­கத்­தில் அமர்ந்­து­கொள்)

இதே போல் வீட்­டுக்கு எதி­ரில் என்­கிற பிர­யோ­கத்­தை­யும் எடுத்­துக் கொள்­ள­லாம். 'ஆப்­பொ­ஸிட் மை ஹவுஸ்'. (opposite my house).

'நியர் மை ஹவுஸ்',   'நெக்ஸ்ட் டு மை ஹவுஸ்', 'பிஸைட் மை ஹவுஸ்', 'ஆப்­ப­ஸிட் மை ஹவுஸ்' (near my house, next to my house, beside my house, opposite my house)…தேர் இஸ் அ ஸ்கூல் (இதே வகை­யில் 'காலேஜ்', 'ஹாஸ்­பி­டல்' போன்­ற­வற்­று­டண் இணைத்­துப் பழ­குங்­கள்).

என்­னு­டைய வீடு (my house) என்­ப­தற்­குப் பதில், அவ­னு­டைய வீடு (his house), அவ­ளு­டைய வீடு (her house), அவர்­க­ளு­டைய வீடு (their house), உன்­னு­டைய வீடு (your house) எனக்­கொண்டு வாக்­கி­யங்­களை அமைத்­துப்­ப­ழ­குங்­கள்.

தேர் இஸ் அ ஸ்கூல் நியர் ஹிஸ் ஹவுஸ். There is a school near his house.  (அவ­னு­டைய வீட்­டிற்கு அரு­கில் ஒரு பள்ளி உள்­ளது).

தேர் இஸ் அ ஸ்கூல் நியர் ஹர் ஹவுஸ் There is a school near her house. (அவ­ளு­டைய வீட்­டிற்கு அரு­கில் ஒரு பள்ளி உள்­ளது)

தேர் இஸ் அ ஸ்கூல் நியர் தேர் ஹவுஸ். There is a school near their house. (அவர்­க­ளு­டைய வீட்­டிற்கு அரு­கில் ஒரு பள்ளி உள்­ளது)

தேர் இஸ் அ ஸ்கூல் நியர் யுவர் ஹவுஸ். There is a school near your house. (உன்­னு­டைய வீட்­டிற்கு அரு­கில் ஒரு பள்ளி உள்­ளது)

வீட்­டின் அருகே ஒரு பள்ளி மட்­டும் இல்­லா­மல், இரு பள்­ளி­களோ, பல பள்­ளி­களோ இருந்­தால்..இஸ் (is) 'ஆர்' (are) ஆக மாறும். ஸ்கூல் என்­பது பன்­மை­யாகி, 'ஸ்கூல்ஸ்' என்று வரும்.

தேர் ஆர் டூ ஸ்கூல்ஸ் நியர் மை ஹவுஸ்  There are two schools near my house. (என் வீட்­டிற்கு அரு­கில் இரு பள்­ளி­கள் இருக்­கின்­றன)

தேர் ஆர் மெனி ஸ்கூல்ஸ் நியர் மை ஹவுஸ்  There are many schools near my house. (என் வீட்­டிற்கு அரு­கில் பல பள்­ளி­கள் உள்­ளன).

தேர் ஆர் அ பியூ ஷாப்ஸ் நியர் மை ஹவுஸ்  There are a few shops near my house. (என் விட்­டிற்கு அரு­கில் ஒரு சில  கடை­கள் உள்­ளன). (a few = ஒரு சில).

நீங்­கள் ஒரு வீட்­டின் முன் நிற்­கி­றீர்­கள். என்ன பார்க்­கி­றீர்­கள் என்று கேட்­டால் இப்­ப­டிக்­கூ­ற­லாம்.

தேர் இஸ் அ கேட் அவுட்­ஸைட் த பிளாட் காம்­பி­ளெக்ஸ். There is a gate outside the flat complex.  (பிளாட் காம்­பி­ளெக்­ஸின் முன் ஒரு கேட் உள்­ளது).

தேர் இஸ் அ வாட்ச்­மேன் அவுட்­ஸைட். There is a watchman outside.

(ஒரு வாட்ச்­மேன் வெளியே  இருக்­கி­றார்).

தேர் ஆர் போர் பிளாக்ஸ் ஆப் பிளாட்ஸ். There are four blocks of flats. (குடி­யி­ருப்­பு­கள் கொண்ட நான்கு பிளாக்­கு­கள் உள்­ளன).

தேர் ஆர் எய்ட் பிளாட்ஸ் இன் ஈச் பிளாக். There are eight flats in each block. (ஒவ்­வொரு பிளாக்­கி­லும் எட்டு பிளாட்­டு­கள் உள்­ளன).

தேர் ஆர் கார்ஸ் பார்க்ட் அலாங் த பாத். There are cars parked along the path. (பாதை நெடுக கார்­கள் (வாக­னங்­கள்) நிறுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன).

தேர் ஆர் சில்ட்­ரென் பிளே­யிங் பிஹைன்ட் த லாஸ்ட் பிளாக். There are children playing behind the last block. (கடைசி பிளாக்­கிற்கு பின்னே சிறு­வர்­கள் விளை­யா­டிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள்).

ஒரு கேட், ஒரு வாட்ச்­மேன் என்­கி­ற­போது, 'இஸ்' வரு­கி­றது.

பல பிளாக்­குள், பிளாட்­டு­கள், குழந்­தை­கள் என்­கி­ற­போது, 'ஆர்' வரு­கி­றது. ஒரு கேட் 'இருக்­கி­றது'. பல பிளாட்­டு­கள், அதா­வது குடி­யி­ருப்­பு­கள் 'இருக்­கின்­றன' என்­ப­தற்கு ஒத்த மாற்­றங்­கள் தான் ஆங்­கி­லத்­தில் 'இஸ்', 'ஆர்' ஆகி­ய­வை­யு­டன் அமைந்­தி­ருக்­கின்­றன. பிளாட் (flat) என்­ப­தற்­கான பன்­மைச்­சொல் 'எஸ்' (s) சேர்க்­கப்­பட்டு, 'பிளாட்ஸ்' (flats) என்று வரு­கி­றது. ஆனால் சைல்ட் (child) (குழந்தை) என்­ப­தற்­கான பன்மை, 'எஸ்' சேர்த்து 'சைல்­டஸ்' என்று இல்­லா­மல், 'ரென்' (ren) சேர்க்­கப்­பட்டு, 'சில்ட்­ரென்' (children) என்று உச்­ச­ரிக்­கப்­ப­டு­கி­றது.

ஆகவே குழந்­தை­கள் என்று வரும்­போது, 'சைல்ட்ஸ்' என்று கூறக்­கூ­டாது. 'சில்ட்­ரென்' என்று கூற­வேண்­டும். 'சில்ட்­ரென்ஸ்' என்­றும் கூறக்­கூ­டா­து…­ஏ­னென்­றால் 'சில்ட்­ரென்' என்­பதே பன்­மை­யைத்­தான் குறிக்­கி­றது. பல குழந்­தை­க­ளைப் பற்­றிப் பேசும்­போது, சில்ட்­ரென்ட்ஸ் என்று நீங்­கள் பேசி­னால், சரி­யாக ஆங்­கி­லம் கற்­கா­த­வர் என்று உட­ன­டி­யா­கத் தெரி­யும். இதைத் தெரிந்­து­கொண்­டு­விட்­ட­தால், இனி நிச்­ச­யம் இந்­தத் தவறை செய்­ய­மாட்­டீர்­கள்.


– தொடரும்

...vamanan81@gmail.com

vamananinsight.blogspot.in