இந்தியாவில் ஆப்பிள் 8 மாடல் ஐபோன் தொடக்கவிலை ரூ.64 ஆயிரமாக நிர்ணயம்

பதிவு செய்த நாள் : 13 செப்டம்பர் 2017 20:15

புதுடில்லி:

ஆப்பிள் 8 மாடல் ஐபோன் அமெரிக்காவில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்தியாவில் இந்த மாடல் போன்களில் தொடக்கவிலை ரூ. 64,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடல்கள் 64 ஜிபி மற்றும் 256 ஜிபி சேமிப்புத்திறனுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இவற்றின் துவக்க விலை ரூ.64,000 ஆகும். செப்டம்பர் 29ம் தேதி முதல் இந்த மாடல்கள் இந்தியாவில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

ஆப்பிள் நிறுவனம் ஐபோனை அறிமுகம் செய்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி ஐபோன் எக்ஸ் என்ற மாடலை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது 64 ஜிபி, 256 ஜிபி சேமிப்புத்திறனுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 3ம் தேதி முதல் இந்த மாடல் போன்கள் இந்தியாவில் கிடைக்கும். இதன் தொடக்க விலை ரூ.89 ஆயிரம் ஆகும்.

உலக அளவில் மொபைல் போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் இதுவரை 12 கோடி ஐபோன்களை விற்பனை செய்துள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 10 சதவீத பங்களிப்புடன் ஆப்பிள் நிறுவனம் 5ம் இடத்தில் உள்ளது.