மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு

பதிவு செய்த நாள் : 13 செப்டம்பர் 2017 03:29

புதுடில்லி

மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரு சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஏற்கனவே 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 1 சதவிகிதம் உயர்த்தி வழங்க  மத்திய அமைச்சரவையில் தீர்மானம்  இயற்றப்பட்டுள்ளது.

ஜூலை முதல் தேதி முன் தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்படும் என்றும் இதனால் 50 லட்சம் அரசு ஊழியர்கள்  61 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.