நோயிலிருந்து தற்காப்பு!

பதிவு செய்த நாள் : 13 செப்டம்பர் 2017

குழந்­தை­கள் முதல் பெரி­ய­வர்­கள் வரை உட­லில் ஏற்­ப­டும் பல்­வேறு பாதிப்­பு­கள், அவற்றிற்­கான கார­ணங்­கள் பின்­வி­ளை­வு­களை பற்றி யாருமே சிரத்­தை­யெ­டுத்­துக் கொள்­வ­தில்லை. இன்­னும் பல­ருக்கு நோய்க்­கான அறி­கு­றி­கள்­தானா அது என்­பது கூட தெரி­வ­தில்லை.

இப்­ப­டிப்­பட்ட சந்­தே­கங்­க­ளுக்கு தெளி­வான விளக்­கங்­களை மருத்­து­வர்­கள் அளிக்­கும் நிகழ்ச்சி "டாக்­ட­ரி­டம் கேளுங்­கள்." இது ஞாயி­று­தோ­றும் காலை 10 மணிக்கு நியூஸ் 7 தமி­ழில் நேர­லை­யாக ஒளி­ப­ரப்­பா­கி­றது.

இந்த நிகழ்ச்­சி­யில் ஒவ்­வொரு வார­மும் புற்­று­நோய், நரம்­பி­யல், எலும்பு, மூட்டு உள்­ளிட்ட பல்­வேறு துறை சார்ந்த மருத்­துவ வல்­லு­னர்­கள் கலந்து கொள்­கின்­ற­னர்.  நேயர்­கள் தங்­கள் கேள்­வி­களை தொலை­பேசி வாயி­லாக கேட்டு உட­ன­டி­யாக அதற்­கான விளக்­கங்­களை நேர­டி­யா­கவே பெற்­றுக்­கொள்­ள­லாம். மேலும் வித்­தி­யா­ச­மான பல உடல் சம்­பந்­தப்­பட்ட பிரச்­னை­கள், அவற்றிற்கு மருத்­து­வ­து­றை­யில் தற்­போது இருக்­கும் அதி­ந­வீன சிகிச்­சை­மு­றை­கள் பற்­றிய சந்­தே­கங்­க­ளுக்­கும் டாக்­டர்­கள் விளக்­கம் அளிக்­கின்­ற­னர்.

"ஆரோக்­கி­ய­மாக நம்மை பரா­ம­ரிப்­பது மட்­டு­மின்றி நோய்­கள் வரா­மல் நம்மை நாமே தற்­காத்­துக்­கொள்­வது பற்­றிய விழிப்­பு­ணர்­வை­யும் மக்­கள் மத்­தி­யில் ஏற்­ப­டுத்­து­வ­து­தான் இந்த நிகழ்ச்­சி­யின் முக்­கிய நோக்­கம்" என்­கி­றார் இந்த நிகழ்ச்­சியை தயா­ரித்து,தொகுத்து வழங்­கும் மனோஜ்.