உங்கள் கவனத்திற்கு...

பதிவு செய்த நாள் : 13 செப்டம்பர் 2017

வாட்ஸ்­ஆப், பேஸ்­புக், டுவிட்­டர் உள்­ளிட்ட சமூக வலைத்­த­ளங்­க­ளு­டன் செய்தி சேனல் போட்டி போட­வேண்­டிய கட்­டா­யத்­தில் உள்­ளன. இதன் கார­ண­மாக, பிரேக்­கிங் நியூஸ் வழங்­கு­கி­றோம் என்ற பெய­ரில் மக்­கள் மீது ஒரு ஊட­கத் தாக்­கு­தலே நடத்­தப்­ப­டு­கி­றது. அனைத்து அர­சி­யல்­வா­தி­க­ளும் தலைப்­புச் செய்­தி­க­ளில் இடம்­பி­டிக்க முந்­து­கி­றார்­கள். இதன் கார­ண­மாக, சாதா­ர­ண­மாக கடந்து செல்­லக்­கூ­டிய செய்­தி­கள் கூட முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தது போல பூதா­க­ர­மாக்­கப்­ப­டு­கின்­றன.

ஆனால், ஊதிப் பெரி­தாக்­கப்­ப­டும் இது போன்ற வெற்று பர­ப­ரப்­பு­க­ளால் உணர்­வுப்­பூர்­வ­மா­க­வும், ஆழ­மா­க­வும் விவா­திக்­கப்­பட வேண்­டிய பல செய்­தி­கள் மக்­க­ளின் கவ­னத்­தில் இடம்­பெ­றா­ம­லேயே போய்­வி­டு­கின்­றன.

கவ­னம் பெற தவ­றிய முக்­கிய செய்­தி­களை மக்­கள் பார்­வைக்கு கொண்டு வரு­வதே ”விட்­ட­தும் தொட்­ட­தும்”. இந்­நி­கழ்ச்சி சனி­தோ­றும் மாலை 6.30 மணிக்கு புதிய தலை­மு­றை­யில் ஒளி­ப­ரப்­பா­கி­றது.