ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 13–9–17

பதிவு செய்த நாள் : 13 செப்டம்பர் 2017

என்னுடைய  ராஜா!

(சென்ற வார தொடர்ச்சி...)

பாலு­ம­கேந்­திரா கூறு­கி­றார்…

(இளை­ய­ராஜா என்ற மகா­வித்­வா­னும் நானும்...)

''எழு­ப­து­க­ளின் முற்­ப­குதி. ஒளிப்­ப­தி­வா­ள­ராக மட்­டும் நான் பணி­யாற்­றிக் கொண்­டி­ருந்த காலம். கேர­ளத்­தில் மலை­யா­ளப் படங்­க­ளில் பணி­பு­ரிந்து கொண்­டி­ருக்­கும்­போது ஒரு தெலுங்­குப் பட­வாய்ப்பு வந்­தது. அந்த படத்­தின் இயக்­கு­னர் சிங்­கீ­தம் சீனி­வா­ச­ராவ். ராஜாஜி கதை­யான 'திக்­கற்ற பார்­வதி'யை தமி­ழில் பட­மாக எடுத்­துத் தேசிய விருது பெற்­ற­வர்.

'திக்­கற்ற பார்­வதி'யைத் தொடர்ந்து 'தரம்­மா­றிந்தி' என்ற தெலுங்கு படத்தை இயக்க அவர் ஒப்­பந்­த­மா­கி­யி­ருந்­தார். அந்த படத்தை நான் ஒளிப்­ப­திவு செய்­ய­வேண்­டும் என்று அவர் ஆசைப்­பட்­டார். ஒத்­துக்­கொண்­டேன். அந்­தக் காலத்­தில் பிர­ப­ல­மாக இருந்த ஜி.கே. வெங்­க­டேஷ் என்ற இசை­ய­மைப்­பா­ளர்­தான் அந்த படத்­திற்கு இசை. ஜி.கே. வெங்­க­டேஷ் எம்.எஸ்.வி.யுடன் பணி­யாற்­றி­ய­வர். நல்ல இசை ஞானம் உள்­ள­வர். அந்த படத்­திற்­கான மியூ­சிக் கம்­போ­சிங் மாம்­ப­லத்­தி­லி­ருந்த தயா­ரிப்­பா­ளர் அலு­வ­ல­கத்­தில் நடை­பெ­றும். இசை­ய­மைப்­பா­ளர் ஜி.கே.வெங்­க­டே­ஷு­டன், கம்­போ­சிங் உத­வி­யா­ள­ராக தேனி­யைச் சேர்ந்த ஒரு இளை­ஞன் கூடவே வரு­வான். கிட்­டார் கொண்டு வரு­வான். அவன் பெயர் இளை­ய­ராஜா.

நான் ஒளிப்­ப­திவு செய்­யும் படங்­க­ளின் மியூ­சிக் கம்­போ­சிங், டான்ஸ் ரிகர்­ஸல் மற்­றும் எடிட்­டிங் போன்­ற­வற்­றுக்­கெல்­லாம் நான் போய் உட்­கா­ரு­வது வழக்­கம். அந்த தெலுங்­குப் படத்­தின் மியூ­சிக் கம்­போ­சிங்­கின் போது­தான் இளை­ய­ரா­ஜா­வுக்­கும் எனக்­கும் நட்பு ஏற்­பட்­டது. நான் பூனே திரைப்­ப­டப் பள்­ளி­யில் பயின்று தங்­கப் பதக்­கம் வென்­ற­வன் என்­ப­தாலோ, அல்­லது எனது ஒளிப்­ப­தி­வின் நேர்த்­தி­யால் கவ­ரப்­பட்­ட­தாலோ, இளை­ய­ராஜா சினி­மா­வைப் பற்­றி­யும், ஒளிப்­ப­தி­வின் நுட்­பங்­கள் பற்­றி­யும் என்­னி­டம் நிறைய பேசு­வார். தெரிந்து கொள்ள வேண்­டும் என்ற அவ­ரது ஆர்­வம் என்னை வெகு­வா­கக் கவர்ந்­தது. நிறைய பேசு­வோம். நேரம் போவது தெரி­யா­மல் பேசு­வோம்.

என்றோ ஒரு நாள், தான் இசை­ய­மைக்­கப் போகும் தனது முதல் படத்­திற்­கென்று அவர் போட்­டு­வைத்­தி­ருந்த மெட்­டு­களை எனக்கு பாடி காண்­பிப்­பார். சில வரு­டங்­கள் கழித்து அவர் இசை­ய­மைத்த முதல் பட­மான 'அன்­னக்­கிளி'யின் மெட்­டுக்­கள் சில அவர் எனக்­குப் பாடிக்­காண்­பித்­த­வை­தான். இளை­ய­ராஜா என்ற அந்த கிரா­மத்து இளை­ஞ­ரின் அசாத்­தி­ய­மான திறன் என்னை அதிர வைத்­தது.

நான் இயக்­கும் முதல் படத்­திற்கு இளை­ய­ரா­ஜா­வைத்­தான் இசை­ய­மைப்­பா­ள­ராக வைத்­துக் கொள்ள வேண்­டும் என்று முடிவு பண்­ணி­யி­ருந்­தேன்.

எனது எண்­ணத்தை ஜி.கே. வெங்­க­டே­ஷி­டம் தெரி­யப்­ப­டுத்­த­வும் செய்­தேன். அது கேட்ட ஜி.கே. வெங்­க­டேஷ் சொன்ன தீர்க்­க­த­ரி­சன வார்த்­தை­கள் எனக்கு இன்­னும் பசு­மை­யாக ஞாப­கம் இருக்­கின்­றன.

''பாலு! இந்த பய­லுக்கு மட்­டும் நீங்க ஒரு சான்ஸ் கொடுத்­தீங்க, அம்­புட்­டுத்­தான், எல்­லா­ரை­யும் துாக்கி ஓரங்­கட்­டி­டு­வான்.''

அப்­ப­டி­யே­தான் நடந்­தது. ஆனால் சான்ஸ் கொடுத்­தது நானல்ல. பஞ்சு அரு­ணா­ச­லம் என்ற தயா­ரிப்­பா­ளர். அவர் தயா­ரிப்­பில் வந்த 'அன்­னக்­கிளி' படத்­தின் மூலம் இளை­ய­ராஜா என்ற மேதையை தமி­ழர்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்தி வைத்­தார்.

'அன்­னக்­கிளி' பட­மும், அதற்­கான இளை­ய­ரா­ஜா­வின் இசை­யும் மிகப்­பெ­ரிய வெற்­றி­யீட்­டின. 'அன்­னக்­கிளி' படத்­திற்­குப் பின் ராஜா­வுக்கு உட்­கார நேர­மில்­லாது தொடர்ந்து பணி­யாற்­றிக்­கொண்­டி­ருந்­தார். வெற்றி மேல் வெற்றி. தங்­க­ளு­டைய மண்­ணின் இசையை, தமி­ழர்­கள் இளை­ய­ராஜா என்ற இந்த கிரா­மத்து இளை­ஞன் மூலம் தெரிந்து கொண்­டார்­கள். ராஜா­வின் இசை, தமி­ழர்­க­ளின் இசை. தமிழ் மண்­ணின் இசை. தமிழ் கிரா­மங்­க­ளின் மண்­வா­ச­னை­யோ­டும், அந்த மக்­க­ளின் வியர்வை வாச­னை­யோ­டும் கலந்து வந்த இசை.

பூனே திரைப்­ப­டக் கல்­லுா­ரி­யில் எனது படிப்பை முடித்து தங்­கப்­ப­தக்­கம் வென்று நான் வெளி­வந்த வரு­டம் 1969. 'செம்­மீன்' புகழ் ராமு கரி­யாத், செம்­மீனை அடுத்து இயக்­கிய 'நெல்லு' என்ற மலை­யாள படத்­தின் ஒளிப்­ப­தி­வா­ள­ராக என்னை அறி­மு­கப்­ப­டுத்­து­கி­றார். வரு­டம் 1971.

'நெல்லு' படத்­தின் இசை­ய­மைப்­பா­ளர் சலீல் சவுத்ரி. 'செம்­மீன்' படத்­திற்­கும் அவர்­தான் இசை­ய­மைத்­தி­ருந்­தார். இந்­திய திரை­யி­சை­யின் மகா­மே­தை­க­ளில் ஒரு­வர் சலீல் சொத்ரி. 'நெல்லு' படத்­தின் ஒளிப்­ப­தி­வைப் பார்த்து பிர­மித்­துப் போன அவர் என் மீது மிக­வும் பிரி­ய­மாக இருந்­தார். அந்­தப் பிரி­யத்­தின் வெளிப்­பா­டாக அவர் ஒரு நாள் என்­னி­டம் சொன்­னார்.  “பாலு! நீ இயக்­கும் முதல் படத்­திற்கு நான் தான் இசை­ய­மைப்­பேன்”. இந்­திய இசை­வா­னில் தன்­னி­க­ரற்ற தனி நட்­சத்­தி­ர­மா­கத் திகழ்ந்த அந்த மகா வித்­வா­னின் அன்­புக் கட்­டளை அது. அவர் விரும்­பி­ய­ப­டியே,எனது முதற் பட­மான 'கோகிலா'வுக்கு அவரே இசை­ய­மைத்து என்னை ஒரு இயக்­கு­ன­ரா­கத் துவக்கி வைத்­தார். அது நடந்த வரு­டம் 1976.

எனது முதல் படத்­தின் இசை­ய­மைப்­பா­ள­ராக எனது நண்­பர் இளை­ய­ரா­ஜா­வைத்­தான் வைத்­துக் கொள்ள வேண்­டும் என்று ஆசைப்­பட்­ட­வன் நான். கன்­னட 'கோகிலா'வைத் தொடர்ந்து நான் இயக்­கிய இரண்­டா­வது படம் 'அழி­யாத கோலங்­கள்' தமிழ் படம்.

இந்த படத்­திற்­கும் சலீல் சவுத்­ரியே இசை­ய­மைத்­தார். அவ­ரது வேண்­டு­கோளை என்­னால் தட்­ட­மு­டி­ய­வில்லை.

78-ல் நான் இயக்­கிய எனது மூன்­றா­வது படம் 'மூடு­பனி.' இந்த படத்­திற்­குத்­தான் நான் இளை­ய­ரா­ஜாவை வைத்­துக் கொள்ள முடிந்­தது.

'மூடு­பனி' எனக்கு மூன்­றா­வது படம். இளை­ய­ரா­ஜா­வுக்கு அது நுாறா­வது படம். இளை­ய­ராஜா அத்­தனை வேக­மா­கப் போய்க்­கொண்­டி­ருந்­தார்.

'மூடு­பனி'யில் தொடங்கி 2005-ல் வெளி­வந்த 'அது ஒரு கனாக்­கா­லம்' வரை எனது எல்லா படங்­க­ளுக்­கும் இளை­ய­ரா­ஜா­தான் இசை­ய­மைப்­பா­ளர்.

நடி­கர், இயக்­கு­னர், தயா­ரிப்­பா­ளர், சசி­கு­மார் தயா­ரிப்­பில் இப்­பொ­ழுது நடந்து கொண்­டி­ருக்­கும் 'தலை­மு­றை­கள்' என்று (தற்­கா­லி­க­மாக) பெய­ரி­டப்­பட்­டி­ருக்­கும் எனது 22-வது படத்­திற்­கும் இளை­ய­ரா­ஜா­தான் இசை. இதை நான் இன்­னும் ராஜா­வி­டம் சொல்­ல­வில்லை. படத்தை முடித்து அவ­ருக்­குப் போட்­டுக் காண்­பித்­த­பின் சொல்­ல­லா­மென்­றி­ருக்­கி­றேன்.

இன்­னும் ஐந்­தாறு படங்­க­ளா­வது செய்­து­விட்­டுப் போக­வேண்­டும் என்­பது என் எண்­ணம். கண்­டிப்­பா­கச் செய்­வேன். அவை எல்­லா­வற்­றிற்­கும் இசை எனது ராஜா­தான். அதில் மாற்­றம் கிடை­யாது.''

-– தொடரும்