ஏற்றுமதி உலகம்: ஏற்றுமதி வேலை வாய்ப்புகளை உருவாக்கும்

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2017

இந்தியாவின் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான வழிகளை கண்டுபிடித்து, உற்பத்தித் தொழில்களை உருவாக்குவன் மூலம், இன்னும் அதிகம் வேலை வாய்ப்புகளை இந்த துறையில் உருவாக்கலாம் என கருதி இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நிபுணர் பணிக்குழு நிதி ஆயோக் துணைத் தலைவரான டாக்டர் ராஜீவ் குமாரை தலைவராக நியமிக்கப்பட்டு ஏற்படுத்தப்படுள்ளது. ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகமான கட்டுப்பாடுகளான தொழிலாளர், மற்றும் சேவைகளுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம், வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்றால், ஏற்றுமதி துறை முன்னேற்றம் மற்றும் அதிக வேலை வாய்ப்புகள்.

சீனா இந்தியா வர்த்தகம்

சீனாவுடன் கூடி வரும் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க,  இந்தியாவில் இருந்து அதிக ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்காக, தொழில் சார்ந்த குறிப்பிட்ட குழுக்களை அமைக்க இந்தியா, சீனா ஒத்துக் கொண்டுள்ளது. ஐந்தாவது கிழக்கு ஆசியா உச்சிமாநாட்டில் (EAS) பொருளாதார மந்திரிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் இது பற்றி சுரேஷ் பிரபு கூறியுள்ளார். இது இந்தியா, சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறைகளை களையும். இன்னும் இந்தியாவில் இருந்து அதிகம் சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய வழி வகுக்கும்.

செருப்பு ஏற்றுமதி

இன்று இந்தியாவில் பல பிரபலமான பிராண்ட்களின் செருப்புகள், ஷீக்கள் மற்றும் உலகத்தின் பிரபலமான பிராண்ட்களின் செருப்புகள், ஷீக்கள் ஆக்ராவிலும் தயாராகின்றன என்றால் நம்ப முடிகிறதா? அந்த அளவிற்கு ஆக்ரா செருப்பு உற்பத்தி தொழிலில் முன்னேறி உள்ளது.  ஆக்ரா என்றால் தாஜ்மஹால் தான் கண் முன்னே வரும். இது தவிர ஆக்ராவில் தயாராகும் ஒருவகை பேடாவும் மிகவும் பிரசித்தம் (பூசனிக்காயிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை சுவீட்). ஆக்ரா இவைகள் தவிர மற்றொன்றுக்கும் மிகவும் பிரசித்தி பெற்றது. செருப்பு தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியில் ஆக்ரா மிகவும் சிறந்து விளங்குகிறது. செருப்பு தயாரிப்பில் இந்தியாவில் கோலாப்பூர், ஆக்ரா, சென்னை, கான்பூர் ஆகியவை மிகவும் சிறந்து விளங்குகின்றன. இதில் ஆக்ராவில் தயாரிக்கப்படும் செருப்புக்களில் பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவின் செருப்பு ஏற்றுமதியில் 28 சதவீதம் ஆக்ராவிலிருந்து தான் நடக்கிறது. இங்கு சுமார் 100 கம்பெனிகள் இருக்கின்றன. வருடத்திற்கு சுமார் 2500 கோடி ரூபாய்கள் அளவிற்கு செருப்புகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

* * *