ஏற்றுமதி --– இறக்குமதி கேள்வி -– பதில்

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2017

கேள்வி: நாங்கள் சிங்கப்பூரில் உள்ள ஒரு கம்பெனிக்கு சரக்குகளை கலெக்ஷன் மூலமாக அனுப்பினோம். அவர் சரக்குகளை எடுக்கவில்லை. தற்போது வேறோரு கம்பெனிக்கு சரக்குகளை மாற்றி விற்க விரும்புகிறோம். இது முடியுமா? என்ன செய்ய வேண்டும்?

பதில்: கட்டாயம் முடியும். நீங்கள் அனுப்பிய சரக்குகளை முதலில் ஆர்டர் கொடுத்தவர் எடுக்காத பட்சத்தில், இரண்டாவது பையர் கண்டுபிடித்து அவர் கம்பெனி பெயருக்கு மாற்றிக் கொடுத்து விற்கலாம். இதை ரிசர்வ் வங்கியும் அனுமதிக்கிறது.

கேள்வி: இந்தியாவில் இறக்குமதி வளர்ச்சி கழகங்கள் இருக்கின்றதா?

பதில்: இறக்குமதியையே நம்பி இருக்கும் நாடுகள் இறக்குமதி வளர்ச்சி கழகங்களை வைத்திருக்கின்றன. இந்தியாவில் உற்பத்தி பெரும்பாலான பொருட்களில் தேவையான அளவு இருக்கிறது. ஆதலால் இறக்குமதி வளர்ச்சி கழகங்கள் இல்லை. குறிப்பாக நாம் இறக்குமதி செய்வது கச்சா எண்ணெய், வைரம், தங்கம் போன்றவை தான் அதிகம்.

இந்த இறக்குமதி வளர்ச்சி கழகங்கள் உங்களுக்கு நல்ல தரமான இறக்குமதியாளர்களை கண்டுபிடிக்க உதவி செய்யும்.

* * *

உங்கள் சந்தேகங்களுக்கு

உங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள், எழுத வேண்டிய ஈமெயில் முகவரி: sethuraman.sathappan@gmail.com.  

ப்ளாக்: sethuramansathappan.blogspot.com.   மொபைல்: 098 204 51259