ஏஞ்சல் பண்டிங் – சென்னை ஏஞ்சல்ஸ்

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2017

இந்த யூனிகார்ன் காலத்தில் உங்கள் புதிய ஐடியாக்களுக்கு எப்படி பண்டிங்-களை எப்படி திரட்டுவது என்பது பற்றி பார்த்து வந்தோம். வங்கிகள் மூலம் பண்டிங், கிரவுட் பண்டிங், பியர் டூ பியர் பண்டிங், ஏஞ்சல் பண்டிங் ஆகியவை பிரதானமாக இருந்தன.

இந்த வாரமும் ஒரு சிறந்த ஏஞ்சல் பண்டிங் நிறுவனத்தைப் பார்ப்போம்.

தி சென்னை ஏஞ்சல்ஸ் என்ற இந்த நிறுவனம் பல நிறுவனங்களுக்கு பண்டிங் செய்து அவை இன்று பெரிய கம்பெனிகளாக மாறியிருக்கின்றன.

சாதாரணமாக ஏஞ்சல் பண்டிங் என்பது புதுமையான தொழில்களுக்கு நல்ல ஊக்கம் கிடைக்கும். அந்த வகையில் பார்த்தால் சென்னை ஏஞ்சல்ஸ் பண்டிங் செய்த கம்பெனிகளை பார்க்கலாம். அவைspareshub.com.  இது ஒரு ஆட்டோமொபைல் மார்க்கெட் ப்ளேஸ் ஆகும்.

Ragtagger LifeStyle Pvt Ltd., இந்த கம்பெனி டீன் ஏஜ் பருவத்தினருக்காக உள்ளாடைகளை தயாரிக்கிறது. Brag என்ற ப்ராண்டில் கொண்டு வந்திருக்கிறது. இவர்களின் இணையதள முகவரி www.bragstore.com.

EVegetailing என்ற கம்பெனி நல்ல தரமான காய்கறிகள் மக்களைச் சென்றடைய உதவுகிறது. மற்றும் EdgeFX Technologies Pvt Ltd.,  Octothrope (Hitwicket),  Hoursglass Design Pvt Ltd., NetTree E-Technologies Pvt Ltd., SP Robotic Works Pvt Ltd (Education),  Betaout (Ecommerce),  Finbud Financial Services Company Pvt Ltd., (Finance),  Agile Parking Solutions Pvt Ltd.,  Novicle Technologies Pvt Ltd., (Ecommerce), Ketto Online Services Company Pvt Ltd., (Crowd Funding)  போன்ற 40க்கும் மேற்பட்ட கம்பெனிகளை துவக்க ஏஞ்சல் பண்டிங் செய்து உதவியிருக்கிறது. இந்த கம்பெனிகள் எல்லாம் இன்று சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எப்படி செயல்படுகிறது?

ப்ரீஸ்கிரீனிங் / ஸ்கிரீனிங் – இதற்கு  8 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. மேலே கண்ட் ஸ்கிரினிங் வெற்றிகரமாக இருந்தால் – அதன் பிறகு டீப்

டிரைவ் – இதற்கு 4 நாட்கள் எடுத்துக் கொள்கிறது.

டீப் டிரைவுக்கு பிறகு – நீங்கள் ப்ரசண்டேஷன் செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் நேரடியாக செல்ல வேண்டும் – இதற்கு 12 நாட்கள் எடுத்து கொள்ளப்படுகிறது. ப்ரசண்டேஷன் சக்ஸஸ்புல்லாக இருந்தால் பின்னர் டேர்ம் ஷீட் – இதற்கு 10 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

டேர்ம் ஷீட்-க்கு பிறகு உங்களைப் பற்றி, உங்கள் கம்பெனியைப் பற்றிய முழு விபரங்களை திரட்டுகிறது. பின்னர் ஒத்துக் கொள்ளப்பட்ட பண்டிங்கை தர முன் வருகிறது – இதற்கு 90 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இது தான் ஒரு ஏஞ்சல் பண்டிங் கம்பெனியின் பண்டிங் முறையாகும்.

இதன் மூலம் என்ன தெரிகிறது?

உங்கள் கம்பெனி அவர்களுக்கு பிடித்திருந்தால் அவர்கள் பண்டிங் கொடுக்க சுமார் 120 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஆகும். இந்த கம்பெனியில் 84 தனிப்பட்ட ஏஞ்சல் இன்வஸ்டர்கள் இருக்கிறார்கள்.

இது தவிர 9 இன்ஸ்டிடியூசனல் இன்வஸ்டர்களும் இருக்கிறார்கள். இவர்கள் மொத்தமாக போடும் பணத்தை வைத்துத் தான் புதிய தலைமுறைகளின் புதிய எண்ணங்களுக்கு வடிவு கொடுக்கப்படுகிறது.

இவர்களின் இணையதள முகவரி www.thechennaiangels.com சென்று பாருங்கள் நாளை உங்களையும் இந்த இணையதளம் தொழிலதிபராக ஆக்கலாம்.

* * *