நீங்கள் செலவாளியா, சிக்கனமானவரா, கருமியா ஜாதகத்தை வைத்து கண்டுபிடிக்கலாம்! – ஜோதிடர் என்.ஞானரதம்

பதிவு செய்த நாள் : 10 செப்டம்பர் 2017ஒரு சிலருக்கு கை நிறைய பணம் வந்தாலும் அது தன் கையில் நிக்க மாட்டேங்குது என்று புலம்புவதை நாம் கேட்டிருக்கின்றோம். இன்னும் சிலர் வரவை விட செலவே அதிகமாகின்றது என்றும் மேலும் சிலர் எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியவில்லை என்று ஏங்குகின்றனர். ஆனால், ஒரு சிலருக்கு மட்டுமே சேமிக்கும் பழக்கம் அதிகம் ஏற்படுவதை நாம்  காணமுடிகிறது. இதற்கு ஏற்ற பழமொழியைப் பார்க்க போனால் சிறு துளி பெரு வெள்ளம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவ்வாறு சிறுகச் சிறுக சேர்த்து வைப்பதற்கும் ஜாதகத்திற்கும் சம்பந்தம் உண்டா என்று கேட்டால் நிச்சயம் உண்டு என்றே சொல்லலாம். அதாவது இனி ஜாதக ரீதியாக என்ன காரணம் என்று பார்க்கும் போது ஒருவரை நாம் செலவாளியா அல்லது சிக்கனமானவரா அல்லது கருமியா என்பதை ஜாதகத்தை வைத்தே கண்டுபிடித்து விடலாம்.

செலவாளிக்கான கிரகம் எது?

கோள்களின் அடிப்படையில் பார்க்கும் போது சுக்கிரன் நன்கு பலம் பெற்றிருக்கும் போது அதாவது ஆட்சி, உச்சம், கேந்திரம் மற்றும் திரிகோணங்களில் இருக்கும் போது நிச்சயம்  ஆடம்பரமாக செலவு செய்வதில் ஆர்வம் கொண்டவராக இருப்பார்.  

செலவுகளை எவ்வகையாக பிரிக்கலாம்-?

செலவுகளை இரண்டாக பிரிக்கலாம். அவை சுப செலவு, அசுப செலவு. ஒருவர் செலவினை மேற்கொள்ள வேண்டுமானால் அவர்களின் ஜாதகத்தில் விரைய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய பன்னிரெண்டாம் ஸ்தானம் மிக முக்கியமானது. அந்த இடத்தில் அசுப கிரகம் இருந்தால் கெட்ட செலவுகள் அதாவது மருத்துவ செலவு, மது பழக்கத்திற்கான செலவு, விபத்திற்கான செலவு, இறப்பிற்கான அதாவது அதாவது ஈம காரிய செலவு திதி கொடுத்தல் போன்றவை. பன்னிரெண்டாம் இடத்தில் சுபகிரகங்கள் இருந்தால் சுப செலவு என்று சொல்லக் கூடிய தொலைதூரப் பயணம் மேற்கொள்ளுதல் அதாவது சுற்றுலா மற்றும் தேனிலவு மற்றும் கல்விச் செலவு மற்றும் திருமண செலவு போன்றவையை அடங்கி உள்ளது.

உதாரண ஜாதகம் ஒன்றில் இவர் மேஷ லக்னம் விருச்சிக ராசி அனுசம் நட்சத்திரம். இவரது ஜாதகத்தில் ஆடம்பரத்திற்கு அதிபதியான சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளது. இவரே இவரது ஜாதகத்தின் தனாதிபதியாகவும் உள்ளார். இவர் விரையத்தில் உள்ளதால் அளவுக்கு அதிகமாக வீண் விரையம் செய்வதற்கு இதுவே மிக முக்கியமான காரணமாயிற்று. மற்றும் விரையாதிபதியாகிய குருவும் லக்னத்தில் உள்ளார். இவர் செலவாளி என்பது இதுவே தக்கச் சான்றாக அமைகிறது.

பணம் கையில் தங்க

தங்கள் வீட்டில் கல்லா பெட்டி என்று சொல்லக் கூடிய லாக்கர் மற்றும் பர்சில் வெள்ளியிலான லக்ஷ்மியின் காசு வைத்திருப்பதும் மற்றும் அதற்கு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி அல்லது கற்பூரம் காட்டி வருவதும் தங்களுக்கு வந்த பணம் கையில் தங்கவும் மற்றும் பணம் கையில் சேரவும் உதவும்.

* * *