புலிகேசியுடன் வெளிநாட்டு நடிகர்கள்!

பதிவு செய்த நாள் : 10 செப்டம்பர் 2017

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் `இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் இருந்து ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக மற்றொரு பாடலை இயக்க படக்குழு தீவிரம் காட்டி வருகிறார்கள்.

அந்த பாடல் பிரம்மாண்டமாக எடுக்கப்பட உள்ளர்கள். அந்த பாடலுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளார்களாம். அதில் 30-க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டு நடனக் கலைஞர்கள் பங்கேற்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தில் வடிவேலு ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கிறார். சிம்பு தேவன் இயக்கவிருக்கும் இப்படத்தை ஷங்கரின் எஸ். பிக்சர்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷ்ன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.