‘ஒட்டன் சத்திரம்’ விநாயகம்!

பதிவு செய்த நாள் : 10 செப்டம்பர் 2017

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த ‘வீரம்’ இந்தியில் ரீமேக் ஆகிறது . அஜீத் நடித்த ‘ஒட்டன் சத்திரம்’ விநாயகம் கேரக்டரில் இந்தியில் சல்மான் கான் நடிக்க இருக்கிறார் என்று அப்போது பேசப்பட்டது. ஆனால் இப்போது கிடைத்த புதிய தகவலின்படி ‘ஒட்டன் சத்திரம்’ விநாயகம் கேரக்டரில் பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான அக்ஷ்ய் குமார் நடிக்க இருக்கிறார் . ‘வீரம்’ இந்தி ரீ-மேக்கை இந்தியில் ‘ஹவுஸ்புல்- 3’ என்ற படத்தை இயக்கிய இருவர்களில் ஒருவரான பர்ஹத் இயக்கவிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.