களத்தில் இறங்கிவிட்டார்!

பதிவு செய்த நாள் : 10 செப்டம்பர் 2017

சமூகப்படங்களை கருத்தாழத்தோடு மண்ணின் பதிவுகளாக முன் வைத்து வருபவர் இயக்குனர் சேரன். தனது படங்கள் மூலமாக மட்டுமல்லாமல் சமூக வலைதளங்கள் வழியாகவும் மக்கள் பிரச்னைகளை வெளிப்படுத்தியும் குரல்கொடுத்தும் வருகிறார்.

அதன் நீட்சியாக தற்போது “வாக்காளன் குரல்” என்கிற டுவிட்டர் பக்கத்தை ஆரம்பித்துள்ளார்  சேரன். இப்பக்கத்தில் மக்கள் தங்கள் பகுதிகளிலுள்ள பிரச்னைகளை படத்தோடு பதிவு செய்யலாம். அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த தளம் கொண்டு செல்லும். தீர்வுகள் கிடைக்க இப்பகிர்வுகள் மூலம் அழுத்தம் கொடுக்கலாம் என்பது இயக்குனர் சேரனின் நோக்கம்.

“வாக்காளனின் குரல் ஒலிக்க வேண்டும். பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும்” என்பது மட்டுமே இப்பக்கத்தின் நோக்கம்.