‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளே போகமாட்டேன் சாமீ!

பதிவு செய்த நாள் : 10 செப்டம்பர் 2017

‘பிக்பாஸ்’ வீட்டிலிருந்து எப்போதோ அனுப்பபட்டவர் கஞ்சா கருப்பு. தற்போது இவர்‘சந்தனத்தேவன்’, ‘அருவா சண்ட’, ‘கிடா விருந்து’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

‘பிக்பாஸ்’ வீட்டிலிருந்து வெளியேறியவர்களில் ஆர்த்தி, ஜூலி என ஒவ்வொருவராக சிலர் மீண்டும் உள்ளே போகிறார்களே.. கஞ்சா கருப்புவும் அப்படி மீண்டும் செல்வாரா என்று கேட்டால், “ஆளை விடுங்கப்பா சாமீ.. அது வேற ஏரியா.. கொஞ்சம் சூதானமாத்தான் நடந்துக்கணும்.. நமக்கெல்லாம் அது செட்டாகாதுப்பா” என சிம்ப்பிளாக முடித்துக்கொள்கிறார்.

‘பிக் பாஸ்’ ஷோவே ஒரு ஸ்கிரிப்ட் தான், அதன்படிதான் அங்குள்ளவர்கள் நடிக்கிறார்கள், நடந்து கொள்கிறார்கள் என சொல்லப்படுகிறதே என கேட்கும் முன்னே நம்மை மறித்து, “அதெல்லாம் சும்மா சொல்றவங்க எதுனா சொல்லுவாங்க பாஸ். அந்த வீட்டுக்குள்ளாற இருக்கிறவங்க அவங்கவங்க நடந்துக்கிறது எல்லாமே அவங்களா தீர்மானிக்கிறதுதான். ஸ்கிரிப்ட்டா இருந்தா, நடிப்பா இருந்தா அடுத்த செகன்ட்லயே வெளியே தெரிஞ்சிடுமே..” என்கிறார்.