புதிய ஐந்து கோள்கள்!

பதிவு செய்த நாள் : 08 செப்டம்பர் 2017

சூரிய மண்­ட­லத்­திற்கு அப்­பால் ஐந்து புதிய கோள்­களை, வானி­யல் வல்­லு­னர்­கள் கண்­டு­பி­டித்­துள்­ள­னர். இங்­கி­லாந்­தின், தெற்கு வான் பகு­தியை, 'வாஸ்ப் சவுத்' என்ற எட்டு கேம­ராக்­க­ளைக் கொண்ட சாத­னம் மூலம், 'கீல்' பல்­க­லைக் கழக ஆய்­வா­ளர்­கள் ஆராய்ந்து வந்­த­னர். அவர்­கள் சமீ­பத்­தில் ஐந்து கோள்­க­ளைக் கண்­டு­பி­டித்­த­னர். ஐந்து புதிய கோள்­க­ளுக்­கும் வாஸ்ப் - 119 பி, வாஸ்ப் - 124 பி, வாஸ்ப் - 126 பி, வாஸ்ப் - 129 பி மற்­றும், வாஸ்ப் - 133 பி என்று பெய­ரிட்­டுள்­ள­னர். இவை ஐந்­தும், சூரி­ய­னைப் போலவே உள்ள நட்­சத்­தி­ரங்­களை மைய­மா­கக் கொண்டு வலம் வரு­கின்­றன. இவை மிக­வும் வெப்­ப­மா­னவை. இவற்­றின் வெப்­பம் மற்­றும் அடர்த்­தியை வைத்­துப் பார்க்­கை­யில், இவை சூரி­யனை விட அதிக வய­துள்­ள­தாக இருக்­க­லாம் என்று ஆய்­வா­ளர்­கள் மதிப்­பிட்­டுள்­ள­னர்.