'வர்ச்­சு­வல் ரியா­லிட்டி' கருவி

பதிவு செய்த நாள் : 08 செப்டம்பர் 2017

மொபைல் போன்­க­ளின் செயல்­பா­டு­களை விட அனைத்து அம்­சங்­க­ளி­லும் உயர்ந்த, துல்­லி­ய­மா­கப் பயன்­ப­டுத்­தக் கூடிய வகை­யி­லான, தக­வல் தொடர்பு சாத­னம்­தான் 'வர்ச்­சு­வல் ரியா­லிட்டி' கரு­வி­கள். இந்­தக் கரு­வி­கள் தயா­ரிப்­பில் கூகுள், ஆப்­பிள், மைக்­ரோ­சாப்ட், சாம்­சங், ஹெச்.டி.சி. போன்ற பெரிய நிறு­வ­னங்­க­ளுக்கு இடையே போட்டி ஏற்­பட்­டுள்­ளது. தக­வல் தொடர்­புக்­காக மட்­டுமே இருந்த சாதா­ரண போன்­க­ளில், அதி நவீன வச­தி­கள் புகுத்­தப்­பட்­ட­தும், 'ஸ்மார்ட் போன்'களாக மாறின. இப்­போது வர்ச்­சு­வல் ரியா­லிட்டி கரு­வியை தலை­யில் மாட்டி, கண் முன் காட்­சி­களை கொண்டு வர­லாம். கண் முன் இருக்­கும் அந்­தக் காட்­சி­களை, தொட்டு உணர முடி­யும். ஏன், வாச­னையை கூட உண­ர­லாம் என்­கின்­ற­னர் 'வர்ச்­சு­வல் ரியா­லிட்டி' தயா­ரிப்­பா­ளர்­கள்.