'லீப்­லிங்ஸ்' ஆயி­ரத்­தில் ஒரு­வர்

பதிவு செய்த நாள் : 08 செப்டம்பர் 2017

ஒரு வரு­டத்­தின் எண்­களை மிகுதி இல்­லா­மல் நான்­கால் வகுக்க முடிந்­தால் அது­தான் மிகு நாள் ஆண்டு (லீப் வரு­டம் - Leap Year). நூற்­றாண்­டு­கள் வரும்­போது அவை 400-ஆல் மிகுதி இல்­லா­மல் வகுக்­கப்­பட வேண்­டும்.

பூமி சூரி­யனை ஒரு முறை சுற்றி வர 365 நாட்­கள் ஆகி­றது. இதையே ஓர் ஆண்டு என்­கி­றோம். துல்­லி­ய­மா­கச் சொன்­னால் 365.242 நாட்­கள். அதா­வது 365 1/4 நாட்­கள். ஒரு வரு­டத்­தின் 365 நாட்­கள் போக மீத­முள்ள கால் நாள் நான்கு வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை வருட நாட்­க­ளில் சேர்க்­கப்­ப­டு­கி­றது. முதன் முத­லில் கி.மு. 45-ல் இதைச் சேர்த்­த­வர் சேர்த்­த­வர் ரோமா­னிய அர­சர் ஜூலி­யஸ் சீஸர் (Julius Caesar).

ஜூலி­யஸ் சீச­ருக்­குப் பிறகு, போப் கிரி­கோரி XIII (Pope Gregory XIII) என்­ப­வர் தான் வடி­வ­மைத்த காலண்­ட­ரில், 'மிகு நாள் ஆண்டு' (லீப் வரு­டம் - Leap Year) என்று பெய­ரிட்டு, பிப்­ர­வரி மாதத்­தில் 29 நாட்­கள் என்­ப­தைச் சேர்த்­தார். நாம் இப்­போது பயன்­ப­டுத்­தும் கிரி­கோ­ரி­யன் (Gregorian) காலண்­டர் இது­தான்.

சரா­ச­ரி­யாக, 1461 குழந்­தை­க­ளில் ஒரு குழந்தை லீப் வரு­டம் பிப்­ர­வரி 29-ஆம் தேதி பிறக்­கும் வாய்ப்­பைப் பெறு­கி­றது. பிப்­ர­வரி 29-ல் பிறக்­கும் குழந்­தை­கள் 'லீப்­லிங்ஸ்' (Leaplings) என்று அழைக்­கப்­ப­டு­கின்­ற­னர்.