வானவில்லே... வானவில்லே...!

பதிவு செய்த நாள் : 08 செப்டம்பர் 2017

மழைத் துளி­க­ளின் உள்ளே சூரிய ஒளிக்­க­திர்­கள் ஊடு­ரு­விச் செல்­லும்­போது வான­வில் தோன்­று­கி­றது. வான­வில்­லில், ஊதா (Violet), கரு­நீ­லம் (Indigo), நீலம் (Blue), பச்சை (Green), மஞ்­சள் (Yellow), ஆரஞ்சு (Orange), சிவப்பு (Red) ஆகிய ஏழு நிறங்­கள் உள்­ளன. இதை நினை­வில் வைத்­துக் கொள்­ளச் சுருக்­க­மாக 'விப்­கி­யார்' (VIBGYOR) என்­கி­றோம். வான­வில்­லில் ஏழு நிறங்­கள் உள்­ளன என்­ப­தைக் கண்­டு­பி­டித்­த­வர் ஐசக் நியூட்­டன் (Isaac Newton). இவை எல்­லாமே உங்­க­ளுக்­குத் தெரிந்த விஷயங்­கள்­தான்.

வான­வில் எப்­போ­தும் ஏழு நிறங்­க­ளோ­டு­தான் தோன்­றும் என்­ப­தில்லை. காலை, மாலை வேளை­க­ளில் தோன்­றும் வான­வில்­லில் மஞ்­சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்­கள் மட்­டுமே தோன்­றும். ஊதா, கரு­நீ­லம், நீலம், பச்சை ஆகிய நிறங்­கள் தோன்­றாது.

பன்­னி­ரண்டு வெவ்­வேறு வகை­யி­லான வான­வில்­கள் இருப்­ப­தாக சமீ­பத்­தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. ஃபிரான்ஸ் நாட்டு வானிலை ஆய்வு மையத்­தைச் (நேஷ­னல் மீடி­யோ­ரோ­லா­ஜி­கல் ரிசர்ச் சென்­டர் - National Meteorological Research Center) சேர்ந்த 'ழான் ரிகார்' (Jean Ricard) என்ற வளி மண்­டல அறி­வி­ய­லா­ளர் (அட்­மாஸ்­பெ­ரிக் சைன்­டிஸ்ட் - Atmospheric Scientist) இதைக் கண்­டு­பி­டித்து இருக்­கி­றார்.

வான­வில்­லில் நிறங்­கள் தெளி­வா­கத் தெரி­வது மழைத் துளி­க­ளின் அள­வைப் பொறுத்­தது. அதன் நிறங்­களை நிர்­ண­யிப்­ப­தில் பெரும்­பங்கு வகிப்­பது தொடு­வா­னத்­துக்­கும் சூரி­ய­னுக்­கும் இடைப்­பட்ட தூரம்­தான்.

சூரி­யன் தொடு­வா­னத்­துக்கு மிக­வும் அரு­கில் இருக்­கும்­போது தோன்­றும் வான­வில்­லில் சிவப்பு நிறம் மட்­டுமே காணப்­ப­டும். தொடு­வா­னத்­தி­லி­ருந்து சூரி­யன் சற்று மேலே, எழு­பது டிகிரி கோணத்­தில் இருக்­கும்­போது தோன்­றும் வான­வில்­லில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்­சள் ஆகிய மூன்று நிறங்­க­ளும் தோன்­று­கின்­றன.

அடுத்த முறை நீங்­கள் வான­வில்­லைப் பார்க்­கும்­போது மறக்­கா­மல் அதில் எத்­தனை நிறங்­கள் உள்­ளன என்­ப­தைக் கவ­னிப்­பீர்­கள்­தானே!

- மாத­வன் இளங்கோ