கண்ணுக்கு எட்டும் தூரம்!

பதிவு செய்த நாள் : 08 செப்டம்பர் 2017

நமது கண்களால் அதிகபட்சம் எவ்வளவு தூரம்வரை பார்க்க முடியும்?

நமது சூரியக் குடும்பம் பால் வீதி மண்டலத்தில் (மில்கி வே கேலக்ஸி - Milky Way Galaxy) இருக்கிறது என்பதை நாம் அறிவோம். நமது மண்டலத்தைப் போல பல மண்டலங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றன. தொலைநோக்கியால் நம்மால் பார்க்கக் கூடிய எல்லையில் மட்டுமே ஏறத்தாழ 100 பில்லியன் (Billion) மண்டலங்கள் இருக்கின்றன. அப்படியென்றால் பிரபஞ்சம் முழுவதும் எத்தனை மண்டலங்கள் இருக்கும் என்பதைக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.

பூமியிலிருந்து 150 பில்லியன் பில்லியன் மைல்களுக்கு அப்பால் ஆண்ட்ரமீடா காலக்ஸி (Andromeda Galaxy) என்று ஒரு மண்டலம் இருக்கிறது. அப்பாடா இவ்வளவு தொலைவா என்று நாம் வாயைப் பிளக்கலாம். ஆனால் நமது பால் வெளி மண்டலத்துக்கு மிக அருகில் இருக்கும் மண்டலம் இதுதான்.

இதனைத் தொலைநோக்கியின் உதவி இல்லாமல் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும். நமது பால் வெளி மண்டலத்தைப் போலவே ,கோடானு கோடி நட்சத்திரங்கள் இதில் இருக்கின்றன. இருந்தாலும் நம் கண்களுக்கு இது ஒரு சிறிய புள்ளி மாதிரிதான் தோன்றும். இந்த மண்டலத்தை நாம் நேரடியாகப் பார்க்க முடியும் என்றால், நமது பார்வை அதிகபட்சம் 150 பில்லியன் பில்லியன் மைல் தொலைவை எட்ட முடியும் என்று எடுத்துக் கொள்ளலாம்தானே?