காணாமல் போனவை!

பதிவு செய்த நாள் : 08 செப்டம்பர் 2017

விஞ்­ஞா­ன­மும் நாக­ரி­க­மும் போட்டி போட்­டுக்­கொண்டு வளர்ந்து வரும் காலம் இது. நாமும் அத­னு­டன் ஓடித்­தான் ஆக வேண்­டும். நேரப் பற்­றாக்­குறை. கிரைண்­டர், மிக்ஸி, ஃப்ரிட்ஜ் போன்ற இயந்­தி­ரங்­க­ளைச் சார்ந்து வாழ வேண்­டிய கட்­டா­யம். இப்­ப­டியே நமக்கு முன் வாழ்ந்த மக்­கள் பயன்­ப­டுத்­திய பல பொருட்­க­ளைத் தொலைத்­து­விட்­டோம். அதில் சில பொருட்­க­ளைப் பற்­றிப் பார்ப்­போம்...

முறம் (சுளகு) : தானி­யங்­க­ளில் இருந்து உமி, கல் போன்­ற­வற்­றைப் பிரித்­தெ­டுக்க உத­வும். இதை, புடைத்­தல் என்­பார்­கள். மூங்­கில் பட்­டை­யால் முடை­யப்­பட்டு விளிம்­பு­கள் கட்­டப்­பட்ட முறம், அடிப்­ப­கு­தி­யில் அகன்­றும் நுனிப்­ப­கு­தி­யில் குறு­கி­யும் ஏறத்­தாழ முக்­கோண வடி­வில் இருக்­கும். நீண்­ட­கா­லம் உப­யோ­கிக்க முறத்­தின் அடிப்­பு­றம் பசு­வின் சாணத்­தால் மெழு­கப்­பட்­டி­ருக்­கும்.

ஆட்­டுக்­கல்­லும் குழ­வி­யும்: ஆட்­டுக்­கல் அல்­லது ஆட்­டு­ரல் என்­பது கல்­லி­னால் செய்­யப்­பட்டு இருக்­கும். இது மாவு அரைக்க உத­வும். இத­னு­டன் குழ­விக் கல் ஒன்­றும் இருக்­கும். இதன் நடுப் பகு­தி­யில் உள்ள குழி­யில் அரிசி, பருப்பு போன்­ற­வற்றை ஊற வைத்து அரைப்­பார்­கள்.

உறி: பல சிறு பானை­கள், சட்­டி­களை ஒன்­றின் மேல் ஒன்­றாக அடுக்கி, கயிற்­றில் கட்­டித் தொங்­க­வி­டும் அமைப்பு உறி. தயிர், மோர் போன்ற உண­வு­களை பூனை, நாய் போன்ற வீட்டு விலங்­கு­க­ளி­ட­மி­ருந்­தும் குழந்­தை­க­ளி­ட­மி­ருந்­தும் பாது­காக்க எட்­டாத உய­ரத்­தில் தொங்­க­வி­டு­வார்­கள்.

உர­லும் உலக்­கை­யும்: தானி­யங்­களை இடிக்­கப் பயன்­ப­டும். மரத்­தாலோ கருங்­கல்­லாலோ செய்­யப்­பட்­டி­ருக்­கும். இதன் மேல்­பக்­கத்­தில் ஓர் அடி­வரை குழி போன்ற அமைப்பு இருக்­கும். இந்­தக் குழிக்­குள் அரிசி முத­லான தானி­யங்­களை இட்டு உலக்­கையை வைத்து இடிப்­பார்­கள்.

அம்­மி­யும் குழ­வி­யும்: அம்மி என்­பது கருங்­கல்­லி­னால் செய்­யப்­பட்ட, மருந்து அல்­லது சமை­ய­லில் பயன்­ப­டும் பொருட்­களை அரைக்க உத­வும்.


இத­னு­ட­னும் குழவி என்று அழைக்­கப்­ப­டும் ஒரு கருங்­கல் இருக்­கும். இதை இரு­கை­க­ளா­லும் பற்றி உருட்­டி­யும் இடித்­தும் இழுத்­தும் பொருட்­களை அரைப்­பார்­கள்.

முன்­பெல்­லாம் தமி­ழக கிரா­மங்­க­ளில் ஊருக்­குப் பொது­வான இடத்­தில் ஓர் அம்மி, ஆட்­டுக்­கல் போன்­றவை வைக்­கப்­பட்­டி­ருக்­கும். தேவை­யா­ன­வர்­கள் பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம்.