பாட்டிமார் சொன்ன கதைகள் – 130– சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 08 செப்டம்பர் 2017

கிருஷ்ணருக்கு காந்தாரி சாபமிட்டாள்

''அத­னா­லென்ன தாயே ! அது­போ­தும். கதா­யு­தப் போரில் நாபிக்­குக் கீழே அடிப்­பது தர்ம விரோ­த­மா­னது. அத­னால் கவலை இல்லை.’’ என்­றான் துரி­யோ­த­னன்.

மறு­நாள் போரில் துரி­யோ­த­ன­னி­டம் சிக்­கிக்­கொண்டு பீமன் தடு­மா­றி­னான். பீம­னது அடி­கள் எது­வுமே துரி­யோ­த­னனை அசைக்­க­வில்லை. ஆனால் மேன்­மே­லும் புது­ப­லத்­து­டன் துரி­யோ­த­னன் சுழன்று சுழன்று தாக்­கி­னான். அவ­னது அடி­கள் பீமனை பெரி­தும் அயர வைத்­தன..

அப்­போது பீம­னின் பார்­வை­யில் படும்­படி எதிர்ப்­பு­றம் வந்து நின்ற கிருஷ்­ணர். ``பலே பீமா! பலே ! என்று தொடை­யில் தட்டி உற்­சா­கப்­ப­டுத்­து­வ­து­போல் நடு­வி­ர­லால் தொடை­யில் குத்­திக் காட்டி ஜாடைக் காட்­டி­னார். அதைப் புரிந்­து­கொண்ட பீமன் துரி­யோ­த­ன­னின் தலை­யில் அடிப்­பது போல் கதா­யு­தத்தை உயர்த்தி சட்­டென்று திசை மாற்றி தொடை மீது அடித்­தான்.

இப்­ப­டிப் பார­தப்­போ­ரில் பல கட்­டங்­க­ளில் கிருஷ்­ண­ரின் சூட்­ச­மம் தன் பாண்­ட­வர்­க­ளுக்கு உறு­து­ணை­யாக நின்று அவர்­களை கரை­யேற வைத்­தது.

பாண்­ட­வர்­கள், திரு­தி­ராஷ்ட்­ர­னி­டம் ஆசி பெற்­ற­பின் காந்­தா­ரியை வணங்கி­னார்கள். கண்­க­ளைக் கட்­டிய நிலை­யி­லும் துணி­யின் ஓரம் வழியே தரு­ம­னின் கால் விரல்­கள் அவ­ளது பார்­வை­யின் கடை­கோ­டி­யில் பட்­டன. மறு­க­ணமே அனல்­பட்­டது போல் அவை தீய்ந்து கறுத்து விகா­ர­மா­கி­விட்­டன.

காந்­தா­ரி­யின் கோபம் தங்­களை பொசுக்கி விடும் என்­பதை உணர்ந்த பாண்­ட­வர்­கள் நடுங்­கி­னர். ஆயி­னும் பெருந்­தன்­மை­யான அவள் அவர்­களை பொருட்­ப­டுத்­த­வில்லை.

சஞ்­ச­ய­னுக்கு தெய்வி­கப் பார்வை அளித்­தது போல வியா­சர் காந்­தா­ரிக்கு தெய்வி­கப்­பார்வை அளித்­தார். அதன்­மூ­லம் போர்க்­க­ளத்­தின் கொடிய காட்­சி­க­ளைக் கண்டு மனம் நொந்த காந்­தாரி தாள முடி­யாத சோகத்­து­டன் கிருஷ்­ணரை குற்­றம் சாட்­டி­னாள். `` அந்­தப்­பு­ரத்தை  விட்டு வெளியே வந்து அறி­யாத பெண்­கள் கூட்­டம் இந்த ரண களத்­தின் கோரங்­க­ளின் மத்­தி­யில் தங்­கள் உற­வி­னர்­க­ளின் உடல்­களை தேடு­வ­தைப் பார். இறந்து கிடக்­கும் இளை­ஞன் தன் மகனோ என்று புரட்­டிப் பார்க்­கும் தாயின் துய­ரத்­தைப் பார். குண்­ட­லங்­க­ளு­டன் கிடக்­கும் தன் கண­வ­னின் தலையை அறு­பட்­டுக்­கி­டக்­கும் உடல்­க­ளு­டன் வைத்­துப் பொருத்­திப் பார்க்­கும் மனை­வி­யின் வேத­னைப் பார் ‘’ என்று தம் மக்­கள், பாண்­ட­வர்­கள் தரப்­பி­னர் என இறந்த பல­ரை­யும் பட்­டி­ய­லிட்­டுப் புலம்­பி­னாள்.

பின் அடங்­காத சீற்­றத்­து­டன் ,, `` கிருஷ்ணா! பெரும் வல்­ல­மை­யும், ஆற்­ற­லும் பெற்­ற­வன் நீ. நீ மனம் வைத்­தால் இந்­த போரே நடந்­தி­ருக்­காது. ஆனால் இந்­த பெரு நாசம் உன்­னால் திட்­ட­மிட்டு நடத்­தப்­பட்­டது. என் கண­வ­ருக்கு நான் பணி­வி­டை­கள் செய்­தது உண்­மை­யா­னால், பிற­ரால் அடைய முடி­யாத  தவப்­ப­யனை என் பதி­பக்­தி­யால் அடைந்­தி­ருப்­பது உண்­மை­யா­னால்  என் வம்­சமே என் கண்­முன் அழிந்­தது போல் உன் கண்­முன்­னால் உன் வம்­ச­மும் அழி­யும்.’’ என்று சாப­மிட்­டாள்.

காந்­தா­ரி­யின் கோபத்­தை­யும், சாபத்­தை­யும் கண்ட கிருஷ்­ணர் புன்­சி­ரிப்­பு­டன், ``சத்­ரிய பெண்­ம­ணியே  நீ கூறி­யது போல் நிகழ்ச்­சி­கள் நடக்­கத்­தான் போகின்­றன. என்­னு­டைய குல­மான விருஷ்ணி குலம், யது­வின் வழி வந்த  யாத­வர்­கள் வம்­சம் அழி­யத்­தான் போகி­றது. அவர்­கள் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் அடித்­துக் கொண்டு சாவார்­கள்.’’ என்­றார்.

 அதன் பின்­னர் 36 ஆண்­டு­கள் கழிந்­தன. ஒரு நாள்  மக­ரி­ஷி­கள் கூட்­டம் ஒன்று துவா­ர­கைக்கு வந்­தது. இரு­மாப்­பில் தறி­கெட்டு, போயி­ருந்த துவா­ரகை வாசி­கள், அவர்­களை கேலி­செய்து அவ­ம­தித்­த­னர்.

 விருஷ்­ணி­கள்,  அந்­த­கர்­கள், போஜர்­கள், அடங்­கிய பெரும் குழு சாம்­பன் என்­ப­னுக்கு பெண் வேடம் போட்டு அவர்­க­ளி­டம் அழைத்­துச் சென்று, 'இவ­ளுக்கு என்ன குழந்தை பிறக்­கும் ?’ என்று கேட்­ட­னர். நார­தர், விஸ்­வா­மித்­தி­ரர், கண்­வர் போன்ற மக­ரி­ஷி­கள் கொண்ட குழு கடுங்­கோ­பம் கொண்டு ` இவ­னுக்கு உலக்கை பிறக்­கும். அது உங்­கள் கூட்­டத்­துக்கே எம­னா­கும் ‘’ என்று சபித்­த­னர்.

 விளை­யாட்டு வினை­யா­னதை எண்ணி பயந்து திரும்­பிய யாத­வர்­கள் சாம்­பன் நிஜ­மா­கவே பெண்­ணாகி இருப்­ப­தை­யும், கர்ப்­ப­மாகி இருப்­ப­தை­யும் கண்டு அதிர்ந்­த­னர். உரிய காலத்­தில் சாம்­ப­னுக்கு பிர­சவ வலி எடுத்­தது. முனி­வர்­கள் சொன்­ன­படி உலக்­கை­யும் பிறந்­தது. அதனை துண்டு துண்­டாக்கி நெரு­பில் இட்டு எரித்து சாம்­பலை கொண்டு போய் கடற்­க­ரை­யில் தூவி­விட்டு வந்­த­னர்.

 ஒரு மழை பெய்­த­தும், அங்கு நாணற் புற்­கள் முளைத்­தன. மூங்­கில்­கள் போல் ஆள் உய­ரத்­துக்கு வளர்ந்­தன.

நடந்­த­வற்றை அறிந்த கிருஷ்­ணர் யாத­வர்­களை அழைத்து இனி எந்­தக் கார­ணத்தை முன்­னிட்­டும் யாரும் மது குடிக்­கக்­கூ­டாது என்று எச்­ச­ரித்­தார். சட்ட திட்­டங்­க­ளுக்­கும், நெறி­மு­றை­க­ளுக்­கும் உட்­பட்டு வாழும்­படி வற்­பு­றுத்­தி­னார்.யாத­வர்­க­ளும், அவ­ரது அறி­வு­ரையை சிர­மேற்­கொண்டு சிறிது காலம் அமை­தி­யா­யி­ருந்­த­னர்.

இந்­நி­லை­யில் பல துர்­நி­மித்­தங்­கள் தோன்ற ஆரம்­பித்­தன.  வீதி­க­ளில் உடைந்த மண்­பாண்­டங்­கள் சித­றிக்­கி­டக்க எலி­கள் அங்­கு­மிங்­கும் ஓடிக்­கொண்­டிந்­தன. தூங்­கும் நகர வாசி­க­ளின் கூந்­தல், நகங்­களை எலி­கள் கடித்து தின்­றன.  பற­வை­க­ளின் குரல் கோட்­டான் அல­றல்­போல் கேட்­டது. ஆடு­கள் நரி­கள் போல் ஊளை­யிட்­டன. உண­வில் புழுக்­கள் நெளிந்­தன. உதய, அஸ்­த­மன காலங்­க­ளில் சூரி­ய­னைச் சுற்றி சரீ­ரங்­கள் போன்ற தோற்­றம் தென்­பட்­டன. அமா­வாசை 13ம் நாளன்றே வந்­தது.

 இந்த சகு­னங்­க­ளைக் கண்ட கிருஷ்­ணர் ``புத்­திர சோகத்­தால் மனம் நொந்த காந்­தாரி இட்ட சாபம் பலிக்­கும் நேரம் நெருங்­கு­கி­றது. ‘’என்று வருத்­தத்­து­டன் கூறி­னார்.

அவ­ரது ஆழ்­ம­னம் காந்­தா­ரி­யின் சாபம் ஈடே­றட்­டும் என்று தீர்­மா­னித்­துக் கொண்­டது.