தள்ளிப்போட்டால் விபரீதம் ஏற்படும்...! - – குட்டிக்கண்ணன்

பதிவு செய்த நாள் : 07 செப்டம்பர் 2017

தேவிக்கு திரு­ம­ண­மாகி ஒரு வரு­டம்­தான் ஆகி­றது, அவ­ருக்கு பக்தி அதி­கம். இந்த ஒரு வரு­டத்­தி­லேயே கோயில்­கள் புண்­ணிய ஸ்தலங்­க­ளுக்கு அடிக்­கடி சென்று வந்­தார். அப்­படி செல்­லும் போது மாத­வி­டாய் குறுக்கே நிற்­குமே என்­ப­தால் மாத­வி­டாயை தள்­ளிப்­போ­டும் மாத்­தி­ரை­களை உட்­கொண்டு வந்­தார். ஒரு கட்­டத்­தில் மாத­வி­டாய் நின்று மூன்று மாதங்­கள் ஆனது. அத­னால் தான் கர்ப்­பம் அடைந்­தி­ருப்­ப­தாக எண்­ணிக் கொண்டு அதனை செக் செய்­து­கொள்ள மருத்­து­வ­ரி­டம் சென்­றார்.

'நீங்­கள் கர்ப்­பம் அடைய வில்லை. தொடர்ந்து மாத­வி­டாய் தள்­ளிப்­போ­டும் மாத்­தி­ரையை உட்­கொண்டு வந்­த­தால் வந்­த­வினை என்று மருத்­து­வர்' கூறி­னார். இப்­படி தேவியை போல நிறைய பெண்­கள் பண்­டி­கையை மற்­றும் முக்­கிய நிகழ்ச்­சி­க­ளில் மாத­வி­டாய் வந்­தால் கலந்­து­கொள்ள முடி­யாத நிலை ஏற்­ப­டுமோ என அஞ்சி மருத்­து­வ­ரின் ஆலோ­சனை இன்றி தாங்­க­ளா­கவே மாத­வி­டாய் தள்­ளிப்­போ­டும் மாத்­தி­ரை­களை வாங்கி உட்­கொள்­கி­றார்­கள். இத­னால் ஏற்­ப­டும் பக்க விளை­வு­களை அவர்­கள் அறி­யா­மல் உள்­ள­னர். அவை என்­னென்ன பக்க விளை­வு­களை உண்­டா­கும் என்­பதை விவ­ரிக்­கி­றார் மகப்­பேறு மருத்­து­வர் மகேஸ்­வரி.

* நோரே­திஸ்ட்­ரோன் அசிட்­டேட், மேட்­ராக்­ஸிப்­ரோ­ஜெஸ்ட்­ரோன் அசிட்­டேட், அலி­லெஸ்ட்­ரி­னால் இவையே மாத­வி­டாய் தள்­ளிப்­போட மருத்­து­வர்­கள் பரிந்­த­ரைக்­கும் மாத்­தி­ரை­கள். மாத­வி­டாய் சரி­யாக வர­வில்லை என்­றா­லும் அவை சீராக வர­வும் இம் மாத்­தி­ரை­க­ளையே வாங்கி உட்­கொள்­கி­றார்­கள் பெண்­கள்.

* மாத­வி­டாய் தள்­ளிப்­போ­டும் மாத்­தி­ரை­களை வரை­ய­றை­யில்­லா­மல் உட்­கொண்டு வந்­தால் மாத­வி­டாய் முற்­றி­லம் நின்று போகும் இல்­லை­யெ­னில் மாத­வி­டாய் ஏற்­ப­டும் சுழற்­சி­யில் பிரச்­னை­கள் உண்­டா­கும்.

* இயற்­கை­யி­லேயே நம் உட­லில் புரோ­ஜெஸ்ட்­ரோன் ஹார்­மோன் உள்­ளது. மாத­வி­டாய் தள்­ளிப்­போ­டும் மாத்­தி­ரை­கள் ஸ்டீராய்டு அடிப்­ப­டை­யாக் கொண்டு தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. இவை புரோ­ஜெஸ்ட்­ரோன் அளவை அதி­க­ரிக்க செய்து மாத­வி­டாயை தள்­ளிப்­போட வைக்க செய்­கி­றது.

* சில பெண்­க­ளுக்கு நோரே­திஸ்ட்­ரோன் அசிட்­டேட் மாத்­திரை ஏற்­று­கொள்­ளாது. இதனை தங்­க­ளி­டம் வரும் பெண்­க­ளி­டம் மாத­வி­டாய் தள்­ளிப்­போட என்ன மாதி­ரி­யான மாத்­தி­ரையை வாங்கி உட்­கொண்­டீர் என மருத்­து­வர்­கள் கேட்டு தெரிந்­து­கொள்ள வேண்டும்.

* மாத­வி­டாய் தள்­ளிப்­போ­டும் மாத்­தி­ரையை பரிந்­து­ரைக்க முன் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்து கர்ப்­பப்­பை­யில் ஏதா­வது குறை­பாடு இருக்­கி­றதா இல்லை கர்ப்­பம் அடைந்து உள்­ளாரே என்­ப­தை­யெல்­லாம் தெரிந்து கொண்ட பின்­னர்­தான் அம்­மாத்­தி­ரை­களை மருத்­து­வர்­கள் பரிந்­து­ரைக்க வேண்­டும்.

* இல்­லை­யென்­றால் குறைந்த பட்­சம் உடல் எடை, உடல் குறி­யீட்டு எண், ரத்த அழுத்­தம் ஆகி­ய­வற்­றை­யா­வது சரி பார்த்த பின் அம்­மாத்­தி­ரையை பரிந்­து­ரைப்­பது நல்­லது.

* இருப்­பது வயத்­திற்­குள் உள்ள பெண்­கள் மாத­வி­டாய் தள்­ளிப்­போ­டும் மாத்­தி­ரையை உட்­கொள்­ள­ாமல் இருப்­பது நல்­லது. இருப்­பது வயதை தாண்­டிய பெண்­கள் தவிர்க்க முடி­யாத சூழ்­நி­லை­யில் மட்­டுமே மாத­வி­டாய் தள்­ளிப்­போ­டும் மாத்­தி­ரையை எடுக்க வேண்­டும்.

* தோல் அரிப்பு, அலர்ஜி, மார்­பக புற்­று­நோய், நுரை­யீ­ரல் நோய் போன்ற பிரச்­னை­யால் பாதித்த பெண்­கள் மாத­வி­டாய் தள்­ளிப்­போ­டும் மருந்­து­களை உட்­கொள்­ளக் கூடாது.

* மாத­வி­டாய் தள்­ளிப்­போ­ட­டும் மாத்­தி­ரை­களை வாங்­கும்­போது அதன் அட்­டை­யி­லேயே அதை உட்­கொள்­வ­தால் ஏற்­ப­டும் பக்­க­வி­ளை­வு­கள் மற்­றும் அதை யாரெல்­லாம் பயன்­ப­டுத்­தக் கூடாது போன்ற விவ­ரங்­கள் அதி­லேயே தெரி­வித்து இருக்­கும். இதனை ஒரு­முறை படித்­து­விட்டு இம்­மாத்­தி­ரை­களை உப­யோ­கிப்­பது நல்­லது.

* மாத­வி­டாய் தள்­ளிப்­போ­டும் மாத்­தி­ரை­களை எடுக்­கும் போது ஆரம்­பத்­தில் வாந்தி வரு­வது போன்ற உணர்வு, தலை­வலி, மூச்­சுத்­தி­ண­றல் போன்­றவை ஏற்­ப­டும். சில­ருக்கு அழ­மான நரம்பு ரத்த உறைவு, உறைக்­கட்டி, மார்­பக வீக்­கம் போன்ற தீவ­ர­மான பிரச்­னை­க­ளை­யும் உண்­டா­கும்.

* ஆண்­டுக்கு ஒரு­மு­றையோ இல்லை இரு­மு­றை­யோ­தான் மாத­வி­டாய் தள்­ளிப்­போ­டும் மாத்­தி­ரை­களை எடுக்­க­லாம்.

பின்­வி­ளை­வு­க­ளைத் தவிர்க்­கும் வழி­கள்

* மாத­வி­டாய் வரு­வ­தற்கு மூன்று நாட்­க­ளுக்கு முன்பு, மாத­வி­டாய் தள்­ளிப்­போ­டும் மாத்­தி­ரை­களை தொடர்ந்து ஐந்து நாட்­கள் உட்­கொள்ள வேண்­டும். அதன் பின்பு ஐந்து இல்லை பத்து நாட்­க­ளுக்­குள் மாத­வி­டாய் வர­வேண்­டும். அப்­படி வரு­வது தள்­ளி­போ­னால் உடனே மருத்­து­வ­ரி­டம் ஆலோ­சனை பெற­வேண்­டும்.

* சீரான மாத­வி­டாய் இல்­லா­த­வர்­கள், மைக்­ரோன் தலை­வலி உள்­ள­வர்­கள் மாத­வி­டாய் தள்­ளிப்­போ­டும் மாத்­தி­ரை­களை எடுக்­கக் கூடாது. அப்­படி எடுத்­தால் மாத­வி­டாய் தள்ளி வரும்­போது மைக்­ரோன் தலை­வலி வர­லாம். மாத­வி­டாய் சீராக இல்­லா­த­வர்­க­ளுக்கு மாத­வி­டாய் காலத்­தில் அதிக உதி­ரப்­போக்கு ஏற்­ப­ட­லாம்.

* மாத­வி­டாய் தள்­ளிப்­போ­டும் மாத்­தி­ரை­களை எடுக்­கா­மலே இயற்கை முறை­யில் தள்­ளிப் போட­வும் வழி இருப்­ப­தாக சொல்­லப்­ப­டு­கி­றது. அது எந்­த­ள­வுக்கு பயன் அளிப்­ப­தாக உறு­தி­யாக சொல்ல முடி­யாது. அப்­படி இயற்கை முறை பயன்­ப­டுத்தி மாத­வி­டாய் தள்­ளிப்­போட நினைப்­ப­வர்­கள் சித்தா, ஆயர்­வேத, ஹோமி­யோ­பதி போன்ற மருத்­து­வர்­க­ளி­டம் ஆலோ­சனை பெறப்­பட்ட பின்­னரே அம்­ம­ருந்­து­களை பயன்­ப­டுத்­து­வது நல்­லது.