பெண்களே உரல், உலக்கை வைத்தே தொழில் செய்யலாம்...! – சுமதி

பதிவு செய்த நாள் : 07 செப்டம்பர் 2017
இதைப்­போல நீங்­க­ளும் தயா­ரித்து விற்­பனை செய்து காசு சம்­பா­திக்­க­லாம் என்­கிற நோக்­கத்­தில் விவ­ரங்­கள் கொடுத்­துள்­ளோம். நீங்­க­ளும் இதை செய்து பெரிய தொழில் அதி­ப­ரா­க­வும் வர வாய்ப்­புக்­கள் உள்­ளன.

கைகுத்­தல் ஊட்­ட­சத்து மாவு.-100% இயற்­கை­யா­னது,100% கையால் செய்­யப்­ப­டு­கி­றது நமது பாரம்­ப­ரிய சிறு­தா­னி­யங்­க­ளா­கிய வரகு, சாமை, திணை, குதிரை வாலி,கம்பு,சோளம்,கேழ்­வ­ரகு மற்­றும் மலை­நெல்லி ஆகி­ய­வற்றை கொண்டு “கைகுத்­தல் முறை­யில்” தயா­ரிக்­க­ப­டு­வது நமது கைகுத்­தல் ஊட்­ட­சத்து மாவு.

கைகுத்­தல் முறை:நமது கைகுத்­தல் முறை­யில் மரத்­தி­னால் ஆன உலக்­கையை பயன்­ப­டுத்தி கல் உர­லில் ஒரு நாளைக்கு 5 கிலோ வரைக்­கும் மட்­டுமே கையால் குத்தி எடுக்­கப்­பட்­டது.இயந்­தி­ரங்­க­ளில் மூல­மாக அரைக்­கா­மல் கைகுத்­தல் முறை­யில் தயா­ரிக்­கப்­ப­டு­வ­தால் இதில் உள்ள சத்­து­கள் முழு­மை­யாக நமக்கு கிடை­கி­றது. மேலும் ருசி­யும் அபா­ர­மாக இருக்­கும்.

கைக்­குத்­தல்  தானி­யங்­க­ளின்

மருத்­து­வப் பயன்­கள்

எளி­தில் சீர­ண­ம­டை­யும் மலச்­சிக்­க­லைப் போக்­கும் சிறு­நீரை நன்கு பிரிக்­கும் ரத்­தத்­தைச் சுத்­தப்­ப­டுத்தி உட­லுக்கு புத்­து­ணர்­வைக் கொடுக்­கும். பித்த அதி­க­ரிப்பை குறைக்­கும். நீரி­ழிவு நோயின் தாக்­கம் இருக்­காது. உட­லில் தேங்­கி­யுள்ள கொழுப்பை நீக்­கும். சரு­மத்­தைப் பாது­காக்­கும். வாத பித்த, கபத்தை அத­ன­தன் நிலை­யில் வைத்­தி­ருக்­கும்.

இந்த தயா­ரிக்­கும் முறை­யில் முழு­வ­தும் இயற்­கை­யான முறை­யில் விளைந்த தானி­யங்­கள் மற்­றும் மலை நெல்லி ஆகி­யவை சரி­யான விகி­தத்­தில் கலந்து செய்­யப்­ப­டு­கி­றது, எந்­த­வி­த­மான செயற்கை வண்­ணமோ ,பொருள் கெடா­மல் இருக்க எந்த ரச­ய­னமோ சேர்க்­கப்­ப­ட­வில்லை. இந்த கைகுத்­தல் ஊட்­ட­சத்து மாவினை கஞ்சி,களி உருண்டை,தோசை,அடை ,இட்லி என்று நமக்கு விருப்­ப­மான முறை­யில் செய்து உண்­ண­லாம்.  கடந்த ஒன்­றரை வரு­டங்­க­ளாக பல­த­ரப்­பட்ட மக்­க­ளுக்­கும் ,நோயா­ளி­க­ளுக்­கும் கொடுத்து அவர்­க­ளி­டம் இந்த சத்து மாவின் பலன்­களை கேட்­டோம்,இதில் முக்­கி­ய­மான சில­வற்றை தரு­கி­றோம்.

ஆண்மை குறைவை போக்கி விந்து உற்­பத்­தியை அதி­க­ரிக்­கி­றது,மாத­வி­டாய் மற்­றும் கர்ப்பபை சமந்­த­மான பிர­ச­னை­களை கட்­டு­ப­டுத்­து­கி­றது,எலும்­பு­க­ளுக்கு இடை­யில் உள்ள தசை­நார்­களை வலுப்­ப­டுத்­தும், உடல் எடையை எந்­த­வித பக்க விளை­வு­கள் இல்­லா­மல் குறைக்­கும் ,வயறு சம்­பந்­த­மான நோய்­களை குணப்­ப­டுத்­தும்,உடல் உஷ்­ணத்தை சம­நிலை செய்­யும், குட­லில் ஏற்­ப­டும் புண்­களை வேக­மாக குணப்­ப­டுத்­தும்,ரத்த சோகையை போக்­கும்,

சர்க்­க­ரை­நோய்,புற்­று­நோய்,அல்­சர் போன்ற நோயால் பாதிக்­க­பட்­ட­வர்­க­ளுக்கு சிறந்த உண­வாக செயல்­ப­டு­கி­றது.நோய் எதிர்ப்பு சக்­தியை பல மடங்கு

அதி­க­ரிக்­கி­றது.

கைகுத்­தல் ஊட்­ட­சத்து மாவில் உள்ள சத்­துக்­கள் தோர­ய­மாக...

1.சக்தி- 342.01 K.CAL/100G,

2.கார்போஹைட்­ரேட்- 72.03 G/100G,

3.புர­தம் -9.13%,

4.கொழுப்­பு­சத்து- 1.93%,

5.நார்­சத்து- 0.60%,

6.இரும்­பு­சத்து- 25.8 MG/KG,

7.சுண்­ணாம்­பு­சத்து- 569 MM/KG,

8.மக்­னீ­சி­யம்- 32.5 MG/KG,

9.பாஸ்­ப­ரஸ்- 235 MG/100G,

10.E.COLI (நச்­சு­கி­ரு­மி­கள்)- ABSENT/25G,

11.S.AURCUS (நச்­சு­கி­ரு­மி­கள்)- ABSENT/25G,

12.SALMONELLA SPP (நச்­சு­கி­ரு­மி­கள்)-ABSENT/25G  சிறு­த­னி­யாங்­க­ளில் அடங்கி உள்ள மிக­வும் முக்­கி­ய­மான சத்­துக்­கள் மற்­றும் வைட்­ட­மின்­கள்.  ராகி -பிற தானி­யங்­களை விட 10 மடங்கு கால்­சி­யம் அதி­கம்.

கம்பு – இரும்­புச்­சத்து மற்­றும் புர­தம்.

சோளம் – புர­தம் மற்­றும் விட்­ட­மின் B.

வரகு – நார்­சத்து மற்­றும் தாது உப்­பு­கள்.

தினை – பாஸ்­ப­ரஸ் மற்­றும் புர­தம்.

சாமை – இரும்­புச்­சத்து விட்­ட­மின் B.

குதி­ரை­வாலி – நார்­சத்து மற்­றும் இரும்­புச்­சத்து.

கோதுமை – பாஸ்­ப­ரஸ் மற்­றும் புர­தம்.

அரிசி – கார்போ­வை­த­ரேற்று மற்­றும்

விட்­ட­மின் B.