பிசினஸ்: தெருவிலும் தொழில் துவங்க வாய்ப்பு -– ஞானசேகர்

பதிவு செய்த நாள் : 07 செப்டம்பர் 2017பெரும்­பா­லான இளை­ஞர்­கள் படித்து முடித்­த­தும் உடனே தேடு­வது ஒரு நல்ல வேலை...! கல்­லூ­ரியை விட்டு வெளி­யில் வந்­த­தும் அர­சாங்­கமோ, பெரிய கம்­பெ­னியோ 'இந்தா அப்­பா­யின்­மென்ட் ஆர்­டர்' என்று தூக்கி கொடுத்து விடாது. வேலைக்­கான தகு­தியை வளர்த்து கொள்­வ­து­டன், தனக்கு தகுந்த வேலையை தேடு­வ­தும் அவ­சி­யம். ஆனால் வெளி­யி­டங்­க­ளில் வேலை தேடியே சோர்ந்து போய் விடு­கி­றான் நம் இளை­ஞன். எதற்­கெல்­லாமோ, எதன் பின்­னாலோ ஓடி நாட்­களை வீணாக கழிப்­ப­வர்­கள், வேலை மட்­டும் உடனே கிடைத்­து­விட வேண்­டும் என்று ஆசை படு­வது என்ன நியா­யமோ தெரி­ய­வில்லை.

அது­வும் ஒரு­சி­லர் படிக்­கும் போதே வெளி­நாட்­டிற்கு வேலைக்கு செல்ல வேண்­டும் என்­கிற ஆசையை, ஆர்­வத்தை வளர்த்து கொள்­கி­றார்­கள்...இங்கே தகுந்த வேலையோ சம்­ப­ளமோ கிடைக்­காது என்­கிற வித­மாக இருக்­கும் அவர்­க­ளின் பேச்­சுக்­கள் எல்­லாம்...!?

வெளி­நாட்­டுக்கு வேலைக்கு செல்­லும் வச­தி­யா­ன­வர்­களை பற்றி இங்கே சொல்­ல­வில்லை...இந்த நாட்­டில் வேலை கிடைக்­க­வில்லை என்று அப்­பா­வி­டமோ, அடுத்­த­வ­ரி­டம் கடன் வாங்­கியோ விமா­னத்தை பிடிக்­கும் இளை­ஞனை சொல்­கி­றேன்...கடன் வாங்கி வெளி­நாட்டை தேடி செல்­வதை விட அதே பணத்தை வைத்து சொந்த ஊரில் சிறு தொழிலை தொடங்­க­லாமே என ஏன் யோசிப்­ப­தில்லை...?! பிழைக்க வழி வகை தெரி­ய­வில்­லையா ?? துணிச்­சல் இல்­லையா ?? முன்ன பின்ன தெரி­யாத ஊரில் வாழ தைரி­யத்­து­டன் செல்­லும் இளை­ஞ­னுக்கு, அந்த துணிச்­சலை மூல­த­ன­மாக வைத்து சொந்த நாட்­டில் உழைத்து  சம்­பா­திக்க தெரி­ய­வில்லை எனும் போது வருத்­தம் ஏற்­ப­டு­கி­றது.

நம் நாட்டை குறை சொல்ல ஆயி­ரம் கார­ணங்­களை அடுக்­க­லாம். ஆனால் ஏன் இங்கே உழைக்க முடி­ய­வில்லை என்ற கேள்­விக்கு சரி­யான பதில் இருக்­கி­றதா ? அப்­படி உங்­க­ளுக்கு சாத­க­மாக பதில் வைத்­தி­ருந்­தா­லும், இங்கே இருக்­கும் மற்­ற­வர்­கள் எப்­படி வாழ்­கி­றார்­கள் என்­ப­தை­யும் சொல்ல வேண்டி வருமே...?!  அர­சாங்­கம்,  ஊழல், லஞ்­சம் என்று எந்த வித சமா­ளிப்­பும் தேவை­யில்லை. உழைக்க கூடிய திறன் , மனோ­தி­டம், உத்­வே­கம், தன்­னம்­பிக்கை, சுய மரி­யாதை இருந்­தால் எங்­கே­யும் வாழ முடி­யும். கை நிறைய சம்­பா­திக்க முடி­யும்.

ஆயி­ரம் வச­தி­கள் இருந்­தா­லும் சொந்த நாட்­டில் சொந்த பந்­தங்­க­ளு­டன், மனைவி குழந்­தை­க­ளு­டன் ஒன்­றாக வாழும் வாழ்க்­கைக்கு ஈடு இணை ஏதும் இல்லை.

* மனைவி குழந்­தை­களை விட்டு சென்று, பல வரு­டம் கழித்து திரும்பி வரும் சில­ருக்கு,நெருங்­கிய அந்த உற­வு­களே அன்­னி­ய­மாகி விட்­டதை போல தெரி­யும் சோகம் மிக கொடுமை ?!

* முத­லில் அன்பை பொழிந்த உற­வு­கள், வெளி­நாட்­டில் இருந்து வரும் பணத்தை அனு­ப­வித்த பின்­னர், வெறும் பணம்­காய்ச்சி மர­மாக மட்­டுமே உங்­களை பார்க்க கூடிய நிலை சக­ஜம் !!

* பணத்­தின் ருசி கண்­ட­வர்­கள் ஒரு சில­ரின் மூணு வருட அக்­ரீ­மென்ட் முடிந்த பிற­கும் மீண்­டும் போக சொல்லி வற்­பு­றுத்­து­வது வேதனை !

வெளி­நாட்டு வேலையை பற்றி இப்­படி என்னை ஆதங்­கப்­பட வைத்­து­விட்­டது ஒரு சிறிய சம்­ப­வம்...

உழைக்க என்ன வெட்­கம் ?!

சொந்த தொழில், மாதம் செலவு போக வரு­மா­னம் 20,000 ரூபாய்...!! இரண்டு  வரு­டத்­தில்,வந்த வரு­மா­னத்­தில் சொந்­த­மாக இரு ஆட்டோ (லோன் ), கூட வேலை செய்ய துணைக்கு மற்­றொ­ரு­வர் மட்­டுமே !! அப்­படி என்ன வேலை என்­கி­றீர்­களா ??

இஸ்­திரி கடை நடத்­து­கி­றார்...என்­னங்க நம்ப முடி­ய­வில்­லையா?? நானும் இதை வேறு யாரும் என்­னி­டம் சொல்லி இருந்­தால் நம்பி இருக்க மாட்­டேன், நேரில் சென்று பேட்டி எடுக்­காத குறை­யாக விவ­ரங்­களை கேட்டு தெரிந்­து­கொண்ட பிறகே நம்­பி­னேன்...

நேற்று என் கண­வர் வீட்­டில் மின்­சா­ரம் இல்­லாத போது , அவ­ச­ர­மாக வெளில  அயன்(கரண்ட் அய­னிங் அண்ட் கரி பெட்டி அய­னிங் இரண்­டும் இருக்­கும்) பண்­ணிட்டு வரேன்னு ஒரு ஷர்ட், பேன்ட் எடுத்து சென்­ற­வர், போன வேகத்­தில் திரும்பி வந்­து­விட்­டார்...

'என்­னாச்­சுங்க' என்­றேன். 'இரண்டு நாள் ஆகு­மாம், எனக்கு இப்ப தேவை. சரி பர­வா­யில்லை அட்­ஜஸ்ட் பண்­ணிக்­கி­றேன்'னு கிளம்­பிட்­டார். எனக்கு ஆச்­சரியம் "ஒரு அரை­மணி, ஒரு மணி நேரம் வெயிட் பண்ண சொன்னா பர­வா­யில்லை, இரண்டு நாள் என்­றால்

எப்­ப­டிங்க ?!"

"கடைல ஒரு இடம் பாக்கி இல்­லாம வரி­சையா பெரிய பெரிய பேக்ல துணி­கள் இருக்கு, இருக்­கிற துணிய பார்த்தா ஒரு வாரம் ஆகும் போல...!?"

என கண­வர் சொல்­ல­வும் அப்­படி என்ன ஸ்பெஷல் அந்த கடைல என்று எனக்கு ஒரு ஆர்­வம் வந்து விட்­டது. மாலை­யில் அந்த வழி­யாக போன­போது போய் விசா­ரித்தே விட்­டேன்.

(வேலை மும்­ம­ரத்­தில் இருந்­த­தால் எனது கேள்­விக்கு பதில்­கள் இன்ஸ்­டால்­மென்­டில் வந்­தன.கால் வலித்­தா­லும் பர­வா­யில்லை...முழு­தும் தெரிந்து கொள்­ளா­மல் விடு­வ­தா­யில்லை)

பிஎஸ்.சி., படித்­தி­ருக்­கி­றார், ஒரு வரு­டம் இப்­படி அப்­படி என்று கழித்­து­விட்டு, வேறு உதவி ஏதும் கிடைக்­காத கார­ணத்­தால், எங்க ஏரி­யா­வில் இருக்­கும் அக்கா வீட்­டிற்கு வந்­தி­ருக்­கி­றார். அக்கா வீட்­டின் வாசல் மர நிழ­லில், வண்­டி­யில் ஒரு­வர் இஸ்­திரி போட்டு கொண்­டி­ருந்­தி­ருக்­கி­றார். அவ­ரது வண்­டியை சுற்றி ஏகப்­பட்ட துணி பேக்­கு­கள் இருக்­கு­மாம். சில நாட்­கள் வண்­டியை ஓர­மாக விட்டு விட்டு போய் விடு­வா­ராம்.அந்த ஏரி­யா­வில் அர­சாங்க வேலை­யில் உள்­ள­வர்­கள் அதி­கம், கொஞ்­சம் வச­தி­யா­ன­வர்­கள் உள்ள ஏரியா. 'இஸ்­திரி போட ஆள் வராத போது எல்­லோ­ரும் என்ன செய்­வாங்க' என்று யோசித்­தி­ருக்­கி­றார். ஒரு சுப முகூர்த்த நாளில் 'ஏன் இந்த தொழிலை நாம் செய்ய கூடாது' என்ற சிந்­தனை தோன்றி இருக்­கி­றது.

முறை­யான வேலை (துணி­களை சரி­யாக மடித்து வைக்­கும் லாவ­கம்) தெரி­யாத போதும், ஒரு மாதம் வீட்­டில் பழகி பார்த்­தி­ருக்­கி­றார். அக்கா கண­வ­ரின் உத­வி­யால் வண்டி, இஸ்­திரி பெட்டி, கரி எல்­லாம் தயார்.  ஏற்­க­னவே அங்கே ஒரு­வர் இருப்­ப­தால், அக்கா வீட்டு வாசல் சரி­ப­டாது என்று அடுத்த தெரு­வில், வேப்­ப­ம­ரம் இருக்­கும் இட­மாக பார்த்து வண்­டியை நிறுத்தி இருக்­கி­றார்.

அடுத்த ஸ்டெப்

கஸ்­ட­மர்­களை தேடு­வது...

புதிய நபர்­களை நம்பி யாரும் துணி­களை கொடுக்க மாட்­டார்­கள்...அதற்­காக தனது துணி­களை எடுத்து வந்து ஒவ்­வொன்­றாக மெது­வாக அயன் செய்­வா­ராம்.

அவ­ரது ஒரு சட்டை பல முறை அயன் செய்ய பட்டு இருக்­கு­மாம் !(தொழில் பழ­கின மாதி­ரி­யும் ஆச்சு, பாக்­கி­ற­வங்­க­ளுக்கு யார் வீட்டு துணி­யவோ அயன் பண்­றான்  என்று நினைக்­க­வும் வசதி ஆச்சு) இப்­படி இவ­ரது பிளான் வொர்க் அவுட் ஆகி, ஒரு பெண்­மணி தனது குழந்­தை­கள் துணி­களை கொண்டு வந்து கொடுத்­தி­ருக்­காங்க...இவர் அவரை அக்­கானு கூப்­பிட்டு  மிகுந்த மரி­யா­தை­யாக, அன்­பாக பேசி இருக்­கி­றார் (முதல் போனி ஆச்சே !)

அந்த பெண் அப்­ப­டியே அடுத்த பெண்­க­ளி­ட­மும் போய் 'பார்த்தா நல்ல பையனா இருக்­கி­றான், உங்க துணி எல்­லாம் கொடுங்க, அயன் பண்­ணு­வான்' அப்­ப­டின்னு இவ­ரது விளம்­பர பிர­தி­நிதி ஆகி­டாங்க. இப்­ப­டியே தொழில் பிக் அப் ஆகி மெய்ன் ரோட்­டில் ஒரு கடையை வாட­கைக்கு பிடித்து தொழிலை விரிவு படுத்தி விட்­டார். அப்­பு­றம் என்ன ஒரே ஏறு முகம் தான், அடுத்து புதி­தாக இரு ஆட்டோ வாங்கி சம்­ப­ளத்­திற்கு டிரை­வர்­களை அமர்த்­தி­விட்­டார். இப்­போது அதில் இருந்­தும் வரு­மா­னம் வரு­கி­றது...

திரு­ம­ணத்­திற்கு பெண் தயா­ராக இருக்­கி­ற­தாம், இவர்­தான் இன்­னும் ஒரு வரு­டம் போகட்­டும் என்று இருக்­கி­றா­ராம்.