‘டாப்’ இடத்தில் ‘சரவணன் மீனாட்சி!’

பதிவு செய்த நாள் : 06 செப்டம்பர் 2017

விஜய் டிவி­யில் திங்­கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளி­ப­ரப்­பாகி வரும் 'சர­வ­ணன் மீனாட்சி' 1000 எபி­ஸோ­டு­களை கடந்து ஒளி­ப­ரப்­பில் உள்­ளது.

இந்த கதை­யில் வரும் திருப்­பங்­க­ளும், கேரக்­டர்­க­ளும் இதன் மிக பெரிய பலம். அத­னால்­தான் இன்­னும் இது 'டாப்' இடத்தை பிடித்­தி­ருக்­கி­றது.

இந்த சீரி­ய­லில் வரும் ரியோ, ரட்­சித்தா இரு­வ­ருமே சர­வ­ணன் –மீனாட்­சி­யாக வெற்­றி­க­ர­மாக சித்­த­ரித்து வரு­கின்­ற­னர். அமா­னுஷ்­யம் நிறைந்த சமீப புரொ­மோக்­கள் நேயர்­கள் மத்­தி­யில் ஆர்­வத்தை மேலும் அதி­க­ரிக்க செய்­துள்­ளன.

அது மட்­டு­மல்­லா­மல், மேலும் எதிர்­பா­ராத பல திருப்­பங்­க­ளு­டன் மிக சுவா­ரஸ்­ய­மாக இருக்க போகி­றது. பல அமா­னுஷ்ய விஷ­யங்­கள் மற்­றும் மீனாட்­சி­யின் நட­வ­டிக்கைகள் கார­ண­மாக குடும்­பத்­தில் உள்ள அனை­வ­ரும் மீனாட்­சிக்­குத்­தான் 'பேய்' பிடித்­தி­ருக்­கி­றது என்று நம்­பு­கி­றார்­கள். ஆனால், உண்­மை­யில் மீனாட்­சிக்­குள் ஏதும் அமா­னுஷ்ய சக்தி இருக்­கி­றதா அல்­லது வேறு யாருக்­குள் இருக்­கி­றது போன்ற பல கேள்­விக்­கான பதில்­கள் விரை­வில் தெரி­ய­வ­ரும்.