ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 6–9–17

05 செப்டம்பர் 2017, 10:31 PM

ஒரே சமயத்தில் 4 படங்கள்!

(சென்ற வார தொடர்ச்சி...)

இந்த ஆண்­டில் வெளி­வந்த 'கிழக்கே போகும் ரயில்' படத்­தின் வெற்றி விழா சென்­னை­யில் உள்ள கமலா திரை­ய­ரங்­கத்­தில் நடை­பெற்­றது. இந்த வெற்றி விழா­வில் நடி­கர் தில­கம் சிவாஜி கலந்து கொண்டு எல்­லோ­ருக்­கும் பரிசு வழங்­கி­னார். படத்­தைப் பற்­றி­யும், படத்­தில் இடம்­பெற்ற பாடல்­க­ளைப் பற்­றி­யும் மிக உயர்­வாக பேசி­னார். குறிப்­பாக “மாஞ்­சோலை கிளி­தானோ… மான்­தானோ…” பாடல் அவரை மிக­வும் கவர்ந்­த­தா­க­வும், 'அடடா, என்ன ஒரு அரு­மை­யான பாடல்ங என்று நெகிழ்ச்­சி­யோடு பாராட்­டி­யி­ருக்­கி­றார்.

விழா­விற்கு பார­தி­ரா­ஜா­வின் அம்­மா­வும் வந்­தி­ருந்து எல்­லோ­ரும் பேசு­வ­தைக் கேட்­டுக்­கொண்­டி­ருந்­தார். பார­தி­ரா­ஜா­வின் அம்மா தனக்­கும் ஒரு அம்மா போல என்று எத்­த­னையோ முறை இளை­ய­ராஜா நெகிழ்ந்­து­போய் சொல்­லி­யி­ருக்­கி­றார். நிகழ்ச்சி முடிந்­த­தும் இளை­ய­ராஜா பார­தி­ரா­ஜா­வின் தாயா­ரி­டம் வந்து, “எப்­படி இருந்­தது?” என கேட்­டி­ருக்­கி­றார். அதற்கு அவர் சொன்ன பதில், “அது என்­ன­மோப்பா, அவங்க என்­னென்­னமோ பேசு­றாங்க… என் காதிலே பார­தி­ராசா, இளை­ய­ரா­சாங்­கற பேரு மட்­டுந்­தான் கேட்­டு­துப்பா.”

உயர்ந்த தாயுள்­ளத்­தின் உணர்வை எடுத்­துக்­காட்­டத்­தான் இந்த சம்­ப­வத்தை பகிர்ந்து கொண்­டேன்.

இதே வரு­டம் இளை­ய­ராஜா 'வாழ நினைத்­தால் வாழ­லாம்' என்ற படத்­திற்­கும், 'வட்­டத்­திற்­குள் சது­ரம்' என்ற படத்­திற்­கும் இசை­ய­மைத்­தார். இந்த நேரத்­தில் 'வயசு பிடி­சிந்தி' என்ற தெலுங்கு படத்­திற்கு இசை­ய­மைக்­கு­மாறு அந்த படத்­தின் தயா­ரிப்­பா­ளர் கேட்க, இளை­ய­ரா­ஜா­வும் ஒத்­துக்­கொண்­டார். அதே போல 'வ்யா மோஹம்' என்ற மலை­யா­ளப் படத்­திற்கு இசை­ய­மைக்­கும் வாய்ப்­பும் இளை­ய ­ரா­ஜா­விற்கு வந்­தது.

ஒரே சம­யத்­தில் இந்த நான்கு படங்­க­ளுக்­கும் இசை­ய­மைக்க ஒத்­துக்­கொண்டு நான்கு படங்­க­ளின் பாடல் பதி­வு­க­ளும் சரி, பின்­னணி இசை சேர்ப்­பும் சரி மாறி மாறி தொடர்ச்­சி­யாக பதிவு செய்­தார் இளை­ய­ராஜா. இது­போல ஒரே சம­யத்­தில் பதிவு செய்ய ஆரம்­பித்­தது இந்த ஆண்­டில்­தான். 80-களின் ஆரம்­பத்­தி­லும் சரி, இறு­தி­யி­லும் சரி, இளை­ய­ராஜா சரா­ச­ரி­யாக ஒரு வாரத்­திற்கு 4 படங்­கள் என்ற விகி­தத்­தில் இசை­ய­மைக்க ஆரம்­பித்­தார்.

இளை­ய­ராஜா இசை­ய­மைத்த முதல் தமிழ் படம் ‘அன்­னக்­கிளி’ என்­பது அனை­வ­ருக்­கும் தெரி­யும்.

இளை­ய­ராஜா இசை­ய­மைத்த முதல் தெலுங்கு படம் ‘வயசு பிடி­சிந்தி’ என்ற இந்த திரைப்­ப­டம்­தான்.

இளை­ய­ராஜா இசை­ய­மைத்த முதல் மலை­யா­ளப் படம் ‘வ்யா மோஹம்’ என்ற இந்த திரைப்­ப­டம்­தான். ‘வ்யா மோஹம்’ ஏற்­க­னவே தமி­ழில் ஸ்ரீதர் இயக்­கிய ‘போலீஸ்­கா­ரன் மகள்’ என்ற படத்­தின் ரீமேக்.