சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 311– எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 06 செப்டம்பர் 2017

'வைகாசி பொறந்­தாச்சு'. மாணவ -– மாண­வி­ய­ரைப் பின்­ன­ணி­யாக வைத்து, புது­மை­யாக கதை சொன்ன எந்த பட­முமே இது­வரை தோல்­வி­யைத் தழு­வி­ய­தில்லை. அந்த அடிப்­ப­டை­யில் ’வைகாசி பொறந்­தாச்சு’ திரை வர­லாற்­றில் ஒரு பெரிய திருப்­பு­மு­னை­யாக அமைந்த படம்.

ரசி­கர்­க­ளின் ரச­னை­யு­ணர்வை நன்கு புரிந்து கொண்டு அதற்­கேற்ற விதத்­தில் புது­மை­யாக… தனித்­து­வ­மாக… உயி­ருள்ள பாத்­தி­ரங்­களை வைத்து படத்தை இயக்­கி­யி­ருந்­தார் அறி­முக இயக்­கு­னர் ராதா­பா­ரதி.

பள்ளி மாணவ – மாண­வி­க­ளின் காதலை மைய­மாக வைத்து இந்­தப் படத்தை எடுத்­தி­ருந்­தா­லும், ரசிப்­ப­தற்கு சிறந்த பொழு­து­போக்­குச் சித்­தி­ர­மாக இருந்­தா­லும், ‘மாணவ சமு­தா­யத்­தின் மன­சைக் கெடுக்­கக்­கூ­டிய விதத்­தில் ஒரு தவ­றான போத­னையை புகட்­டு­கிற பட­மாக இது அமைந்து விட்­டது!’ என்ற குற்­றச்­சாட்டு அப்­போது எழுந்­தது.

1990ம் ஆண்டு வெளி­வந்த ’வைகாசி பொறந்­தாச்சு’ வெள்ளி விழா கொண்­டா­டி­யது. இவ்­வ­ள­வுக்­கும் பெரிய நட்­சத்­திர நாய­கனோ; அனு­ப­வ­சா­லி­யான இயக்­கு­னரோ இல்லை! இதில் இடம்­பெற்ற நாய­கன் – நாயகி, இசை­ய­மைப்­பா­ளர், இயக்­கு­னர், தயா­ரிப்­பா­ளர் என எல்­லோ­ருமே திரை உல­கத்­துக்கு புதி­ய­வர்­கள்­தான்.

இந்த வெற்­றிப்­ப­டம் மூல­மா­கத்­தான் பிர­சாந்த் திரை உல­கத்­துக்கு கிடைத்­தார். இசை­ய­மைப்­பா­ளர் தேவா­வின் திறமை நாட­றிந்­தது. ‘அன்­பா­லயா பிலிம்ஸ்’ பிர­பா­க­ரன் வெற்­றி­க­ர­மான தயா­ரிப்­பா­ள­ராக மாறி­னார்.

கதா­நா­ய­க­னாக நடி­கர் தியா­க­ரா­ஜ­னின் மகன் பிர­சாந்த் அறி­மு­க­மா­கி­யி­ருந்­தார். நாய­கி­யாக காவேரி, இவ­ரும் புது­மு­கமே. மற்­றும் கவுண்­ட­மணி, செந்­தில், ஜன­க­ராஜ், சின்னி ஜெயந்த், சார்லி, வி.எம்.சி. ஹனீபா, கே.எஸ். செல்­வ­ராஜ், கே. பிர­பா­க­ரன், சுலக்­க்ஷணா, சங்­கீதா, கே.ஆர். விஜயா ஆகி­யோ­ரும் நடித்­தி­ருந்­தார்­கள்.

இசை – தேவா, பாடல்­கள் – காளி­தா­சன், ஒளிப்­ப­திவு – கே.எஸ். செல்­வ­ராஜ், டான்ஸ்  – லலி­தா­மணி. இப்­ப­டத்தை ‘அன்­பா­லயா பிலிம்ஸ்’ சார்­பில் கே. பிர­பா­க­ரன் தயா­ரித்­தி­ருந்­தார்.

பெரி­ய­வர்­கள் எதைச் சொன்­னா­லும் நல்­ல­துக்­க­குத் தான் சொல்­வார்­கள். பெரி­ய­வர்­கள் பேச்­சுக்கு சின்­ன­வர்­கள் கட்­டுப்­பட வேண்­டும். அதே சம­யத்­தில் பெரி­ய­வர்­கள், சின்­ன­வர்­க­ளின் செயல்­க­ளில் எது நல்­லது எது கெட்­டது என்­ப­தைப் பார்த்து மனந்­தி­றந்து பக்­கு­வ­மாக அவற்றை விமர்­சிக்க வேண்­டும். உரிய நேரத்­தில் அதைப் பெரி­ய­வர்­கள் செய்­யத் தவ­றும் போது­தான் பிரச்­னை­களே ஆரம்­ப­மா­கின்­றன.

தனது பிள்­ளை­கள் ஒழுக்­க­மாக வள­ர­வேண்­டும் என்று விரும்­பும் எந்த தந்­தை­யும் தானும் ஒழுக்­க­மாக இருக்க வேண்­டும்! இல்­லை­யென்­றால் அந்­தப் பிள்ளை வீட்டை உடைக்­கும் அல்­லது தகப்­பனை உதைக்­கும்.

இந்­தக் கருத்தை மையப்­புள்­ளி­யாக்கி யதார்த்­த­மாக பின்­னப்­பட்ட கதை­தான் 'வைகாசி பொறந்­தாச்சு'.

திரைப்­பட விநி­யோ­கம் மற்­றும் கூட்­டுத் தயா­ரிப்­பில் அவ­ருக்­கி­ருந்த அனு­ப­வங்­களை அடிப்­ப­டை­யாக வைத்து அன்­பா­லயா பிர­பா­க­ரன் தனி­யாக தயா­ரித்த படம் 'வைகாசி பொறந்­தாச்சு'. இந்த படத்­தில் மொத்­தம் ஐந்து புது­மு­கங்­கள். கதா­நா­ய­கன், கதா­நா­ய­கி­யு­டன் இயக்­கு­னர் ராதா­பா­ர­தி­யும், எடிட்­டர் லான்சி மோக­னும், ஸ்டண்ட் இயக்­கு­னர் ஜாக்­கு­வார் தங்­க­மும் இந்த படத்­தின் மூலம்­தான் அறி­மு­க­மா­னார்­கள்.

பிர­சாந்த், சென்னை கிறிஸ்­துவ கல்­லூ­ரி­யில் பிளஸ் 2 பாஸ் பண்ணி, மருத்­து­வக் கல்­லூ­ரிக்­கான நுழை­வுத்­தேர்வு எழு­தி­விட்டு ரிசல்ட்­டுக்­காக காத்­தி­ருந்­த­போது, எதிர்­பா­ராத வித­மாக இந்த படத்­தில் நடிக்­கும் வாய்ப்­புக் கிடைத்­தது. அந்த பொன்­னான வாய்ப்பை பிர­மா­த­மாக பயன்­ப­டுத்­திக் கொண்­டார் பிர­சாந்த். அறி­முக நாயகி காவேரி தனது கதா­பாத்­தி­ரம் உணர்ந்து நடித்­தி­ருந்­தார்.

ஒளிப்­ப­தி­வா­ளர் கே.எஸ். செல்­வ­ராஜ் மிக­வும் அழ­காக, கலை­ந­யத்­து­டன் காட்­சி­க­ளைப் படம்­பி­டித்­தி­ருந்­தார். தேவா­வின் தேனி­சை­யில் பத்­துப் பாடல்­கள், எல்­லாமே முத்­தான பாடல்­க­ளாகி பட்­டித்­தொட்­டி­யொங்­கும் பர­ப­ரப்­பாய் முழங்­கி­யது.