சேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ – 111

பதிவு செய்த நாள் : 04 செப்டம்பர் 2017இந்திய பங்குச் சந்தை நிலவரம்

சந்தைகளின் போக்கு இந்த வாரம் முதலீட்டாளர்களுக்கு கொண்டாட்டமாகவே இருந்தது. சந்தைகளும் இந்த வாரம் ஒரு படி

மேலே போய் அடுத்த வாரம்

இன்னும் புதிய உச்சங்களை தொடும் என்ற நம்பிக்கையில் சென்று கொண்டிருக்கிறது.

வெள்ளியன்று இறுதியாக

வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 161         புள்ளிகள் கூடி 31892  புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 57   புள்ளிகள் கூடி   9974 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.

சென்ற வாரத்தை விட மும்பை பங்குச் சந்தை சுமார் 396 புள்ளிகள் கூடியுள்ளது. சென்ற வாரத்தை விட இந்த வாரம் சுமார் 1 சதவீதம் கூடியுள்ளது.

விப்ரோ பைபேக்

இது பைபேக் காலம். தங்கள் கம்பெனியின் பங்குகள் சந்தையில் மிகவும் குறையும் போது தூக்கி நிறுத்த உதவுவது தான் கம்பெனிகள் செய்யும் பைபேக். விப்ரோ கம்பெனி தனது பங்குகளை 320 ரூபாய் என்ற அளவில் சுமார் 11000 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவு செய்துள்ளது.

புதிய வெளியீடுகள்

பாரத் ரோடு நெட்வொர்க் என்ற கம்பெனி தனது புதிய வெளியீட்டை செப்டம்பர் 6 தேதி தொடங்கி, 8ம் தேதி முடிவடைகிறது. விலை ரூபாய் 195 முதல் 205 வரை இருக்கும். ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் போடலாம்.

டிக்ஷன் டெக்னாலஜி இந்தியா லிமிடெட் 6ம் தேதி தொடங்கி, 8ம் தேதி முடிவடைகிறது. விலை ரூபாய் 1760 முதல் 1766 வரை இருக்கும். ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் போடலாம்.

மேட்ரிமொனி.காம் லிமிடெட் கம்பெனியின் புதிய வெளியீடு 11ம் தெதி செப்டம்பர் தொடங்கி 13ம் தேதி செப்டம்பர் முடிவடைகிறது.

ஐசிஐசிஐ லோம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி தனது புதிய வெளியீட்டை கொண்டு வர முடிவு செய்து இதற்காக செபியிடம் விண்ணப்பித்துள்ளது. பிரதாப் ஸ்நாக்ஸ் லிமிடெட் கம்பெனியும் தனது புதிய வெளியீட்டை கொண்டு வர செபியிடம் விண்ணபித்துள்ளது.

என்ன பங்குகள் வாங்கலாம்?

ஹெ.டி.எப்.சி. பாங்க்,  பஜாஜ் கார்ப், பஜாஜ் எலக்டிரிகல், யெஸ் பாங்க், மயூர் யுனிகோட்டர்ஸ், டி.சி.எம். ஸ்ரீராம்

ஆகிய பங்குகள் உங்கள் போர்ட்போலியோவில் நீண்டகால அடிப்படையில் இருக்கலாம்.

மாருதி சுசூகி    

மாருதி சுசூகி ஆகஸ்ட் மாத விற்பனையில் சென்ற வருடம் இதே காலத்தை விட 26 சதவீதம் கூடியுள்ளது குறிப்பிடதக்கது. இது விழாக்காலத்தை ஒட்டிய கூடிய விற்பனையாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

இந்த கம்பெனியின் பங்குகளை தொடர்ந்து வாங்குங்கள் என்று பல முறை அறிவுருத்தி வந்துள்ளோம். இந்த பங்குகளை சுமார் 5000 ரூபாயிலிருந்து வாங்கவும் என்று ரெகமெண்ட் செய்திருக்கிறோம். இன்று சுமார் 7800 அளவைத் தொட்டிருக்கிறது. வாங்கினீர்களா?

இதனால் இந்த வாரம் ஆட்டோ கம்பெனியின் பங்குகள் எல்லாம் சிறிதளவு மேலே சென்றன.

வருங்காலங்கள் கார் விற்பனையில் எலக்டிரிக் கார்கள் தாம் பெரும்பான்மையாக இருக்கும் என பல கம்பெனிகள் கணித்துக் கொண்டு அதற்கு மாறிக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் எலக்டிரிக் கார்களை விட, பெட்ரோல் கார்களுக்கு மதிப்பு வருங்காலத்திலும் இருக்கும் என மாருதி எதிர்பார்க்கிறது.

மணப்புரம் பைனான்ஸ்

மணப்புரம் பைனான்ஸ் விற்கப்படலாம் என்ற செய்திகள் சந்தையில் கசிய ஆரம்பித்துள்ளன. ஆர்.பி.எல். பாங்க் வாங்கப் போகிறதா? எடில்விஸ் பைனான்ஸ் வாங்கப் போகிறதா?

என்று காத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் நாங்கள் கம்பெனியை விற்கப் போவதாக வரும் யூகங்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்று கம்பெனியின் புரமோட்டர் நந்தகுமார் கூறயுள்ளார்.

அடுத்த வாரம் எப்படி இருக்கும்?

அடுத்த வாரமும் சந்தைகள் சிறிது ஏற்றத்திலேயே முடிடையலாம். அதற்கான அறிகுறிகள் இருக்கின்றன. சந்தைகள் தற்போது காளைகளின் பிடியில் இருக்கின்றன.பலரது கேள்வி பங்குகளை இப்போது வாங்கலாமா? இது பங்குகளை மொத்தமாக வாங்க உகந்த நேரம் இல்லை. அதே சமயம் சந்தைகள் நிச்சியம் வாரம் ஒன்று அல்லது

இரண்டு முறை சரிவுகளை சந்திக்கும். அப்போது சிறிது சிறிதாக வாங்குவது உசிதம்.

* * *

உங்கள் சந்தேகங்களுக்கு

உங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள், எழுத வேண்டிய ஈமெயில் முகவரி: sethuraman.sathappan@gmail.com.  

ப்ளாக்: sethuramansathappan.blogspot.com.   மொபைல்: 098 204 51259