சிலி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு ப்ளுபெரி பழம் இறக்குமதி

பதிவு செய்த நாள் : 04 செப்டம்பர் 2017

சிலி நாட்டிலிருந்து ஒரு மார்க்கெட்டிங் டீம் இந்தியாவிற்கு வந்துள்ளது. அவர்களின் விசிட்டுக்கு முக்கிய காரணம் இந்தியாவிற்கு ப்ளூபெரி விற்பதற்காகத்தான். இந்தியாவில் இறக்குமதி செய்வதற்காகவும், லாஜிஜ்டிக்ஸ் கம்பெனிகளையும் அப்பாயிண்ட் செய்வதற்காகவும் இந்தியா வந்திருந்தனர். ப்ளூபெரி பழம் உடலுக்கு மிகவும் நல்லது என்பதால் உலகம் முழுவதும் இது விரும்பி உண்ணப்படுகிறது.

ஹார்டி நெட்

உள்ளங்கைக்குள் உலகம் என்பது மொபைலுக்கு தான் பொறுந்தும். முன்பு காலத்தில் கஷ்டப்பட்டு செய்த பல விஷயங்களை மொபைலும், இண்டர்நெட்டும் எளிதாக தற்போது செய்து முடிக்கின்றன. அதே மொபைல் தான் ப்ளூவேல் போன்ற கேம்களையும் தருகிறது. நல்லதை தரம் பிரித்து பார்ப்பது, நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வது நமக்கு நல்லது.

அந்த மொபைல் டெக்னாலஜி மூலம் அபிடா ஒரு மொபைல் ஆப் தயாரித்துள்ளது. இதன் மூலம் கிரேப், மாதுளம்பழம், காய்கறிகளுக்கு ரிஜிஜ்டிரேஷன்,  டெஸ்டிங், சர்ட்டிபிகேஷன் ஆகியவைகள் செய்ய முடியும்.

இந்தியாவின் ஏற்றுமதி

 இந்தியாவின் ஏற்றுமதி 2018ம் ஆண்டில் 8முதல் 10 சதவீதம் வரை உயரும் என்றும், இறக்குமதி 10 முதல் 11 சதவீதம் வரை உயரும் என்றும் கேர் ரேட்டிங் தெரிவித்துள்ளது.

காட்டன் யார்ன்

காட்டன் யார்ன் ஏற்றுமதி டாலருக்கு எதிராக ரூபாய் வலுபெற்றிருப்பதாலும், ஜி.எஸ்.டி. வரி விதிக்கபட்டிருப்பதாலும் ஏப்ரல் முதல் ஜுலை வரை சுமார் 10 சதவீதம் குறைந்திருக்கிறது. இதற்கு முன்பு காட்டன் யார்னுக்கு எந்த வரியும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.