ஏற்றுமதி --– இறக்குமதி கேள்வி -– பதில்

பதிவு செய்த நாள் : 04 செப்டம்பர் 2017

கேள்வி: ஏற்றுமதியில் எல்.சி.க்கு யூ.சி.பி.ஏன் தேவை? நல்ல சரக்குகளை அனுப்பினால் பணம் தானாக வந்து விடப்போகிறது? இதற்கு ரூல்கள் தேவையா?

பதில்: ஏற்றுமதி வர்த்தகத்தில் சுமார் 180நாடுகள் தற்போது ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு சட்டத்தை வைத்துக் கொண்டிருந்தால் அது ஏற்றுமதி செய்பவருக்கும், இறக்குமதி செய்பவருக்கும் பல குழப்பங்களை ஏற்படுத்தும். இதனால் தான் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாக யூ.சி.பி. கொண்டு வரப்பட்டுள்ளது.  இது ஏற்றுமதியாளர், இறக்குமதியாளர், ஏற்றுமதியாளர் வங்கி, இறக்குமதியாளர் வங்கி ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

கேள்வி: ஏற்றுமதிக்கான டாக்குமெண்ட்களை வங்கியில் சமர்பித்து விட்டோம். அவர்கள் அதை சரிபார்க்க எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்?

பதில்: யூ.சி.பி. படி ஏற்றுமதியாளர் தன்னுடைய வங்கியில் டாக்குமெண்டை சமர்பித்த தேதிக்கு மறுநாளிலிருந்து 5 வேலை நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். இது தவிர அந்த டாக்குமெண்ட் கன்பர்மேஷன் செய்யப்பட்ட வங்கிக்கு அல்லது நெகோஷியேஷன் செய்ய நிர்ணயிக்கப்பட்ட வங்கிக்கு சமர்பிக்கப்பட்டால அந்த வங்கி

5 வேலை நாட்கள் எடுத்துக் கொள்ளப்படலாம். இது தவிர இறக்குமதியாளரின் வங்கி 5 வேலை நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்.இவையெல்லாம் டாக்குமெண்ட்களை சரிபார்க்க எடுத்துக் கொள்ளப்படும் நாட்கள் ஆகும். இதையெல்லாம் கணக்கில் வைத்து டாக்குமெண்டை முன்னமே வங்கியில் சமர்பிப்பது நலம்.

* * *