நடுத்தர வர்க்கத்தினருக்கு இவை எல்லாம் கட்டாயம் தேவை! – குட்டிக்கண்ணன்

பதிவு செய்த நாள் : 31 ஆகஸ்ட் 2017
இந்­திய மக்­க­ளி­டையே சேமிக்­கும் பழக்­கம் முன்பு இருந்தே உள்­ளது. ஆனால், தற்­போ­தைய பொரு­ளா­தா­ரக் கொள்­கை­க­ளால், பல வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள் இந்­தி­யா­வில் தலை எடுத்­த­தால், அவை மக்­க­ளின் பணத்தை காலி செய்­வ­தி­லேயே குறி­யாக இருக்­கின்­றன. அதா­வது நம்மை செலவு செய்­யத் தூண்­டும் கார­ணி­கள் அதி­க­மா­கிக் கொண்டு செல்­கின்­றன. நாம் சும்மா இருந்­தா­லும், விளம்­ப­ரங்­கள் செய்து ஆசை காட்டி நம் பணத்தை வசூல் செய்து விடு­கி­றார்­கள். இதில் அதி­கம் பாதிக்­கப்­ப­டு­வது நடுத்­தர வர்க்­கம் தான். இவர்­கள் எப்­படி செல­வைக் கட்­டுக்­குள் கொண்டு வரு­வது பற்றி விவ­ரிக்­கி­றார் பொரு­ளா­தார நிபு­ணர் முத்­து­கி­ருஷ்­ணன்.

திட்­ட­மி­டு­தல்

வடி­வேல் சொல்­வாரே.. “எதை­யும் பிளான் பண்ணி பண்­ண­னும்” என்று, அது மாதிரி திட்­ட­மி­டு­தல் என்­பது ரொம்ப முக்­கி­யம். திட்­ட­மி­டு­தல் என்ற ஒரு விஷ­யம் இல்லை என்­றால் எது­வுமே சரி­யாக வராது.

எனவே நமது மாத பட்­ஜெட் என்ன? அதில் நாம் எப்­படி நமது செல­வு­களை பிரிக்­க­லாம் என்­பதை முடிவு செய்ய வேண்­டும். இதற்­காக திட்­ட­மி­டும் போதே, நமது அனைத்து செல­விற்­கும் சேர்த்து திட்­ட­மிட வேண்­டும், அப்­போது தான் இறு­தி­யில் பிரச்னை இல்­லா­மல் இருக்­கும்.

சம்­ப­ளம் வந்த முதல் இரண்டு வாரம் ஜாலி­யா­க­வும் கடைசி இரண்டு வாரம் நெருக்­க­டி­யா­க­வும் ஆவ­தற்கு திட்­ட­மி­டு­தல் இல்­லா­மையே கார­ணம்.

புதுச் செலவை என்ன செய்­வது?

திட்­ட­மிட்­டுத் தான் செய்­கி­றோம் ஆனால், சில நேரங்­க­ளில் திட்­ட­மி­டு­த­லில் இல்­லாத செல­வு­க­ளும் திடீர் என்று வந்து விடு­கின்­றன, அப்­போது என்ன செய்­வது? இது நியா­ய­மான கேள்வி தான்.

என்ன தான் திட்­ட­மிட்­டா­லும், சில நேரங்­க­ளில் நம்­மை­யும் மீறி புதிய அத்­தி­யா­வ­சிய செல­வு­கள் [நண்­பர்­கள் திரு­ம­ணம், மருத்­து­வம், பரி­சுப்­பொ­ருள்] வந்து விடும். இந்த நேரங்­க­ளில் நமது சேமிப்­பில் இருந்து எடுக்­க­லாம் அல்­லது நண்­பர்­க­ளி­டையே கட­னாக பெற வேண்­டி­யது இருக்­கும். இது போல் என்ன செல­வா­னா­லும் அடுத்த மாதத்­தில் குறைக்­கக்­கூ­டிய செல­வு­க­ளில் கையை வைத்­துத் தான் ஆக வேண்­டும், அப்­போது தான் சமா­ளிக்க முடி­யும், இல்லை என்­றால் கடன் என்­பது தொடர் கதை­யாகி விடும். நம்­மால் திரும்ப கொடுக்க முடி­யும் என்­றால் மட்­டுமே கடன் வாங்­கு­வது நமக்கு நல்­லது.

ஆசைப்­ப­ட­லாமா?

என்­றுமே வர­வுக்கு மீறி செலவு செய்­யவே கூடாது, இவ்­வாறு செய்­யப்­ப­டும் செல­வு­களே நம்மை சிக்­க­லில் மாட்டி விடும். புத்­தர் கூறி­யது போல “ஆசையே நமது துன்­பத்­திற்­குக் கார­ணம்”. அப்ப என்ன ஆசையே படக்­கூ­டாதா? தாரா­ள­மா­கப் பட­லாம்.

என்­னங்க! இப்­பத் தான் ஆசைப்­ப­டக் கூடாது என்று சொன்­னீங்க ஆனால், இப்ப ஆசைப்­ப­ட­லாம் என்று கூறு­கி­றீர்­களே! என்று கேட்­க­றீர்­களா! ஆசைப்­ப­ட­லாம்! ஆனால், அதற்­குண்­டான நம் தகு­தி­களை வளர்த்­துக் கொள்ள வேண்­டும். நமது சம்­பா­திக்­கும் திறனை அதி­க­ரிக்க வேண்­டும். அதா­வது நம்­மில் பெரும்­பா­ல­னர்­கள் வாங்­கும் சம்­ப­ளமே போதும்! என்று அடுத்த கட்­டத்­திற்கு செல்ல முயற்­சிக்­கவே மாட்­டார்­கள். காலம் முழு­வ­தும் ஒரே நிலை­யில் இருந்து, அதே நிலை­யி­லேயே தங்­கள் வாழ்வை முடித்­துக்­கொள்­வார்­கள்.

எப்­பப்­பார்த்­தா­லும் பஞ்­சப்­பாட்­டா­கவே இருக்­கும். இதை எப்­படி கடந்து வரு­வது?

முத­லில் நாம் அடுத்த நிலைக்கு செல்ல வேண்­டும் என்­றால் என்ன செய்ய வேண்­டும்? என்­ப­தைக் கண்­ட­றிய வேண்­டும். எடுத்­துக்­காட்­டாக ஒரு பொறுப்­பில் இருக்­கி­றீர்­கள், அடுத்த நிலைக்கு செல்ல வேண்­டும் என்­றால் மேல் படிப்பை முடிக்க வேண்­டி­யது இருக்­கும்.

அப்­படி என்­றால், நாம் அந்­தப் படிப்பை முடிக்க என்ன செய்­ய­லாம் என்­பதை யோசித்து அதை நோக்கி நமது திட்­டங்­களை வகுக்க வேண்­டும். குண்டு சட்­டி­யிலே குதிரை ஓட்­டிக்­கொண்டு இருக்­கக் கூடாது. இதற்கு முதல் எதிரி சோம்­பே­றித்­த­னம், முயற்­சி­யின்மை. கஷ்­டப்­ப­டாம எது­வும் கிடைக்­கா­துங்க நாம ஒரு நல்ல நிலைக்கு வர வேண்­டும் என்­றால், அதற்கு கடு­மையா உழைக்­க­ணும். நம்ம ஆளுங்க முயற்­சி­யும் செய்ய மாட்­டாங்க.. பண­மும் நிறைய வேண்­டும் என்­பார்­கள். இது எப்­ப­டிங்க நடக்­கும்? அதிர்ஷ்­டம் இருந்­தால் நடக்­கும் ஆனால், அது நிரந்­த­ரம் அல்ல. எனவே எப்­போ­துமே ஒரு நிலை­யில் இருப்­பதை தொட­ரா­மல், அடுத்த கட்­டத்­திற்கு செல்­வது எப்­படி? என்­பதை யோசித்து அதற்­குண்­டான முயற்­சி­க­ளில் ஈடு­ப­ட­லாம்.

இப்­பச் சொல்­லுங்க ஆசை படு­வ­தில் தவ­றில்லை தானே! அள­வோடு ஆசைப்­ப­டுங்க.. அள­வுக்கு மீறி­னால் என்ன ஆகும் என்­பதை பல விஷங்­க­ளில்­க­ளில் அறிந்து இருப்­பீர்­கள்.

சேமிப்­பது சிர­மமா?

நிறை­யப் பேர், சேமிப்­பது ரொம்­பக் கஷ்­டம் என்று நினைத்­துக் கொண்­டுள்­ளார்­கள், இல்­லவே இல்லை. சேமிக்க ஆரம்­பித்­தால் நமக்கே தெரி­யா­மல் பணம் சேர்ந்து விடும். சேமிக்க எவ்­வ­ளவோ வழி­கள் இருக்­கி­றது. இதில் நமக்கு எது சரிப் பட்டு வருதோ அதில் நாம் இணை­ய­லாம்.

முத­லில் பணம் கட்ட சிர­ம­மாக இருக்­கும், பின்­னர் அது அப்­ப­டியே நமக்கு ஒரு பழக்­க­மாகி, சிர­ம­மில்­லாத ஒன்­றாகி விடும். ஒரு நாள் பார்த்­தால், அட! இவ்­வ­ளவு சேமித்து விட்­டோமா! என்ற ரொம்ப ஆச்­சரிய­மாக இருக்­கும். பின்­னர் ஏற்­ப­டும் பெரிய செல­விற்கு இந்த சேமிப்பு மிக உத­வி­யாக இருக்­கும். இப்­போது பல­ருக்கு தங்­க­ளின் சேமிப்பு மனக்­கண்­ணில் வந்து செல்­லுமே.

அனா­வ­சிய செலவு தடுப்­பது எப்­படி?

நம்­மில் பலர் செய்­யும் செல­வு­கள் தேவை­யற்ற வீண் செல­வு­க­ளாக இருக்­கும். ஆனால், அது அவர்­க­ளுக்கு தெரி­யவே தெரி­யாது. என்­னடி! என்ன செலவு ஆகு­துன்னே தெரி­யல, பணம் தண்­ணீர் மாதிரி போகி­றது என்­பார்­கள். இதை ஒரு முறை­யா­வது உங்­கள் வாழ்­வில் யாரி­ட­மா­வது கேட்டு இருப்­பீர்­கள். இதற்­குக் கார­ணம், எந்த திட்­ட­மி­டு­த­லும் இல்­லா­மல் மனம் போன போக்­கில் செலவு செய்­வ­தா­கும். இதைத் தடுக்க கூச்­சம், சோம்­பே­றித்­த­னம் பார்க்­கா­மல் தின­மும் நாம் என்­னென்ன செலவு செய்­கி­றோம் என்­பதை ஒன்­று­வி­டா­மல் எழுதி வைக்க வேண்­டும். என்­னடி இதெல்­லாம் நடக்­கிற காரி­யமா? என்று கேட்­ப­வர்­க­ளுக்கு, உங்­கள் செலவை கட்­டுக்­குள் கொண்டு வர­வேண்­டும் என்­றால் இதைப் பின்­பற்­றியே ஆக வேண்­டும்.

ஒரு மாதம் எழு­தி­னாலே நமக்­குத் தெளி­வா­கப் புரிந்து விடும். நாம் என்­னென்ன வெட்­டிச் செல­வு­கள் செய்து கொண்டு இருக்­கி­றோம் என்று. இதைப் பார்த்­தாலே நாம் அதிர்ச்சி ஆகி விடு­வோம். அட! எதுக்கு இதற்கு இவ்­வ­ளவு செலவு செய்­கி­றோம்?

மேக்­கப் மற்­றும் துணி வாங்­கி­ற­துக்கே .. ஓவரா போயிட்டு இருக்கு போல. அது­மட்­டு­மல்ல ஆஹா! நாம வாங்­குற நொறுக்கு தீனிக்கு, ஒரு மாட்­டுக்கே தீனி போட்­டு­ட­லாம் போல இருக்கே! என்று அதிர்ச்­சி­யாக வாய்ப்­புண்டு.

நீங்க சாப்­பி­டு­வ­தோடு, குழந்­தை­க­ளுக்­கும் நொறுக்­குத் தீனி வாங்­கித் தந்து பழக்­கப்­ப­டுத்­தா­தீர்­கள். அது உட­லுக்கு மிகக் கெடு­தல், சிறு வய­தி­லேயே உடல் பரு­ம­னாக இந்த நொறுக்­குத்­தீனி மிக முக்­கி­யக்­கா­ர­ணம்.

நீங்­கள் உங்­கள் செல­வு­களை எழுதி வைத்­தால், கண்­டிப்­பாக உங்­கள் செல­வு­கள் உங்­கள் கட்­டுப்­பாட்­டிற்­குள் வரும், இதை உறு­தி­யா­கக் கூற முடி­யும். எப்­ப­டித்­தான் செலவு ஆகு­துன்னே புரி­ய­லையே! என்று நீங்­கள் கூறு­வது நின்று விடும்.

எழுதி வைத்­தால் மட்­டும் போதாது, அதில் என்ன செலவு தேவை­யற்ற செலவு, அதி­கம் செய்­யும் செலவு என்று பார்த்து அதை தவிர்க்க / குறைக்க முயற்­சிக்க வேண்­டும்.

குழந்­தை­க­ளுக்கு, கேட்­ட­தெல்­லாம் வாங்­கித் தந்து பழக்­கப்­ப­டுத்­தா­தீர்­கள். இது குழந்­தை­களை கெடுப்­ப­தோடு அவர்­கள் வளர்ந்து பெரி­ய­வர்­கள் ஆனா­லும், இதே போல செலவு செய்து பழக்­கப்­பட்டு விடு­வார்­கள். குழந்­தை­க­ளுக்கு எப்­போ­துமே பணத்­தின் அரு­மையை சொல்­லிக்­கொ­டுங்­கள். உங்­கள் குடும்­பத்­தின் சிர­மங்­களை அவர்­க­ளுக்கு அறி­யப்­ப­டுத்­துங்­கள். இது பெரி­ய­வர்­கள் சமாச்­சா­ரம் என்று அவர்­களை ஒதுக்­கி­னால், குடும்­பக் கஷ்­டமே உண­ரா­மல் வளர்ந்து விடு­வார்­கள். செல­வு­கள் செய்­யும் போது அவர்­க­ளையே செய்­யச் சொல்­லுங்­கள், அப்­போது தான் அவர்­க­ளுக்­கும் ஒரு பொறுப்பு இருக்­கும்.

சேமிப்­பின் அவ­சி­யம்

நம் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் சேமிப்பு என்­பது மிக அவ­சி­யம் ஆகும். சேமிப்பு என்­பது எப்­படி வேண்­டும் என்­றா­லும் இருக்­க­லாம் பண­மாக, தங்­க­மாக, நில­மாக என்று உங்­க­ளுக்கு எது சரிப்­பட்டு வரு­கி­றதோ / லாபம் என்று தோன்­று­கி­றதோ அந்த வகை­யில் உங்­கள் சேமிப்பை தொட­ர­லாம். சில நேரங்­க­ளில் சேமிப்­பிற்­காக பணம் ஒதுக்­கு­வது கடுப்­பா­கவே இருக்­கும், அது­வும் பணப் பற்­றாக்­கு­றை­யான சம­யங்­க­ளில். இதுக்கு வேற மாசா­மா­சம் கொடுக்க வேண்­டி­ய­தாக இருக்­குதே! என்று எரிச்­ச­லாக இருக்­கும்.

நமக்கு இந்த பணம் மொத்­த­மாக கிடைக்­கும் போது தான், இத­னு­டைய அருமை புரி­யும். எனவே சேமி­யுங்க! சேமிக்­கப் பழ­குங்­கள். அனா­வ­சிய செலவை குறைக்க முய­லுங்­கள். நீங்­கள் நடுத்­தர வர்க்­கம் என்­றால் இது ரொம்ப அவ­சி­யம்.