ஆறு நூறாக்க விவசாயத்த வளைத்துப்போடு செல்லக்கண்ணு...! – சுமதி

பதிவு செய்த நாள் : 31 ஆகஸ்ட் 2017

நக­ர­ம­ய­மாக்­கல் சூழ­லில் மேற்­கத்­திய கலா­சார தாக்­கு­த­லால், சத்­து­மி­குந்த உண­வுப் பொருட்­க­ளின் பயன்­பாடு மிக­வும் குறைந்து போன­தால், நோய்­கள் பெருகி வரு­கின்­றன. அத­னால், பண்­டைய காலத்து உண­வுப் பொருட்­க­ளுக்கு ஏங்­கித் தவிக்­கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது. இந்­தச் சூழ­லில், பாரம்­ப­ரி­யம் மிக்க சிறு­தா­னி­யங்­கள் மீதான ஆர்­வம் அதி­க­ரிக்க ஆரம்­பித்­துள்­ளது. இத­னால், இவற்­றைப் பயி­ரி­டு­வ­தி­லும் கவ­னம் திரும்­பி­யி­ருக்­கி­றது!

இப்­ப­டிப்­பட்ட பாரம்­ப­ரிய உணவு தானி­யங்­க­ளில் சோளம், கேப்பை (கேழ்­வ­ரகு) மற்­றும் வரகு ஆகி­ய­வற்றை மானா­வா­ரி­யாக சாகு­படி செய்­து­வ­ரும் விரு­து­ந­கர் மாவட்­டம், சித்­தூர், மரி­ய­புஷ்­பத்தை, சந்­தித்­தோம். சோளத்தை தூசு தட்­டிக்­கொண்டே பேச ஆரம்­பித்­த­வர், ‘’பதி­னெட்டு வரு­ஷம் விரு­து­ந­க­ரில் உள்ள தனி­யார் கம்­பெ­னி­யில கிளார்க் வேலை பாத்­தேன். உடல்­நிலை சரி­யில்­லாம போன­தால, வேலையை விட்­டுட்டு, வீட்­டுல இருந்து பிள்­ளை­களை கவ­னிச்­சிட்டு இருந்­தேன். ஆனா­லும், சும்மா இருக்க பிடிக்­காம, தையல், எம்­பி­ராய்­ட­ரிங், கூடை பின்­னு­ற­துனு ஏதாச்­சும் செஞ்­சுக்­கிட்டே இருப்­பேன். பிள்­ளை­க­ளும் படிச்சி வேலைக்­குப் போக ஆரம்­பிச்ச சம­யத்­துல, ரயில்வே போஸ்ட் ஆபீ­ஸுல வேலை பாத்­துட்டு இருந்த கண­வ­ரும் ரிடை­யர்டு ஆயிட்­டாங்க.

என் மக­ளுக்கு விவ­சா­யம்னா ரொம்ப இஷ்­டம். அவ­தான் விவ­சா­யம் செய்­ய­லாம்னு 8 ஏக்­கர் நிலத்தை வாங்­கச் சொன்னா. ஆனால், அவ, வேலை கிடைச்சி அமெ­ரிக்­கா­வுக்­குப் போயிட்­ட­தால, விவ­சா­யம் செய்­ய­லாமா... வேணா­மானு யோசிச்­சிட்டு இருந்­தோம். அந்த சம­யத்­து­ல­தான், சில விவ­சா­யப் புத்­த­கங்­கள் ’ பத்தி எங்­க­கிட்ட சொல்லி, அதை அனுப்பி வெச்சா, மக. தொடர்ந்து படிக்க ஆரம்­பிச்­சேன். அதைப் படிக்­கி­றப்போ, ஒரு நண்­ப­ரோட பேசுற உணர்வு எனக்கு ஏற்­பட்­ட­தால, என்­னோட நண்­ப­னா­கவே விவ­சா­யப் புத்­த­கங்­களை  ஆக்­கிட்­டேன். புத்­த­கம் கைக்கு வந்­த­வு­டனே ஒரே நாள்ல படிச்சி முடிச்­சிட்டு, அடுத்த புத்­த­கத்­துக்­காக காத்­துக்­கிட்டே இருப்­பேன்.  போன வரு­ஷத்­துக்கு முந்­தின வரு­ஷம், முதல்­மு­தலா மூணு ஏக்­கர்ல, ‘இருங்கு சோளம்’னு சொல்­லப்­ப­டுற சிவப்­புச் சோளம் விதைச்­சேன். ஆனா, மலட்­டுத்­தன்­மை­யான மண்­ணுங்­க­ற­தால சரி­யான விளைச்­சல் கிடைக்­கல. போன வரு­ஷம், ஒரு ஏக்­கர்ல சிவப்­புச் சோளம், மூணு ஏக்­கர்ல வரகு, 20 சென்ட்ல கேழ்­வ­ர­குனு போட்­டேன். மண்­ணோட தன்­மையை மாத்­த­ற­துக்­காக... சில வேலை­க­ளைச் செய்­தேன். நல்லா விளைஞ்சு வந்­துச்சி... மார்­கழி மாசத்­துல அறு­வடை செஞ்­சுட்­டேன்’’ என்ற மரி­ய­புஷ்­பம், சிவப்பு சோள சாகு­ப­டிக்­காக நிலத்தை பண்­ப­டுத்­தி­யது பற்றி பாட­மா­கவே கூறி­னார்.

‘இது வானம் பார்த்த பூமி. மழையை நம்­பித்­தான் விவ­சா­யம். சித்­தி­ரை­யில் கோடை உழவு ஓட்­டி­விட்டு, நிலத்தை ஆற­விட வேண்­டும். வைகாசி மாதத்­தில் 300 ஆடு­களை வைத்து, நிலத்­தில் மூன்று நாட்­க­ளுக்கு கிடை போட­வேண்­டும். இத­னால், ஆடு­க­ளின் புழுக்கை மற்­றும் சிறு­நீர் இரண்­டும் நிலம் முழுக்க பரவி, நிலத்­துக்கு சத்து சேர்க்­கும். நான்­கா­வது நாள், கொக்கி உழவு ஓட்ட வேண்­டும். ஆடி மாதத்­தில் மழை பெய்­த­தும், ஒரு ஏக்­க­ருக்கு 300 கிலோ மண்­புழு உரத்­தைத் தூவி­விட்டு, கூடவே சோள விதை­க­ளை­யும் தூவி, கொக்கி உழவு ஓட்­ட­வேண்­டும் (தேவைப்­பட்­டால், குப்பை உரத்­தை­யும் அடி­யு­ர­மா­கக் கொடுக்­க­லாம்).

விதைத்த 5-ம் நாளில் முளைப்பு தெரி­யும். 30-ம் நாளில் முதல் களை எடுத்­து­விட்டு, மீண்­டும் 300 கிலோ மண்­புழு உரத்­தைத் தூவ­வேண்­டும். மழை  பெய்­யும்­போது தூவக்­கூ­டாது. அத­னால், வானிலை அறிக்­கை­களை தெரிந்து செயல்­பட வேண்­டும். புரட்­டாசி மாதம், அதா­வது 90-ம் நாளில் கதிர் வர ஆரம்­பிக்­கும். ஐப்­ப­சி­யில் பெய்­யும் மழை­யில் கதிர் முற்றி, பால் பிடிக்­கும். மார்­க­ழி­யில் அறு­வ­டைக்­குத் தயா­ரா­கி­வி­டும். 20 சென்ட் நிலத்­தில் போட்­டி­ருக்­கும் கேழ்­வ­ரகு மற்­றும் மூன்று ஏக்­கர் வரகு ஆகிய இரண்­டுக்­கும் சோளத்தை போல­வே­தான் சாகு­படி செய்ய வேண்­டும்’ சாகு­படி பாடம் முடித்த மரி­ய­புஷ்­பம்,  சிறு­தா­னி­யங்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் மிக முக்­கி­ய­மான விஷ­யமே, முழுக்க முழுக்க இயற்கை முறை­யில செய்தா... அதிக பரா­ம­ரிப்பு செய்­யத் தேவை­யில்­லைங்­கி­றது தான். இடு­பொ­ருள் செல­வும் பெருசா இருக் காது. இது ரெண்­டை­யும் அனு­ப­வப்­பூர்­வமா நான் உணர்ந்­தி­ருக்­கேன். அடுத்­த­டுத்த வரு­ஷங்­கள்ல இதை­வி­டக் கூடு­தலா மக­சூல் எடுப்­பேங்­கிற நம்­பிக்கை இருக்கு’’ என்­றார்.