ஆடை சொல்லும் சமிக்ஞைகள்...! – லட்சுமி

பதிவு செய்த நாள் : 31 ஆகஸ்ட் 2017

ஆடைகள் நம் வாழ்வின் ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கக் கூடிய ஒரு பொருள். அவை நம் உடலை குளிர், காற்று, சூரிய ஒளி மற்றும் மழை போன்றவற்றில் இருந்து பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. அது போல் நாம் விரும்பிய, நமக்கு தன்னம்பிக்கை அளிக்க கூடிய ஆடைகளை அணிவது என்பது நமது பண்புகளை அனைவருக்கும் அதன் மூலம் பறை சாற்றுவதற்கு ஈடாகும்.

பொது­வாக நாம் ஒரு ஆடையை தேர்ந்து எடுக்­கும் முன், அந்த ஆடைக்­கு­ரிய பலன்­களை அல்­லது தீங்­கு­க­ளைப் பற்றி சிந்­தித்­துப் பார்ப்­பது பற்றி நாம் ஒரு­போ­தும் நினைப்­ப­தில்லை. சிலர் நல்ல இறுக்­க­மான ஆடையை அணி­ப­வ­ராக இருப்­பார்­கள், சிலர் மிக­வும் தளர்­வான ஆடை­களை அணிந்து இருப்­பார்­கள்.  உங்­க­ளின் குணா­தி­ச­யத்­திற்­கும் உடை தேர்­விற்­கும் சம்­பந்­தம் உள்­ளது தெரி­யுமா?  அதிக இறுக்­க­மான ஆடை­கள் நம் மன­திற்கு இறுக்­க­மாக/இடைஞ்­ச­லாக இருக்­கும், நாம் எந்­தப் பணி­யில் இருந்­தா­லும் அதில் முழு கவ­னம் செலுத்த முடி­யாது.

இங்கே நாம் பணி என்று குறிப்­பி­டு­வது நாம் வேலையை மட்­டும் அல்ல, ஒரு நண்­ப­ரு­டன் பேசிக்­கொண்டு ஒரு திரைப்­ப­டம் பார்க்­கை­யில் அல்­லது வேறு ஏதா­வது ஒரு வேலை செய்­கை­யில் நம்மை அறி­யா­மல் நமக்கு ஒரு இறுக்­க­மான மன நிலை உரு­வாகி இருக்­கும். மிக­வும் தளர்­வான ஆடை­களை அணிந்­தால் அது நம்மை மற்­ற­வர் முன் நல்ல வித­மாக காட்­டாது. ஆகவே துணி­களை தேர்வு செய்­வ­தின் பின்­னால் உள்ள அவ­சி­யத்தை புரிந்து கொள்­ள­லாம்.

உல­கில் உள்ள ஒவ்­வொரு சமூ­கத்­திற்­கும் ஆடை­களை பற்றி சில கோட்­பா­டு­கள் இருக்­கும். உதா­ர­ணத்­திற்கு, இந்து தர்­மத்­தில் கூட சில கோட்­பா­டு­கள் உள்­ளன. அதன் பரிந்­து­ரைத்­த­படி ஆடை­கள் அணி­வ­தால் வளி­மண்­ட­லத்­தில் இருந்து தெய்­வீக சக்­தி­களை ஊடு­ருவ உத­வு­கி­றது என்­றும், மேலும் எதிர்­மறை ஆற்­றல்­க­ளின் தாக்­கு­தல்­க­ளுக்கு எதி­ராக நம்மை பாது­காக்­கி­றது என்­றும் நம்­பப் படு­கி­றது.

உள­வி­யல் ரீதி­யாக பார்த்­தால், ஒரு தனி நபர் தமது குணா­தி­ச­யத்­தின்­படி துணி­க­ளைத் தேர்ந்­தெ­டுக்­கி­றார். நமது சமூ­கத்­தில் நல்ல சுத்­த­மான ஆடை­களை அணி­ப­வர்­களை நல்ல எண்­ணம் கொண்ட, மன­சாட்­சிக்கு பயந்­த­வ­ராக பார்க்­கப் படு­கி­றது. ஒரு கசங்­கிய, அசுத்­த­மான உடை­களை உடுத்­து­ப­வர்­களை சோம்­பே­றி­க­ளா­க­வும், கவ­னக் குறைவு உள்­ள­வர்­க­ளா­க­வும் பார்க்­கப் படு­கி­றது. உதா­ர­ணத்­திற்கு, ஒரு வேலை நேர்க்­கா­ண­லுக்கு, நேர்த்­தி­யான மற்­றும் சலவை செய்­யப் பட்ட ஆடை­கள் அணிந்து வரு­ப­வர்­கள், அவர் அணிந்து இருக்­கும் ஆடை மூலம் ஒழுக்­கம் மற்­றும் நம்­ப­கத் தன்மை கொண்ட எண்­ணங்­களை காட்ட முயல்­வார்­கள். நாம் புது ஆடை உடுத்­து­கை­யில் இயல்­பாக மகிழ்ச்சி அடை­கி­றோம். ஆனால் சில கார­ணங்­க­ளுக்­காக நாம் ஒரு பழைய, அழுக்­கான ஆடையை அணிய நிர்­பந்­திக்­கப் பட்­டால் அது நமக்கு சங்­கட படுத்­த­தும் மனோ நிலைக்கு கொண்டு செல்­கி­றது.

ஒரு மனி­த­னின் மனதை அவன் உடுத்­தும் ஆடை­கள் எவ்­வாறு ஆட்­டிப் படைக்­கி­றது என்­பதை இதன் மூலம் அறி­ய­லாம். “ஆர்­தர் ஆண்­டர்­சன்” எனும் ஒரு இங்­கி­லாந்து நிறு­வ­னம் இது தொடர்­பான ஆய்­வில் ஈடு­பட்டு, அந்த ஆய்­வின் முடிவை அடிப்­ப­டை­யாக கொண்டு அந்த நிறு­வ­னத்­தின் ஊழி­யர்­க­ளின் ஆடை­ளில் ஒரு மாற்­றம் கொண்டு வந்­தது. இந்த மாற்­றத்­தைத் தொடர்ந்து அந்த நிறு­வ­னத்­தில் வேலை செய்­ப­வர்­க­ளின் மன­தில் தாம் செய்­யும் வேளை­யில் பெரு­ம­ளவு திருப்தி அடைந்த தாக கூறி இருக்­கி­றார்­கள்.

மேலும் அவர்­க­ளுக்கு அளிக்­கப் பட்ட ஆடை­களை உடுத்த ஆரம்­பித்த பின்­னால் அவர்­க­ளால் மிக அதி­க­மான உற்­பத்தி திறனை கொடுக்க முடிந்­தது. ஒரு சிறு ஆடை மாற்­றத்­தால் ஒரு மிகப் பெரிய அள­வில் உற்­பத்தி திறனை அதி­க­ரிக்க முடி­யும் என்­றால், நாம் ஆடையை தேர்வு செய்­வ­தில் எவ்­வ­ளவு கவ­ன­மாக இருக்க வேண்­டும் என்று பாருங்­கள்.