கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி – 15’ 31-–8–17

பதிவு செய்த நாள் : 31 ஆகஸ்ட் 2017

ஆங்கிலம் ஒரு ‘ரெயின்போ’ அதன் பல வண்ணங்களைக் காண்போம்!

‘நான் அங்கு போகி­றேன்’ என்று சொல்­வது சரி.

‘நான் அங்கு போகி­றான்’ என்று சொல்­வது சரி­யா­குமா?

ஆகாது அல்­லவா? ‘போகி­றான்’ என்­பது ‘அவன் அங்கு போகி­றான்’ என்­ப­தோடு தான் ஒத்­துப்­போ­கும்.

தமி­ழில் சொற்­க­ளுக்கு இடையே உள்ள இது­போன்ற பரஸ்­பர இணைவு, வேறு பல மொழி­க­ளி­லும் உண்டு. ஆங்­கி­லத்­தி­லும் உண்டு. இந்த எடுத்­துக்­காட்டு வாக்­கி­யங்­க­ளைக் கவ­னி­யுங்­கள்.

எனக்கு தேநீர் பிடிக்­கும். ‘ஐ லைக் டீ’. (I like tea)

எங்­க­ளுக்­குத் தேநீர் பிடிக்­கும். ‘வீ லைக் டீ’. (We like tea)

உனக்­குத் தேநீர் பிடிக்­கும் ‘யூ லைக் டீ’. (You like tea)

அவ­னுக்­குத் தேநீர் பிடிக்­கும், ‘ஹி லைக்ஸ் டீ’. (He likes tea)

அவ­ளுக்­குத் தேநீர் பிடிக்­கும். ‘ஷி லைக்ஸ் டீ. (She likes tea)

அவர்­க­ளுக்கு தேநீர் பிடிக்­கும். ‘தே லைக் டீ’ (They like tea)

மேற்­படி உதா­ர­ணங்­க­ளில், லைக் (like) என்ற வினைச்­சொல், அத­னு­டன் இணைந்து வரும் பெயர்ச்­சொல் (இந்த இடத்­தில் ‘ஹி’, ‘ஷி’ என்ற பிர­திப்­பெ­யர்­சொற்­கள்…’Pronouns’ such as ‘he’ and ‘she’), வரும் போது மாறு­வதை கவ­னி­யுங்­கள்.

‘த ஷாப் ஓபன்ஸ் ஆட் 10 ஏ.எம்’. (The shop opens at 10 a.m.) (கடை காலை பத்து மணிக்கு திறக்­கி­றது).

‘த ஷாப்ஸ் ஓபன் ஆட் 10 ஏ.எம்’. (The shops open at 10 a.m.) (கடை­கள் காலை பத்து மணிக்கு திறக்­கின்­றன)

‘கடை திறக்­கி­றது’, ‘கடை­கள் திறக்­கின்­றன’ என்­பது போல, ஷாப் ஓபன்ஸ், ‘ஷாப்ஸ் ஓபன்’  ‘Shop opens’, Shops open’.

‘அ கார் இஸ் ஸடான்­டிங் ஆட் த கார்­னர்’ (A car is standing at the corner) (ஒரு கார் தெரு முனை­யில் நின்­று­கொண்­டி­ருக்­கி­றது)

‘டூ கார்ஸ் ஆர் ஸ்டான்­டிங் ஆட் த கார்­னர்’. (Two cars are standing at the corner) (இரண்டு கார்­கள் தெரு முனை­யில் நின்­று­கொண்­டி­ருக்­கின்­றன)

கார் நின்­று­கொண்­டி­ருக்­கி­றது, இரு கார்­கள் நின்­று­கொண்­டி­ருக்­கின்­றன என்ற மாறு­ப­டு­கின்ற வாக்­கி­யங்­க­ளைப்­போல், A car is standing, Cars are standing.

இதே வகை­யில் நாம் ஏற்­க­னவே பார்த்த எளிய வாக்­கி­யங்­கள் எப்­படி மாறி வரு­கின்­றன என்­பதை சில உதா­ர­ணங்­க­ளில் பார்ப்­போம்.

நான் போக விரும்­பு­கி­றேன். ‘ஐ வான்ட் டு கோ’. (I want to go).

நாங்­கள் போக விரும்­பு­கி­றோம். ‘வீ வான்ட் டு கோ’. (We want to go).

நீ போக விரும்­பு­கி­றாய். ‘யூ வான்ட் டு கோ’. (You want to go).

நீங்­கள் போக விரும்­பு­கி­றீ­கள்’. ‘யூ வான்ட் டு கோ’. (You (plural) want to go).

அவன் போக விரும்­பு­கி­றான்’. ‘ஹி வான்ட்ஸ் டு கோ’ (He wants to go’.

அவள் போக விரும்­பு­கி­றாள். ‘ஷி வான்ட்ஸ் டு கோ’ (She wants to go).

அவர்­கள் போக விரும்­பு­கி­றார்­கள். ‘தே வான்ட் டு கோ’ (They want to go).

நாம் இது வரை எதிர்­கொண்ட பல வாக்­கி­யங்­களை, நீங்­கள் இதே அமைப்­பில் வைத்­துப் பார்க்க வேண்­டும். (உதா­ர­ணத்­திற்கு / ஐ லைக் இட் / வீ லைக் இட் / யூ லைக் இட் / ஹி லைக்ஸ் இட் / ஷி லைக்ஸ் இட் / தே லைக் இட் )…இத்­யாதி.

மனி­தர்­கள் மன­தில் எழும் நூறு வித­மான எண்­ணங்­க­ளுக்­குப் பற்­பல  வண்­ணங்­கள் உண்டு. அந்த வண்­ணங்­களை எல்­லாம் வெளிப்­ப­டுத்­தும் தூரி­கை­யும் வண்­ணச்­சா­யங்­க­ளும் ஆங்­கி­லத்­தில் உண்டு !

 ‘த ஸ்கை இஸ் புளு’. The sky is blue. வானம் நீல­மாக இருக்­கி­றது. (ஒரே வானம் தான் இருக்­கி­றது. அத­னால் அதற்கு முன், ‘The’ வரு­கி­ற­து…’த’ வரும் இடங்­க­ளைத் தனிப்­பா­டத்­தில் பார்ப்­போம்).

‘லீவ்ஸ் ஆர் கீரின் இன் கலர்’. Leaves are green in colour. இலை­கள் பச்சை நிறத்­தில் உள்­ளன.

‘த ரைன்போ ஹாஸ் ஸெவென் கலர்ஸ்’. The rainbow has seven colours. வான­வில் ஏழு நிறங்­கள் கொண்­டி­ருக்­கி­றது.

நம் மாநி­லத்­தில், ‘சிலர் கறுப்­பாக இருக்­கி­றார்­கள்’…­அ­தா­வது கறுப்பு நிறத்­தில் உள்­ளார்­கள். ‘வெகு சிலர் வெள்­ளை­யாக உள்­ளார்­கள்’.  ‘பலர் மாநி­ற­மாக உள்­ளார்­கள்’. ஸம் ஆர் டார்க் இன் காம்­பி­ளெ­க்ஷன். அ பியூ ஆர் பேர் இன் காம்­பி­ளெ­க்ஷன். மேனி ஆர் ஆப் மீடி­யம் காம்­பி­ளெ­க்ஷன். In our State, some are dark in complexion. A few are fair in complexion. Many are of medium complexion. (complexion = நிறம்) (உச்­ச­ரிப்பு / காம் +பிளெக்+ ஷன்)

‘பிளட் இஸ் ரெட் இன் கலர்’. Blood is red in colour. ரத்­தம் சிவப்பு நிறத்­தில் உள்­ளது. (இங்கு, ஆங்­கில வாக்­கி­யங்­க­ளு­டன் ஒத்­துப்­போக வேண்­டும் என்­ப­தற்­காக தமிழ் வாக்­கி­யங்­க­ளின் சொற்­களை அமைக்­கி­றேன். நேரா­கத் தமி­ழில் எழு­த­வேண்­டும் என்­றால், ரத்­தம் சிவப்­பாக இருக்­கி­றது, ரத்­தம் சிவப்பு என்று எழு­து­வேன்)

‘ரோஸஸ் கம் இன் மேனி கலர்ஸ்’, Roses come in many colours.ரோஜா மலர்­கள் பல நிறங்­க­ளில் வரு­கின்­றன.

தேர் ஆர் பிங்க் ரோஸஸ், ரெட் ரோஸஸ், யெல்லோ ரோஸஸ், வைட் ரோஸஸ் அண்ட் ஈவென் பிளாக் ரோஸஸ். There are pink roses, red roses, yellow roses, white roses and even black roses.

பிங்க் ரோஜாக்­கள், சிகப்பு ரோஜாக்­கள், மஞ்­சள் ரோஜாக்­கள், வெள்ளை ரோஜாக்­கள், ஏன் கறுப்பு ரோஜாக்­கள் கூட உள்­ளன என்­ப­து­தான் வாக்­கி­யத்­தின் பொருள்.

(‘There’ தேர் = ‘அங்கே’ என்ற பொரு­ளைச் சாதா­ர­ண­மா­கக்­கொண்ட சொல்,  இப்­படி வாக்­கி­யத்­தின் தொட­கத்­தில் வரு­கிற ஒரு சிறப்பு அமைப்பு ஆங்­கி­லத்­தில் இருக்­கி­றது). ‘Are’ (ஆர்) என்­ப­தோடு இணைந்து ‘There’ என்ற சொல், ‘உள்­ளன’ என்ற பொருள் தரும் வகை­யில் வாக்­கி­யத்­தின் ஆரம்­பத்­தில் அமைந்­தி­ருக்­கி­றது.

‘There’ என்ற சொல்­லு­டன் தொடங்­கும் இத்­த­கைய வாக்­கி­யங்­கள் மாறு­பட்ட அமைப்­பு­கொண்­டவை. அந்த அமைப்பு, எளி­மை­யாக சில விஷ­யங்­க­ளைச் சொல்ல நமக்கு எப்­ப­டிப் பயன்­ப­டு­கி­றது என்­பதை அடுத்த வாரம் காண்­போம்.

-– தொடரும்

...vamanan81@gmail.com

vamananinsight.blogspot.in