பிசினஸ்: கணவனும் மனைவியும் இணைந்து தொழில் நடத்துவதற்கான சூட்சுமங்கள்... – ஞானசேகர்

பதிவு செய்த நாள் : 31 ஆகஸ்ட் 2017
சுய­தொ­ழில் பற்­றிய கருத்­த­ரங்­கு­க­ளில் பெரு­ம­ள­வில் கேட்­கப்­ப­டும் ஒரு கேள்வி இது. கண­வன், -மனைவி இரு­வ­ரும் சேர்ந்து தொழில் செய்­ய­லாமா? அதன் சாதக பாத­கங்­கள் என்ன? சார், என் மனைவி வீட்­டுல சும்மா சீரி­யல் பார்த்­துக்­கிட்­டி­ருக்­காங்க, அவ­ளுக்கு ஏதா­வது தொழில் கத்­துக்­கொ­டுங்க என்று சிலர் கேட்­டி­ருக்­கி­றார்­கள். பெண்­க­ளும் இதே போல் கேட்­டி­ருக்­கி­றார்­கள். நான் என் கண­வ­னோடு இணைந்து தொழில் தொடங்­க­வேண்­டுமா அல்­லது தனி­யா­கவே தொடங்­க­வேண்­டுமா?

தொழில் என்­பது என்னை பொறுத்­த­மட்­டில் பெரு­ம­ளவு அறிவு சம்­பந்­தப்­பட்­டது. மனி­தர்­களை எடை­போ­ட­வும் சந்­தை­யைப் புரிந்­து­கொள்­ள­வும் முடி­வு­கள் எடுக்­க­வும் ஆற்­றல் படைத்­த­வர்­களே தொழி­லில் இறங்­க­வேண்­டும். குடும்­பம் என்­பது சற்று மாறு­பட்ட அமைப்பு. உற­வு­க­ளி­லும் உணர்­வு­க­ளி­லும் உண்மை இருந்­தால் போது­மா­னது. புத்­தி­பூர்­வ­மான அணு­கு­முறை பல சம­யங்­க­ளில் குடும்­பச் சூழலை இயந்­தி­ரத்­த­ன­மாக மாற்­றி­வி­டும் அபா­ய­மும் உண்டு.

சமீ­பத்­தில் பத்­தி­ரி­கை­யில் படித்த ஒரு வாச­கம் நினை­வுக்கு வரு­கி­றது. அதி­க­மான குறை­களை மட்­டுமே சுட்­டிக் காட்­டும் மனை­வி­யும், அதி­க­மாக நிறை­களை மட்­டுமே சுட்­டிக் காட்­டும் நட்­பும், ஒரு­வனை என்­றுமே உயர்த்­து­வ­தில்லை. தொழி­லென்று வரும்­போது, கண­வனோ மனை­வியோ தங்­க­ளது பலம் அல்­லது பல­வீ­னம் இரண்­டை­யும் தெளி­வா­கத் தெரிந்து கொள்­ள­வேண்­டும்.

தொழிலை வழி நடத்­திச் செல்­லும் திறமை யாருக்கு அதி­கம் என்­பதை முத­லில் கண்­ட­றி­ய­வேண்­டும். தலை­மைப் பண்பு அதி­க­முள்ள அந்த நபரை இன்­னொ­ரு­வர் ஏற்று அங்­கீ­க­ரிக்­க­வேண்­டும். இதில் ஆண், பெண் பேதம் கிடை­யாது. ஒரு­வேளை,  மனைவி தலை­மேற்­கும் பட்­சத்­தில், அவரை முன்­னி­லைப்­ப­டுத்தி தொழி­லைக் கொண்டு போவ­தில் கண­வ­னுக்கு எந்­த­வித ஈகோ­வும் இருக்­கக்­கூ­டாது. நட்­பு­ணர்­வு­ட­னும் ஆழ்ந்த புரி­த­லு­ட­னும் இரு­வ­ரும் ஒன்­றி­ணைந்து இயங்­க­வேண்­டும். அவ்­வாறு நிகழ்ந்­தால் அங்கே தொழில் வளர்ச்சி  பெரு­கும்.

தொழில் நிமித்­த­மா­கத் தவ­று­கள் ஏற்­பட வாய்ப்­புண்டு. அத்­த­கைய சம­யங்­க­ளில் கண­வன், மனைவி இரு­வ­ரும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் அனு­ச­ர­ணை­யாக இருக்­க­வேண்­டி­யது அவ­சி­யம். ஒவ்­வொரு தொழி­லும், தட்­ப­வெப்ப மாறு­தல்­க­ளைப் போல் மாறு­த­லுக்கு உட்­பட்­டதே. வள­மை­யான வசந்த காலங்­க­ளில் லாபத்தை அனு­ப­விக்­க­வும் தொழில் நலி­வ­டை­யும் சம­யங்­க­ளில், அந்­தத் துன்­பத்தை கட்­டுக்­குள் வைத்­தி­ருக்­க­வும் இரு­வ­ருக்­கும் தெரிந்­தி­ருக்­க­வேண்­டும்.

பெரும்­பா­லும் கண­வன்-, மனைவி இரு­வ­ரும் சேர்ந்து செய்­யும் தொழில்­க­ளில் தொழில் வளர்­வதை விட, குடும்­பச் சூழ­லில் நிம்­மதி பறி­போ­வ­து­தான் அடிக்­கடி நடந்­து­வி­டு­கி­றது. இதற்கு தொழில் கார­ண­மல்ல. சமூ­கத்­தின் ஆண் பெண் கண்­ணோட்­டமே கார­ணம்.

பொது­வாக, பெண்­க­ளின் திற­மை­களை மனம் திறந்து பாராட்ட முன்­வ­ரும் ஆண் வர்க்­கம், தன் மனைவி என்று வரும்­பொ­ழுது, பெண்­க­ளின் புத்­திக்­கூர்­மையை ஏற்­றுக்­கொள்ள மறுக்­கி­றது. ஆணின் கருத்­துக்கு, வீட்­டில் பெண் மறுப்­ப­ளித்­தால் அது அவ­ளு­டைய ஆண­வ­மா­கவே புரிந்­து­கொள்­ளப்­ப­டு­கி­றது.

பெண்­க­ளும் பெரும்­பா­லும் இரண்டு நிலை­க­ளில் செயல்­ப­டு­கின்­ற­னர். அதி­கம் அடங்­கி­போ­வது அல்­லது அதி­கம் அடக்­கப் பார்ப்­பது. இரண்­டில் இருந்­தும் விடு­பட்டு, அவ­ர­வ­ருக்­கு­ரிய இடத்­தில் இருந்­து­கொண்டு அடுத்­த­வரை மதிக்­கக் கற்­றுக் கொள்­ளும்­போ­து­தான் வாழ்க்கை அமை­தி­யா­கச் செல்­லும்.

கண­வன், மனைவி இரு­வ­ருமே அறி­வு­கூர்­மை­யில் ஒன்­றாக இருக்­கும் பட்­சத்­தில், தொழில்­க­ளைத் தனித்­த­னி­யாக செய்­வ­தில் தவ­றில்லை. ஆண், பெண் என்ற பாகு­பாட்டை மறந்து, தொழில் என்று வரும்­போது, ஒரு­வர் மற்­ற­வ­ரின் கருத்­து­களை ஏற்­றுக்­கொள்­ளும் பக்­கு­வத்­தைப் பெற­வேண்­டும். ஒரு தொழி­லுக்கு பல திற­மை­யா­ளர்­கள் தேவைப்­ப­ட­லாம். ஆனால் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டும் நபர் ஒரு­வ­ராக இருப்­பது நலம்.

பொது­வாக பணம் என்று வரும்­பொ­ழுது, பெண்­கள் அதி­க­பட்ச பாது­காப்பை மன­தில் கொண்டு செயல்­ப­டு­வர். ஆண்­களோ அது சாம்­ராஜ்­ஜி­ய­மாக விரி­வ­டை­வ­தில் அதி­க­மா­கக் கவ­னம் செலுத்­து­வார்­கள். பெண்­கள் தொழில் செய்­வ­தில் பெரும்­பா­லா­லும் ஒரு நேர்த்தி, ஒழுங்கு முறை இருக்­கும். ஆனால் பிரம்­மாண்­டங்­களை அவ்­வ­ளவு எளி­தில் அடைய மாட்­டார்­கள்.
இதற்கு விதி­வி­லக்­கு­க­ளும் இருக்­க­லாம். பிரம்­மாண்­டத்தை உரு­வாக்­கும் திறமை இருப்­பி­னும், பெண்­கள் பொது­வாக சிறிது அடக்கி வாசிக்­கும் மனோ­பா­வத்தை உடை­ய­வர்­க­ளாக இருப்­பர். ஆண்­களோ இதற்கு முற்­றி­லும் வேறாக, தொழில் சாம்­ராஜ்­ஜி­யங்­களை நிறு­வு­வ­தில் அதிக ஆர்­வம் காட்­டு­வர். மனை­விக்கு கண­வ­னைப் போல் சிறந்த பிசி­னஸ் பார்ட்­னர் கிடைப்­பது அரிது. அதே­போல் கண­வ­னுக்­கும் நேர்­மை­யான தொழில் பங்­கா­ளர் அமை­வது அரிது.

எம்.எஸ். சுப்­பு­லட்­சு­மி­யின் திற­மை­யைக் கண்டு அவரை ஊக்­கு­வித்து, உல­கப் பாட­கி­யாக்­கிய பெருமை அவ­ரது கண­வர் சதா­சி­வம் அவர்­க­ளையே சாரும். இன்­றும் சுதா ரகு­நா­தன், நளினி சிதம்­ப­ரம், சுகா­சினி மணி­ரத்­தி­னம், ஐஸ்­வர்­யா­ராய் பச்­சன், வாணி ஜெய­ராம் போன்­றோர் உள்­ள­னர். பெண்­களை முடக்­கா­மல், அவர்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி, ஊக்­கு­விக்­கும் பெருந்­தன்மை இருக்­கும்­பொ­ழுது, பெண்­கள் சாத­னை­யா­ளர்­க­ளாக வர முடி­யும்.

குடும்ப வேலை­கள் என்று வரும் பொழுது, சமை­யல், குழந்தை பரா­ம­ரிப்பு, பெரி­ய­வர்­க­ளைப் பார்த்­துக் கொள்­ளு­தல் என்று பல­வற்­றி­லும், ஆண் இறங்கி வந்து வேலை­களை சம­மாக பங்­கிட்­டுக் கொள்­ளும் போது­தான், பெண் பதட்­ட­மின்றி வெளி வேலை­க­ளைக் கவ­னிக்க முடி­யும். ஆனால் ஆண்­க­ளில் ஒரு பிரி­வி­னர், ‘நான்  வெளி­யில் போவ­தைத் தடுக்­க­வில்­லையே, மேலே படிப்­ப­தைத் தடை செய்­ய­வில்­லையே, வேலைக்­குப் போவதை மறுக்­க­வில்­லையே, நானும் சுதந்­த­ரம் கொடுத்­து­தான் இருக்­கி­றேன்’ என்று சொல்­வார்­கள்.

ஆனால் இவர்­கள் பெண்­க­ளி­டம் ஓர் அஸ்­தி­ரத்­தைப் பிர­யோ­கிப்­பார்­கள். ‘நீ காலை­யில் எழுந்து எல்லா வீட்டு வேலை, சமை­யல் இன்­னும் பிற வேலை­கள், குழந்­தை­கள் பரா­ம­ரிப்பு, சில்­லரை வேலை­கள் எல்­லா­வற்­றை­யும் முடித்­துக் கொண்டு, மாலை இரவு மெனு­வரை  பிளான் செய்­த ­பின்­னர், என்ன வேண்­டு­மென்­றா­லும் செய்து கொள்!’

இதை சொல்­வது ஆண்­க­ளுக்கு எளி­தா­னது. ஆனால் நடை­மு­றை­யில் பெண்­கள் அனைத்து வேலை­க­ளை­யும் இழுத்­துப் போட்­டுக் கொண்டு செய்­யும்­பொ­ழுது உட­ல­ள­வி­லும் மன­ரீ­தி­யி­லும் எளி­தில் பல­மி­ழந்­து­வி­டு­கின்­ற­னர். அதற்­கு­மேல் தொழில், வேலை போன்­ற­வற்­றில் சுமையை ஏற்­றுக்­கொள்­ளும்­பொ­ழுது அதிக மன உளைச்­ச­லுக்கு ஆளா­கின்­ற­னர்.

இதற்கு மாறாக குடும்­பப் பொறுப்­பு­களை சரி­ச­ம­மா­கப் பகிர்ந்து கொண்டு, குழந்தை பரா­ம­ரிப்­ப­தில் தங்­களை ஈடு­ப­டுத்­திக்­கொண்டு, ஆண்­கள், பெண்­களை முன்­னேற்­றி­னால் அதிக அளவு தொழில் மாற்­றங்­கள் ஏற்­ப­டு­மென்­ப­தில் சந்­தே­க­மில்லை. கண­வன் மனைவி இவர்­க­ளுக்கு மட்­டும் இவை பொருந்­தும் என்­ப­தில்லை. குடும்ப உற­வி­ன­ருக்­கி­டையே நடக்­கும் எந்­தத் தொழி­லி­லும் மற்ற குடும்ப உறுப்­பி­னர்­க­ளின் ஒத்­து­ழைப்பு மிக அவ­சி­யம்.

இசை உல­கில் கொடி கட்­டிப் பறக்­கும் இரட்­டை­யர்­க­ளான ஹைத­ரா­பாத் சகோ­த­ரர்­கள், பிரியா சகோ­த­ரி­கள், கணேஷ் கும­ரேஷ் போன்ற பல­ரும், சுருதி பிச­கா­மல் ஒன்­றி­ணைந்து இசையை வெளிப்­ப­டுத்­தும் பொழுது, அது அதிக பட்ச உத்­வே­கத்­தோடு, திற­மை­கள் உயர்ந்து வெளிப்­ப­டு­கின்­றன என்­பதே உண்மை. சுருதி பிச­காத இசை­யைப் போல் லாபம் குன்­றாத தொழி­லும் ஒன்­றி­ணைந்து இயங்­கு­தல் என்­பது மிக அவ­சி­யம்.

ஆலோசனைக்கு...!

93807-–55629