ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 30–8–17

பதிவு செய்த நாள் : 30 ஆகஸ்ட் 2017

கதாநாயகிக்கு மறுஜென்மம்!

(சென்ற வார தொடர்ச்சி...)

'ப்ரியா' பற்றி சுஜாதா கூறு­கி­றார்...

''1975ல் நான் லண்­டன், ஜெர்­மனி இரண்டு தேசங்­க­ளுக்கு போய் இரண்டு மாதம் கழித்து திரும்பி வந்­த­தும் லண்­ட­னில் நடப்­பது போல் ஒரு தொடர்­கதை எழு­தட்­டுமா என்று எஸ்.ஏ.பியை கேட்­ட­போது அவர் உடனே சம்­ம­தித்­தார்.  அந்த கதை ‘ப்ரியா’.

ஒரு சினிமா நடிகை படப்­பி­டிப்­புக்­காக லண்­டன் போகி­றாள்.  அவ­ளு­டன் அவள் காத­ல­னும் போகி­றான் என்று தெரிந்து கொண்ட, அவ­ளது கண்­டிப்­பான கார்­டி­யன், லாயர்  கணே­ஷை­யும் அவளை கண்­கா­ணிக்க உடன் அனுப்­பு­கி­றார்.

‘‘குமு­தம்’ வார இத­ழில் வெளி­யான ஒரு பர­ப­ரப்­பான தொடர். சுவா­ரஸ்­ய­மான இந்த கதை­யின் பாதி­யில் கதா­நா­யகி இறந்து விடு­கி­றாள். சற்று அவ­ச­ர­மாக கொன்று விட்­டேனோ என்று தோன்­றி­யது.  குமு­தம் ஆசி­ரி­யர்  எஸ்.ஏ. பி. போன் செய்து அவ­ளுக்கு எப்­ப­டி­யா­வது மறு ெஜன்­மம் கொடுத்து விடுங்­கள் என்­றும், குமு­தம் ஆசி­ரி­யர் குழு­வு­டன் ஆலோ­சித்து அதற்கு ஒரு வழி­யும் சொன்­னார்.

'ப்ரியா' புத்­த­க­மாக வந்­த­போது முதல் பதிப்­பில், ‘இந்­தக் கதையை ஒரு முக்­கி­ய­மான கட்­டத்­தில் திசை திருப்­பிய ஆசி­ரி­யர் எஸ்.ஏ. பி.க்கு’ என்று சமர்ப்­ப­ணம் செய்­தேன்.

‘ப்ரியா’ சினி­மா­வா­னது வேறு கூத்து.

Nothing succeeds like success என்­பார்­கள். ஒரு காலத்­தில் மக­ரிஷி, ஜெய­காந்­தன், அனு­ராதா ரம­ணன், சிவ­சங்­கரி, உமா­சந்­தி­ரன் போன்­ற­வர்­க­ளின் பத்­தி­ரிகை கதை­கள் சினி­மா­வில் வெற்றி கண்­டன. 'புவனா ஒரு கேள்­விக்­குறி', 'சில நேரங்­க­ளில் சில மனி­தர்­கள்', 'சிறை', '47 நாட்­கள்', 'முள்­ளும் மல­ரும்' போன்ற உதா­ர­ணங்­களை சொல்­ல­லாம்.  இப்­போது இந்த வழக்­கம் அறவே ஒழிந்­து­போய், கதை என்­கிற வஸ்து படம் பிடிக்­கும்­போது தான் தேவைப்­பட்­டால் பண்­ணப்­ப­டு­கி­றது.

பத்­தி­ரி­கை­க­ளிலோ நாவ­லா­கவோ வந்­ததை அப்­ப­டியே எடுக்­கி­றார்­களா என்­பது வேறு விஷ­யம். ஹெமிங்­வே­யி­டம் Farewell to Arms, For Whom the Bell Tolls போன்ற கதை­க­ளின் திரை­வ­டி­வத்­தைப் பற்றி கேட்­ட­போது ‘Take the money and run’ என்­றா­ராம். ‘ப்ரியா’ ஓர் உத்­தம உதா­ர­ணம்.

பஞ்சு அரு­ணா­ச­லம் அது தொடர்­க­தை­யாக வந்த போதே அதற்கு கர்­சீப் போட்டு வைத்­தி­ருந்­தார். கன்­ன­டம், தமிழ் இரண்டு மொழி­க­ளி­லும் எடுக்க பூஜை போட்­டார்­கள். ரஜி­னி­காந்த், ஸ்ரீதேவி, அம்­ப­ரீஷ் நடிக்க இளை­ய­ரா­ஜா­வின் இசை­யில் சில பாடல்­கள் இன்­றும் ஒலிக்­கின்­றன.

‘லண்­ட­னில் எல்­லாம் போய் எடுக்க முடி­யாது. மிஞ்­சிப்­போ­னால் சிங்­கப்­பூ­ரில் எடுக்­கி­றோம். அங்கே நீர்ச்­ச­றுக்­கல், டால்­பின் மீன்­கள் என்று அற்­பு­த­மான காட்­சி­கள் வைக்­க­லாம்’ என்­றார். லண்­டன், சிங்­கப்­பூ­ராக மாற்­றப்­பட்டு வெற்­றிப்­ப­ட­மாக ஓடி­யது.

இதெல்­லாம் என் கதை­யில் எங்கே வரு­கி­றது என்று கேட்­பதை முத­லி­லேயே நிறுத்தி விட்­டேன். சினிமா என்­பது மற்­றொரு பிராணி என்­பதை என் குறு­கிய கால சினிமா அனு­ப­வமே உணர்த்­தி­யி­ருந்­தது.

கதா­நா­யகி பாதி­யில் இறந்து போகக் கூடாது என்ற அதே விதி இதி­லும் கார­ணம் காட்­டப்­பட்­டது. ரஜி­னி­காந்த் இதில் கணே­ஷாக வந்து டூயட் எல்­லாம் பாடி­னார். சிங்­கப்­பூ­ரில் ராஜ­கு­மா­ரன் வேஷத்­தில் வந்­தார். பல மாடிக் கட்­டி­டங்­கள் முன் ‘ஓ ப்ரியா’ என்று பாட்டு பாடி­னார். பாஸ்­போர்ட் கிடைக்­கா­த­தால் வசந்த்­தாக நடித்த நோஞ்­சான் நடி­கர் உடன் வர­வில்லை.

அதன் துவக்க விழா­வில், முதல் காட்சி... சென்­டி­மென்ட்­டாக ஒரு பூகோள உருண்­டை­யைச் சுழற்றி  ‘உல­கத்தை ஜெயிச்­சுக் காட்­ட­றேன் பாரு’  என்று திரை­யில் வராத வச­னத்தை தனி­யாக ஒத்­திகை பார்த்து கொண்­டி­ருந்­தார்.

‘ப்ரியா’ படம் வெற்­றி­க­ர­மாக 110 நாள் ஓடி­ன­துக்கு எனக்கு டிராபி தந்­தார்­கள். இப்­போது கூட இதன் பின்­க­தை­யைச் சரி­யாக அறி­யா­த­வர்­கள், ‘என்னா ஸ்டோரி சார்; என்னா டய­லாக் சார்’ என்று சிலா­கிக்­கும்­போது எங்கோ நிறுத்­தா­மல் உறுத்­து­கி­றது.''

– தொடரும்